Skip to main content

Posts

Showing posts from September, 2019

எது நல்ல உப்பு?

இ ரண்டு இட்லி கொண்டு வரச்சொல்லிவிட்டு அந்த உணவகத்தில் காத்திருந்தேன். அப்பொழுது எனது எதிரே ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் ஆறுமுகம் ஆசிரியர் என்பதை உடனடியாக அடையாளம் தெரிந்துகொண்டு ‘வணக்கம் ஐயா’! என்றேன். அவரும் என்னை உற்றுக் கவனித்து, அடடே தமிழ்ச்செல்வனா! என்றபடியே எனது கையைப் பிடித்து குலுக்கினார். அவர் எனக்கு பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியராக இருந்தவர். அவரோடு உணவருந்தி கொண்டே பேசுகிற இந்த பொன்னான வாய்ப்பை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது. ஏனெனில் அவர் எப்பொழுதும் வகுப்பறையைத் தாண்டி பல புதிய செய்திகளை அறிவியல் வழியில் பேசக்கூடியவர். அவருக்கும் சேர்த்து இட்லி கொண்டுவரச் சொல்லிவிட்டு ஆறுமுகம் ஆசிரியரோடு பேச ஆரம்பித்துவிட்டேன். இருவரும் நலம் விசாரித்து கொண்ட பிறகு, பிரபலமான அந்த உணவகத்தின் ருசி பற்றிய பேச்சு வந்தது. “ருசி எல்லாம் சரிதான், ஆனால் உப்பின் சுவைதான் இங்கு கூடுதலாக இருக்கும்”.என்றேன் நான். ஆமாம் நானும் இங்கு பலமுறைச் சாப்பிட்டிருக்கிறேன். இங்கு மட்டுமல்ல பொதுவாக உணவகங்களில் உப்பு சற்று கூடுதலாகத்தான் இருக்கிறது. இந்த சுவை எப்பொழுது

குழல்விளக்கு குமரேசன்

ச க மாணவர்கள் அனைவரும் குமரேசனை ‘குழல்விளக்கு குமரேசன்’ என்றுதான் அழைப்பார்கள். எந்த கேள்வி கேட்டாலும் அவனால் சட்டென பதில்சொல்லமுடியாது, சற்று தாமதமாகத்தான் பதில் வரும். முன்பெல்லாம் மாணவர்கள் அவனை ‘டியூப்லைட்’ என்றுதான் அழைத்தார்கள். தமிழாசிரியர்தான் ‘குழல்விளக்கு குமரேசன்’ என தமிழ்படுத்தினார். தற்போது ‘கு.கு’ என்று சுறுக்கமாக  அழைக்கத்தொடங்கிவிட்டார்கள். குமரேசன் இதற்கெல்லாம் வேதனைப்படுகிற மாணவன் அல்ல.ஆனால் இதை எப்படி எதிர்கொள்வது என சிந்திக்க ஆரம்பித்துவிட்டான். ஒருநாள் அறிவியல் ஆசிரியர் அங்கமுத்து பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, அந்த வகுப்பறையிலிருந்த குழல்விளக்கு விட்டுவிட்டு எரிந்துகொண்டிருந்தது. உடனே எல்லோரும் குமரேசனைப் பார்த்து, ‘கு.கு உன்னைப்போலவே இந்த குழல்விளக்கு பேசுவதைப்போல இருக்குடா’, என கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். உடனே குமரேசன் எழுந்தான், ‘என்னைக் கிண்டலடிப்பது இருக்கட்டும்; குழல்விளக்கு ஏன் விட்டு விட்டு எரிகிறது? அதனோடு சேர்ந்து ஒரு ஒலி வருகிறதே அது எதனால் என சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்றான். ‘மின்சாரம் குறைவாக வருவதால் இப்படி விட்டி விட்டு எரிகிறது