Skip to main content

Posts

Showing posts from December, 2018

ஓர் ஆசிரியனாகக் கதை சொல்லும் பொறியாளரை வரவேற்கிறேன்.

        கரும்பலகைக் கதைகள் புத்தகத்திற்கு முன்னுரை                      -வேலுமாமா,புதுச்சே ரி            தி கட்டாத நினைவுகளின் அதிசயப்   பெட்டகம் குழந்தைப் பருவம் . நினைக்க   நினைக்கத் தித்திக்கும் . இப்பருவத்தின் கற்பனைகளாலேயே இந்த உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது . அதோடு வயதில் முதிர்ந்தவர் என்று உலகில் யாரிருக்கிறார் ? உண்மைதான் . வயதில் முதிர்ந்தவர் என்று தேடினால் யார் நம் முன்னே வருவார்கள் . அரிஸ்டாட்டிலா , கலிலீயோவா , , நியூட்டனா , புத்தரா , காந்தியடிகளா   யாரைச் சொல்வது . இன்று உலகின் மிகமிக வயது முதிர்ந்த ஜப்பானிய மூதாட்டி சியாமியாக்கோ(117வயது) கூட ஒரு பச்சிளம் சிறுமியாய்ச் சிரிக்கிறார் .                 உலகின் ஒப்பற்ற மனிதர்களை   நினைத்தாலே அவர்களின் கற்பனையும் ஆற்றலும் நிறைந்த அவர்களின் குழந்தைப் பருவமே முன்னெழுகிறது . அவர்கள் படைத்த அதிசயங்களின் இரகசியங்கள் அவர்கள் குழந்தைகளாய் இருந்த போதே உருவாகியிருக்கின்றன . குழந்தைப் பருவ அட்டகாச அனுபவங்களை கல்வியோடு இணைத்துவிட்டால் உலகில் எண்ணிலா