Skip to main content

Posts

Showing posts from 2011

எது நல்ல உப்பு?

இ ரண்டு இட்லி கொண்டு வரச்சொல்லிவிட்டு அந்த உணவகத்தில் காத்திருந்தேன். அப்பொழுது எனது எதிரே ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் ஆறுமுகம் ஆசிரியர் என்பதை உடனடியாக அடையாளம் தெரிந்துகொண்டு ‘வணக்கம் ஐயா’! என்றேன். அவரும் என்னை உற்றுக் கவனித்து, அடடே தமிழ்ச்செல்வனா! என்றபடியே எனது கையைப் பிடித்து குலுக்கினார். அவர் எனக்கு பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியராக இருந்தவர். அவரோடு உணவருந்தி கொண்டே பேசுகிற இந்த பொன்னான வாய்ப்பை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது. ஏனெனில் அவர் எப்பொழுதும் வகுப்பறையைத் தாண்டி பல புதிய செய்திகளை அறிவியல் வழியில் பேசக்கூடியவர். அவருக்கும் சேர்த்து இட்லி கொண்டுவரச் சொல்லிவிட்டு ஆறுமுகம் ஆசிரியரோடு பேச ஆரம்பித்துவிட்டேன். இருவரும் நலம் விசாரித்து கொண்ட பிறகு, பிரபலமான அந்த உணவகத்தின் ருசி பற்றிய பேச்சு வந்தது. “ருசி எல்லாம் சரிதான், ஆனால் உப்பின் சுவைதான் இங்கு கூடுதலாக இருக்கும்”.என்றேன் நான். ஆமாம் நானும் இங்கு பலமுறைச் சாப்பிட்டிருக்கிறேன். இங்கு மட்டுமல்ல பொதுவாக உணவகங்களில் உப்பு சற்று கூடுதலாகத்தான் இருக்கிறது. இந்த சுவை எப்பொழுதும் அளவோடு இரு

கிரிக்கெட் சூதாட்டம்

பா ர்த்தும் பேசியும் பரவசப்பட்டுப்போன எங்கள் நெஞ்சில் வலி! நெறிகெட்டுப்போன உங்களால் நெஞ்சில் வலி நெறிகட்டிக்கொண்டிருக்கிறது! தாய்நாட்டிற்காக ஆடச்சொன்னால் இப்படி , தரகுக்கு ஆடிவிட்டீர்களே! நீங்கள் பேட்ஸ்மேன்களா? அல்லது பகடைக்காய்களா? விக்கெட்டுக்களை வீழ்த்திய நீங்கள் உங்களை நீங்களே வீழ்த்திக்கொண்டது விசித்திரம்தான்! எல்லாவற்றையும் மாட்டிக்கொண்டு களத்தில் இறங்கிய நீஙகள் இதயத்தை மட்டும் எங்கே கழற்றி வைத்தீர்கள்! நீங்கள் பெவிலியனுக்கு திரும்பும் போதெல்லாம் நாங்கள் வருத்தப்படுவோம் ஆனால், நீங்கள் மகிழ்ந்திருப்பீர்கள் என்று இப்போதுதான் தெரிகிறது! உங்கள் ரன்களை வாசித்தறிந்த ரசிகர்கள் உங்கள் , ரணங்களை வாசிக்கிறார்கள்! உங்கள் விக்கெட்டுக்களை வாசித்தறிந்த ரசிகர்கள் உங்களை நீங்களே விற்றுக்கொண்டதை வாசிக்கிறார்கள்! கடைசி ஓவரில் இதயம் துடிதுடிக்க நீங்கள் ஆடினீர்களோ என்னவோ நாங்கள் இதயம் துடிதுடிக்கத்தான் பார்த்துக்கொண்டிருந்தோம்! ஆனால் , ரசிகர்கள் சிலர் கடைசி ஓவரின் கடைசி பந்தில

இன்னொரு மாஞ்சாலை வேண்டாமா?

மா ஞ்சாலையில் இன்று நடந்து பார்க்கிறேன்! கொளுத்தும் வெய்யிலில் ஒதுங்க நிழலின்றி வெறிச்சோடிக்கிடக்கும் மாஞ்சாலையில் இன்று நடந்து பார்க்கிறேன் பழைய ஞாபகச் சுவடுகள் என் முன்னால் நடைபோடுகின்றன! தாத்தா மாஞ்சாலையைக் குத்தகைக்கு எடுத்துவிட்டால் வீடெங்கும் மாம்பழவாசனைதான்! மாங்காயின் காம்புகளிலிருந்து வெடித்துக்கிளம்பும் பாலின் எரிப்புவாசனை கூடவே சேர்ந்து வீசும்! வீட்டுச்சுவரிலும் தரையிலும் கறைப் படிந்தபடியே இருக்கும்! தாத்தாவின் வேட்டியும் பாட்டியின் புடவையும் கறைப் பட்டு பட்டு சாக்குப் போல மாறிவிடும்! மாம்பழ சீசன் முடியும்வரை ஓயாத உழைப்புதான். வியாபாரிகள் வந்தபடியே இருப்பார்கள்! குழம்பில் கரையாத கல்மாங்காயைக் கேட்டபடி பெண்கள் வந்தபடியே இருப்பார்கள்! ஊரெங்கும் மாம்பழவாசனையும் பேச்சுமாகவே இருக்கும். கொட்டக்கச்சி,மாவுக்கா, ஆட்டுக்கறி மாங்கா, வாழைக்கா மாங்கா, ருமேனியா,கொட்டமாங்கா, பச்சரிச்சி மாங்காய், என வகை வகையாய் இளைஞர்கள் பெயர் வைத்தபடியே இ

மருத்துவர்களின் எண்-99

எனது நண்பர் குழந்தைகளுக்கான குறுந்தகடு ஒன்றை அன்பளிப்பாக கொடுத்திருந்தார்.அதை மறக்காமல் பள்ளிக்கூடத்திற்கு இன்று எடுத்து வந்தேன். நான் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆசிரியர். புதிய விடயங்களை தயங்காமல் எடுத்துச்சொல்வதில் விருப்பமுள்ளவன். ஆதலால் இன்று பாடங்கள் நடத்திய பிறகு, இந்த குறுந்தகட்டை மாணவர்களிடம் கொடுத்து கணினியில் போட்டு பார்க்குமாறு கூறினேன். அவர்களும் மகிழ்ச்சியாக கணினியின் முன் அமர்ந்தார்கள்.அவர்களில் ஒருத்தி கணினியை உயிர்பித்து குறுந்தகட்டை இயக்கினாள். அது எண்களை எளிய முறையில் சொல்லித்தரும் குறுந்தகடு. சற்று நேரத்தில் கணினியின் திரையில் ஒரு அழகிய குளம் காட்சியாக விரிந்தது. அதில் நிறைய தாமரை பூக்கள் பூக்காமல் மூடியிருந்தன. குளத்தைச்சுற்றி பாதுகாப்பாக மரங்கள் வளர்ந்திருந்தன. புல்தரைப் பளிச்சென்று சுத்தமாக இருந்தது. இந்த அழகிய குளக்கரையைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது.இந்த அழகிய காட்சியைத் தாண்டி படம் நகரவேயில்லை. பல முறை ‘மவுசால்’ கிளிக் செய்தும் பயனில்லை. மாணவர்கள் அனைவரும் என்னை நோக்கியே பார்த்தனர்.நான் சற்றே சிந்தித்தபடியே பூக்காமல் இருந்த தாமரை மொ

ஒரு சொல் ஒரு வெற்றி

அ ந்த தகவல் கையில் கிடைத்தப் பிறகு இராமமூர்த்தியால் சும்மா இருக்க முடியவில்லை. ஊர்த் தலைவரே இப்படி செய்தால் என்ன செய்வது? அதுவும் இவரைப் போன்றவர்களை எப்படி எதிர்ப்பது? ஒரே குழப்பமாக இருந்தது. முன்னாள் ஆசிரியர் கோவிந்தன் ஞாபகத்திற்கு வந்தார். அவர் சொன்ன ஒரு யோசனை யானைப் பலத்தைத் தந்தது. அவரை நினைத்து பெருமை பட்டான். மெல்ல இவன் மனதில் ஒரு திட்டம் உருவானது. விளையாட்டுக்கழகம் முதன்முறையாக ஊர் பிரச்சனையில் தலையிடப்போகிறது. தனது விளையாட்டுக் கழக நண்பர்களை சந்தித்து பேசினான்.அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். நாம் அனைவரும் ஒன்றே போல் பேச வேண்டும். அதே நேரத்தில் உருக்கு போன்று உறுதியாக இருக்க வேண்டும். என்ன நேர்ந்தாலும் எடுத்த முடிவை அமுல்படுத்துவதிலேயே குறியாக இருக்க வேண்டும். ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. மீண்டும் அனைவரும் சபதம் எடுத்தார்கள். வெற்றி நிச்சயம் என்றபடியே கலைந்து சென்றார்கள். அன்று கிராம வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்பு மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். கிட்டத்தட்ட ஊரே கூடி விட்டது. என்ன ஏதென்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். மெல்ல மெல்ல விபரம் புரிய ஆரம்பித்தது. விளையாட்ட

தகரத்திற்கு ‘டின்’பிளேக்’ நோயா?

நான் வகுப்பறையை மிகவும் நேசிக்க தொடங்கிவிட்டேன். விரும்பி பாடம் நடத்துவதன் இன்பத்தை ஒவ்வொரு நாளும் சுவைக்க ஆரம்பித்துவிட்டேன்.அன்றும் அப்படித்தான்,பன்றிக்காய்ச்சல் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு; தனிமங்கள் குறித்த பாடத்தை நடத்த ஆரம்பித்தேன். மனித நாகரீக வளர்ச்சியில் தனிமங்களூக்கு மிகப்பெரிய பங்கிருக்கிறது என தொடங்கி ஒரு வழியாக அன்றைய பாடத்தை முடித்தேன். ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் என்றேன். ஒரு மாணவன் தயங்கியபடியே எழுந்தான். சார்! நீங்க சந்தேகம் வராம ஒழுங்கா பாடம் நடத்திருங்க, ஆனால் தற்போது நிறைய நோய்கள் பற்றி கேள்வி படுகிறோம். அது போல் தனிமங்களுக்கு நோய் வருமா சார்? என்று கேட்டான். உடனே எல்லோரும் சிரித்து விட்டனர். தனிமங்களுக்கு எப்படி நோய் வரும்? என்று ஆளாளுக்கு பேசிக்கொண்டனர். ஆனால் எனக்கு கோபம் வரவில்லை.இது குறும்புத்தனமான கேள்வியாக இருந்தாலும்,இதில் உண்மை இருப்பதாக எனக்கு பட்டது. உடனே ஒருவாறு சமாளித்து, இரும்புக்கு துரு பிடிப்பதை நீ பார்த்ததில்லையா? அதுவும் ஒரு நோய் போன்றதுதானே! என்று பதில்சொல்லி அமரவைத்தேன். என்றாலும், இந்த

சிலந்தி வலை மர்மம்

ப ள்ளியின் நூலகத்தில் மாணவர்களோடு சேர்ந்து நானும் தூசு படிந்த புத்தகங்களை துடைத்து வரிசையாக அடுக்கியபடி இருந்தோம். எனக்கு மாணவர்களை இப்படி நூலகத்தோடு சேர்த்து பார்ப்பதே ஆனந்தமாக இருக்கும்.அவர்கள் அடுக்கியபடியே புத்தகங்கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் பேசுவதைக் கேட்பது புல்லரிப்பாக இருக்கும். இதற்காகவே நானும் அவர்களோடு சேர்ந்து புத்தகங்களை வரிசையாக அடுக்குவேன். இடையிடையே என்னிடத்தில் ஏராளமான கேள்விகளைக் கேட்பார்கள். என்னால் முடிந்தவரை பதில் சொல்வேன்.அவர்களின் அறிவுத்தேடலை நினைத்து ஆனந்தம் கொள்வேன். ஒரு ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன ஆனந்தம் இருக்க முடியும்? நூலகத்தை இப்படி சுத்தப்படுத்தும் போதெல்லாம் சிலந்தி பூச்சிகளைப் பற்றி பேச்சு வரும்.“சார்! இந்த சிலந்தி பூச்சிக்கு எங்கயிருந்துதான் இந்த நூலெல்லாம் கிடைக்கும்” என்றெல்லாம் கேட்பார்கள். பூச்சிகளை வலையில் சிக்க வைக்கும் இந்த பூச்சிகளால் என்ன பயன் சார்!என்றான் ஒருவன். “வயல்களில் சிலந்தி வலைகட்டுனா அதனால் உழவர்களுக்கு நன்னையுண்டு. பயிர்களை அழிக்கக் கூடிய பூச்சிகள் எல்லாம் இந்த சிலந்தி வலையில் சிக்கினா வெளியே போ

புத்தகம் என்பது…..

புத்தகம் என்பது மனம் வசிக்கிற வீடு! புத்தகம் என்பது மனதை வனையும் ஒரு குயவன்! இது தித்திக்கின்ற ஒரு சின்னக்கடல்! இது செழுமையும் வளமையும் செறிந்த ஒரு சின்னக் காடு! கற்பனைச் சிறகுகளால் கனவுகளைச் சுமக்கும் ஓர் உயிர்ப்பறவை! இது மனங்கள் உரசிக்கொள்ளும் சிந்தனைப் போர்க்களம்! புத்த்கம் என்பது விதைகள் மட்டுமல்ல விதைகளை விளையவைக்கிற நாற்றங்கால்! புத்த்கம் என்பது முட்டைகள் மட்டுமல்ல முட்டையை அடைகாக்கும் கோழி! இதோ இன்னொரு தகப்பன் சாமி! மனிதநேய மகாநதி பெருக்கெடுத்து ஓட தன் மூக்கால் கீறிக்கொண்டே செல்கிறது இந்த உயிர்ப்பறவை! அலமாரியில் ஜவுளிகளை அடுக்கியது போதும் இனி புத்தகங்களை அடுக்குங்கள்! வீடுகட்டுவோரே இனி பூசை அறையை புத்தக அறையாக மாற்றுங்கள்! கழிப்பறையும் நூலகமும் கட்டித்தாருங்கள் உலகமே சுத்தமாகுமென்று உலக சுகாதார நிலையத்திற்கு சிபாரிசு செய்வோம் !