Skip to main content

Posts

Showing posts from February, 2019

சில தாவரங்கள் ஓசோனை வெளியிடுமா?

அ ன்று சற்றுத் தாமதமாக வகுப்பிற்குச் செல்ல ஆயத்தமானர் ஆசிரியர். அதற்குள் மாணவ மாணவியர்கள் சுதந்திரமாக சப்தமிட்டு மகிழ்வார்கள். இதுவும் ஒருவகையில் நல்லதுதான். அவர்களின் மனம் சற்றே லேசாகி அமைதி அடையும். ஆசிரியர் மிக மெதுவாக வகுப்பறையை நெருங்கிவிட்டார்.                 மாணவ மாணவியர்கள் ஒரு பாட்டை பாடிக்கொண்டிருந்தார்கள்.ஆசிரியர் சற்றே நின்று காது கொடுத்துக் கேட்டார். One O Alphabet , Two O Oxygen, Three O Ozone, Come on! come on! Susan! ஒரு ஓன்னா அல்பபெட்,   இரண்டு ஓன்னா ஆக்சிசன். மூனு ஓன்னா ஒசோன், ஓடிவாடா சூசன்!      மாணவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பாடிக்கொண்டே சூசனை மையத்திற்கு இழுத்தார்கள். அதற்குள் பாட்டைக் கேட்டபடியே உள்ளே நுழைந்தார் ஆசிரியர்.       மாணவ மாணவியர்கள் ஓடிச்சென்று அவரவர் இடத்தில் அமர்ந்தார்கள். மெல்ல மெல்ல சப்தம் குறைந்து போனது. ஆசிரியர் சற்றே திரும்பி கரும்பலகையைப் பார்த்தார். அதில் ஒரு செடியை வரைந்திருந்தார்கள். அதிலிருந்து ஓசோன் வாயு வெளிவருவது போல O3 என செடியைச் சுற்றி எழுதியிருந்தார்கள். ஆசிரியருக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும் அதைக