Skip to main content

Posts

Showing posts from May, 2021

இந்திய விஞ்ஞானி அன்னாமணி

இந்திய விஞ்ஞானி அன்னாம ணி “ப த்தாயிரம் கருத்துகளைவிட ஒரு சோதனை செய்து பார்ப்பது மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்” , இதையே எப்பொழுதும் தன்னோடு பணிபுரிபவர்களுக்கு விஞ்ஞானி அன்னாமணி சொல்லிக்கொண்டே இருப்பார். தனது வாழ்வின் பெரும்பகுதியை புனேயில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையத்திலேயே செலவிட்டார். அவரின் பணி ஓய்வுக்கு பிறகு இராமன் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த மையத்தோடு இணைந்து இந்திய அறிவியல் அமைப்பில் வெப்ப மண்டல வானியல் ஆராய்ச்சியை தனது இறுதிநாள் வரை மேற்கொண்டார். இங்கு இந்திய நாட்டின் சூரிய கதிர்வீச்சுஆற்றல்   மற்றும் காற்றின் ஆற்றல் வளமை குறித்து ஆய்வை மேற்கொண்டார். இந்த இரண்டு ஆற்றல்கள் குறித்த அவரின் ஆய்வுத் தரவுகளே   இன்றும் மின்உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது. அன்னாமணி கேரள மாநிலத்தில் எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பீர்மேடு என்னும் ஊரில் 1918-ல் ஆகஸ்டு மாதம் 23-ஆம் நாள் பிறந்தார். அவரின் தந்தையார் திருவனந்தபுரம் பொதுப்பணித்துறையில் பொறியாளராகவும்,   அவரின் தாயார் ஆசிரியராகவும் பணியாற்றிவந்தனர்.   ஐந்து ஆண்பிள்ளைகளும் மூன்று பெண்பிள்ளைகளும் கொண்ட

தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் மறைந்துவிட்டார்

  தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் கி . ராஜநாராயணன் மறைந்துவிட்டார் . தமிழ் இலக்கியதில் புதிய தடம் பதித்தவர். நாட்டுப்புற மக்களின் பேச்சு மொழியில் துணிந்து இலக்கியம் படைத்தவர். அவர் ஒரு கிராமத்து பெரியவராக ஞானத்தந்தையாக விளங்கியவர். அவரிடம் சற்று நேரம் பேசினால் போதும் அவர் ஞானத்தை அறிந்து கொள்ளலாம். எதைப்ற்றிக் கேட்டாலும் அதற்குறிய வரலாற்று உணர்வோடு அவருக்கே உரிய தெளிவோடு தனது கருத்தைச் சொல்வார். அதற்கு பின்புலமாக ஏதேனும் கதையோ சம்பவமோ சொல்லாமல் இருக்கமாட்டார். எவ்வளவு நேரமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். மிகப்பொறுமையாக கேட்பவர் ரசிக்கும்படி சொல்வார். கரிசல் நிலத்தின் நூற்றாண்டு கால நினைவுகளை தொல் கதைகளை தனது கதைகளில் எழுதிக்கொண்டே இருந்தார். அவர் ஒரு தீராத கதைசொல்லி. அவர் வாயால் இனி கதைகேட்கும் வாய்ப்பு நமக்கெல்லாம் இல்லை. அவர் நினைவுகள் நம்மை வழிநடத்தும். கி . ராஜநாராயணன் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெற்றுள்ளது. புதுவை மற்றும் தமிழக அரசுகளை மனதார பாராட்டலாம். நிகரற்ற அவரின் படைப்புகளைப் போல கி.ரா என்ற மகா கலைஞன் என்றும் வாழ்வார்.  

ஆனந்தி கோபால்

  ஆனந்தி கோபால் அந்த பள்ளியின் ஆண்டு விழா இன்னும் சற்று நேரத்தில் நிறைவுபெற இருக்கிறது . விழா நிகழ்வினைத் தொகுத்துக்கொண்டிருந்த ஆசிரியர் பச்சையம்மாளுக்கு இன்னும் உற்சாகம் குறையவில்லை. மாணவ மாணவியர்களின் திறமை வெளிப்பட்ட காட்சிகள் இன்னும் அவர் மனதை விட்டு அகலவில்லை.  அதுவும் மாணவர்களின் மன எழுச்சியை அறிவு முதிர்ச்சியை கண்முன்னால்  காணும் கலை இன்பம் அல்லவா! ஆக உற்சாகம் குறைவதெப்படி! அப்பொழுதுதான் முதல் பரிசை அறிவிக்கச் சொல்லி துண்டுத் தாள் ஒன்று ஆசிரியரின் கைக்கு வருகிறது. அதில் ஆனந்தி , கோபால்   என்று இரண்டு மாணவர்களின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இருவருக்கும் முதல் பரிசை அறிவிக்கச்சொல்லி இருந்தது . இரண்டு மாணவர்களும் மேடைக்கு வர ,   ஆனந்தி கோபால் இருவருக்கும் முதல் பரிசு வழங்கப்படுகிறது என்று மிக உற்சாகமாக வாழ்த்தி வரவேற்றார் பச்சையம்மாள். பள்ளியின் முதலவரும் ஆனந்தி கோபால் என்று உச்சரித்தப்படியே பரிசை வழங்கினார். கைத்தட்டல் ஓசை அடங்க வெகுநேரமானது .கூடவே ஆனந்தி கோபால் என்ற பெயர்களும்   கலைவிழா மேடையெங்கும் எதிரொலித்தது. இருவரும் நாளை நல்ல மருத்துவர்களாக மாறி நமது பள்ளிக்கு பெருமை சேர்