Skip to main content

கரும்பலகைக் கதைகள் புத்தகத்திற்கு மு.பா அவர்களின் பாராட்டுரை


       அன்பு நண்பர் பொறியாளர் புதுச்சேரி் அன்பழகன் அவர்களின் கரும்பலகைக் கதைகள் சிறுவர்களுக்கான நூல் படித்தேன்.
       மருத்துவராகவோ பொறியாளராகவோ வந்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு குழந்தைகளை கொடுமைப் படுத்தும் இந்த காலத்தில் அறிவை எவ்வாறு விளையாட்டாகப் பெறலாம் என்பதையும் அறிவியலை எப்படி ஆர்வத்தோடு எளிமையாக உரையாடல் மூலம் கற்கலாம் என்பதையும் நேர்த்தியான ஆசிரியர் மாணவர் உரையாடல் மூலம் கதையாக சொல்லியிருக்கிறார் 
       அன்பழகன்.மாணவர்கள் மத்தியில் ஒரு வினாவை எழுப்பி அவர்களுக்குள் தேடலை ூண்டி விடைகளைப் பெறும் அற்புதமான முயற்சியை இவர் செய்திருக்கிறார் .உப்பிட்டவரை உள்ளளவும் நினை எனப் பழமொழி சொல்லும் அந்த உப்பின் தேவையை உப்பின் கதையை மிக நீண்ட தேடலின் மூலம் பிஞ்சு உள்ளங்களுக்கும் பெரியவர்களுக்கும் சொல்லியிருக்கிறார்.
      துவைத்த துணி எப்படி காய்கிறது என்பதை எளிய சோதனை மூலம் உணர வைத்திருக்கிறார்.
     உலகம் முழுதும் எண் 13 கண்டு பயப்படும் காரணங்களை வரலாற்று நிகழவுகளோடு விளக்குகிறார்.
    குழல்விளக்கு குமரேசன் மூலம் குழல் விளக்கு எரிய ஏன் நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதையும் விளக்குவது சிறப்பு 
    உலகத்தை படைத்தது யாரு என்ற கதையில் கடவுள் ,தானே உறுவானது என்ற பதில்களோடு ஒரு சிறுமி இயற்கை தன்னைத்தானே படைத்துக் கொள்கிறது என்று பதில் சொல்லும்போது குழந்தைகள் எவ்வளவு அறிவாற்றல் மிகுந்தவர்கள் என்பதை உணரமுடிகிறது.இந்த மெக்காலே கல்வி முறை எப்படி அவர்களை மழுங்கடிக்கிறது என்பதை உணரமுடிகிறது.
     அன்பழகன் நல்ல அறிவியல் கதை சொல்லியாக மிளிர்கிறார் .ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளுக்கு இந்த புத்தகத்தை படித்து காட்டவேண்டும்.அவர்களும் அன்றாட அறிவியலை நோக்கிய தேடலுக்கு ஆயத்தமாகி தேடித் தேடி அறிந்து அறிவை வளர்த்துக்கொள்வார்கள்.வேலுமாமாவும் அறிவியல் அறிஞர் .வி .வெங்கடேசுவரனும் சிறப்பான அணிந்துரையை வழங்கியிருக்கிறார்கள்.

     இன்றைய மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவருக்குமான நூல்.
மேலும் படைக்க வாழ்த்துகள் அன்பழகன்
    அன்புடன், மு.பா, புதுச்சேரி.


கரும்பலகைக் கதைகள்
புதுச்சேரி அன்பழகன்
வெளியீடு :பாரதி புத்தகாலயம்



Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...