Skip to main content

Posts

Showing posts from June, 2020

கண்ணப்பன் கேட்ட கேள்வி!?

               அன்றைய பாடத்தை வழக்கமாக நடத்தி முடித்தாலும் வகுப்பறையில் மாணவன் கண்ணப்பன் இல்லாதது அவருக்கு வெறுமையாக தோன்றியது.     சக மாணவர்களை அழைத்து விசாரித்தார். இன்றைக்கு கண்ணப்பன் ஏன் வரவில்லை என்றார் ?!      “ சார்! அதை ஏன்சார் கேட்கறீங்க! அவன் மீண்டும் கிரிக்கெட் பார்த்து பரவசப்பட்டுப் போய் கைதட்டி , மீண்டும் விழுந்து விட்டான் சார்! அதனால் ஏற்கனவே இடது முழங்கால் எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டிருந்தது அல்லவா! அந்த இடத்திலேயே   மீண்டும் முறிவு ஏற்பட்டுள்ளது சார்! இதனால் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் சார்!” என்றனர் மாணவர்கள்.      சரி நீங்க வகுப்புக்கு போங்க ,   நான் போய் கண்ணப்பணைப் பார்க்கிறேன் என்றார் ஆசிரியர்.      ஆசிரியருக்கு கண்ணப்பன் ஞாபகமே வந்து வந்து போனது. கண்ணப்பன் நன்றாக படிக்கக்கூடியவன். அவன் அறிவியல் ரீதியாக கேள்வி கேட்பதிலும் வல்லவன். அதே நேரத்தில் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவன். குறிப்பாக கிரிக்கட்டில் அவன் சாதிக்க வேண்டுமென துடிப்பவன். அவன் ரப்பர் பந்தில் விளையாடும் போதே அவனது திறமையைக் கண்டுகொண்டார் உடற்பயிற்சி ஆசிரியர். அவனுக்க

கணக்கும் கனவும்

கணக்கும்  கனவும்            கணக்கும் கனவும்           சுற்றுலா என்றதும் ஒரு புதிய உற்சாகம் வந்து விடுகிறது. நந்தினியும் உற்சாகமாகி விட்டாள். அப்பொழுதான் அவளுக்கு வீட்டுப்பாடம் ஞாபகத்திற்கு வந்தது. அனைத்து வீட்டுப்பாடத்தையும் வேகமாக முடித்துக்கொண்டே வந்தாள். கணக்கு பாடத்தில் ஒரு கணக்கை மட்டும் அவளால் போடமுடியவில்லை.      ஆனால் கணக்கில் அவளுக்கு ஆர்வம் அதிகம். சரியான விடை வந்துவிட்டால் சந்தோழத்தில் துள்ளிக் குதிப்பாள். ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் இடையில் எந்த வீதி செயல்படுகிறது என்பதில் ஆர்வமாக இருப்பாள். சில நேரங்களில் கற்பனையில் மூழ்கிவிடுவாள். கணக்கின் படிகளில் ஏறி விடையைத் தொடுகிற மாயத்தை எண்ணி எண்ணி வியப்பாள். இதனால் அவளை பள்ளியில் “ கணக்குப்புலி ” என்று அழைப்பார்கள். யாருக்கும் தெரியாமல் ஆசிரியரைப்போல கரும்பலகையில்   கணக்கைப் போட்டு மகிழ்வது அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த ஒரு கணக்கை அவளால் போட முடியவில்லை.      அப்பொழுதுதான் அவளின் அம்மா வந்து அவளின் தலையைத் தடவி கொடுத்தாள். என்னம்மா கணக்கு வரலையா! என்று அன்போடு கேட்டாள்.      “ நாளைக்கு டூர் போற இல்ல , இப்ப போய

விட்டு விடுதலையாகி...

                                விட்டு விடுதலையாகி...           தருண் மூன்றாம் வகுப்பு படிக்கிறான் . பள்ளி விட்டு வந்தவுடன் சுறுசுறுப்பாகி விடுவான் . அவனால் விளையாடாமல் இருக்க முடியாது இன்று ஒரு பட்டம் வாங்கித் தரச்சொல்லி அம்மாவிடம் நச்சரித்தான்.   இரு குருவிகள் இணைந்து பறக்கிற படம் போட்ட ஒரு பட்டம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையே வாங்கிக்கொண்டான் . அந்த பட்டத்தோடு மொட்டை மாடிக்கு ஒடினான் . பட்டத்தின் நூலைப் பிடித்துக்கொன்டு காற்றில் வீசினான் . பட்டம் காற்றின் மேல் தவழ முயன்றது . காற்றின் வேகத்தில் மேலே எழுவதும் பின்னர் கீழே சாய்வதுமாக இருந்தது .   தருண் லாவகமாக நூலை விட்டு விட்டு இழுத்தபடியே இருந்தான் . தற்போது காற்று மெதுவாக வீசியது. பட்டம் மெல்ல காற்றில் தவழ ஆரம்பித்தது விட்டது . மெதுவாக காற்றின் வேகம் அதிகரித்தது. பட்டம் காற்றில் தத்தி தத்தி நீந்தி பறக்க ஆரம்பித்தது. தருண் இப்பொழுதுதான் குதித்துக் கொண்டே பற்கள் தெரிய சிரித்தான் . பட்டம் மெதுவாக பறந்து கொண்டே இருந்தது.             அப்பொழுதுதான் எதிர் வீட்டு புவிக்கா வெளியே வந்தாள். புவிக்கா வும் மூன்