Skip to main content

Posts

Showing posts from July, 2020

வாழ்க்கைப் பெரியது

வாழ்க்கைப் பெரியது நான் மேல்நிலை இறுதித் தேர்வில் எனது சக மாணவர்களைவிட  குறைவான மதிப்பெண்களையே   பெற்றேன். ஆனால் மதிப்பெண்கள் எனது வாழ்க்கையை தீர்மானிப்பதை நான் விரும்பவில்லை. தற்போது ஐஏஸ் அதிகாரியாக பதவியில் உள்ளேன். மதிப்பெண்களைவிட வாழ்க்கை மிகவும் பெரியது.இதனை உணர்த்தவே எனது மதிப்பெண் பட்டியலை சமுக வலைத்தளத்தில் நான் வெளியிட்டேன்.- ---- நித்தின் சங்வான் ஐஏஸ் அதிகாரி.        தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்களுக்கு நம்பிக்கை  அளிக்க சரியான நேரத்தில் வழிகாட்டியுள்ளீர்கள்- உங்களுக்கு எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்.  

வாழ்வின் தெறிப்பு

       வாழ்வின் தெறிப்பு வி ஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்சியை ஒருநாள் பார்க்க நேர்ந்தது. அதில் பூவையார் என்ற சிறுவன் மிகச் சிறப்பாக பாடினான். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.      அதில் பூவையார் பற்றிய ஒரு குறும்படம் ஒளிபரப்பானது. அதில்   அவனின் தாய் கண்ணீரோடு அவன் அருகில் இருந்தாள். பூவையார் சிறுவனாக இருக்கும் போதே அவனின் தந்தையார் இறந்து விட்டார். அந்த குடிசை வீட்டில் தன் தாயின் சொற்ப வருமானத்தில் அவன் வாழ்க்கை நகர்கிறது. கானா பாட்டு பாடுபவர்களோடு ஆர்வம் ஏற்பட்டு அந்த குழுவில் சேர்ந்து பாட கற்றுக்கொள்கிறான். அவனது குரலில் ஒரு புதுமையும் ஈர்ப்பும் மிளிர்கிறது. இதனால் அவனும் பல கச்சேரிகளில் பாடி புகழ் பெறுகிறான். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்சியிலும் பங்கேற்று அனைவரது மனதையும் கவர்ந்து விட்டான். இப்படியாக அந்த குறும்படம் அவனின் எளிய வாழ்வை எடுத்துக் காட்டியது.      அப்போது அவனின் தாயிடம் ஒரு கேள்வி கேட்கிறார்கள். இந்த சின்ன வயதில் அவன் பாடி பணம் கொண்டு வருவது உங்களுக்கு எப்படி இருக்கிறது! ? “ அவனது தந்தை இல்லாத இடத்தை அவன் நிரப்புவதாக நான் நினைக்க வில்லை. எனது கஷ

புதிய வைரஸ்

புதிய வைரஸ்    மாணவன் நீலனை உடனே பார்த்து பேச வேண்டுமென ஆவலாய் இருந்தார் ஆசிரியர். அவனின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்கிறார். அவர் உடனே இந்தியாவிற்கு திரும்பி வருகிறார் என்று ஆசிரியர் கேள்வி பட்டார். தற்போது அவர் வேலை செய்யும் நாட்டில் புதியதாக ஒரு வைரஸ் நோய் (கொரொனா வைரஸ்) உருவாகி பரவி வருவதாக செய்தித் தாளில் படித்தார். அவர் நலமுடன் திரும்பி வந்தவுடன் அவரிடத்தில் அந்த புதிய வைரஸ் குறித்து பேச ஆவலாய் இருந்தார். இதோ மாணவன் நீலனே வந்து விட்டான். ஆசிரியர் அவனை அன்புடன் வரவேற்றார். மதியம் உணவு இடைவேளையில் வந்து சந்திக்குமாறு அவனை வேண்டினார். அவனும் வருவதாக அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு வகுப்பிற்கு சென்று விட்டான்.      மதிய உணவு இடைவேளையில் ஆசிரியர் அந்த புதிய வைரஸ் குறித்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்..      அந்த நாடு தம் மக்களைக் காப்பாற்ற எடுக்கும் நடவடிக்கைகளை கவனித்து வருகிறார். மக்களிடையே இந்த புதிய வைரஸ் நோய் விரைவாக பரவாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதிலும் மேற்கொண்டு இந்நோய் பரவாமல் இருக்க , புதியதாக ஆயிரம் படுக்கை வசதிகளோடு கொண்ட பெரிய மருத்துவமனையை சி