Skip to main content

Posts

Showing posts from October, 2018

காடு ஒழுங்கற்றதா?

காடு ஒழுங்கற்றதா? பள்ளிக்கூடத்திற்கு ஒரு மணிநேரம் முன்னதாக வந்துவிடுவான் மணிநாத். உடனே பையை வைத்துவிட்டு விளையாட ஆரம்பித்துவிடுவான். அன்று அனால் அப்படி விளையாட முடியவில்லை. பள்ளியின் விளையாட்டு மைதானத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு இருந்தது. பாதுகாப்பிற்காக மரக்கன்றுகளைச் சுற்றி இரும்பு கூண்டு அமைத்திருந்தார்கள். அதன்மீது "காடழிந்தால் நாடே அழிவும் , மரம் வளர்ப்போம் " என்று எழுதப்பட்டிருந்தது. அப்பொழுதுதான் அவனின் தோழி சுவேதா ஒடி வந்தாள். மரம் வளர்த்தால் எப்படி காடாகும்? மாந்தோப்பு தென்னந்தோப்பு மாதிரி தோப்புதானே உருவாகும்? என்றாள். அப்ப தோப்பு காடாவாது என்கிறாயா? என சட்டென கேட்டான் மணிநாத். தோப்பு என்றால் ஒழுங்கமைந்து கானப்படும்! காடு அப்படியா? அது ஒழுங்கற்றதுதானே! என்றாள் சுவேதா. இப்படி உரையாடல் போய்க்கொண்டிருந்த போதுதான், கணக்கு ஆசிரியர் அறிவழகன் அவர்களை வகுப்பறைக்கு உள்ளே அழைத்தார். அவர்கள் வணக்கம் சொன்னபடியே உள்ளே வந்தனர். “ஏதோ விவாதம் போய்க்கொண்டிருந்ததே, என்ன அது” ஆவலோடு கேட்டார் ஆசிரியர் உடனே சுவேதா ஒரு சாக்பீசை எடுத்து கரும்பலகையில் கீழ்கண்ட

வெளிர் மஞ்சள்

வெளிர் மஞ்சள் த மிழாசிரியர் சொன்னது மாதிரி ஆளூக்கொரு பூச்செடியை வளர்க்க முடிவு செய்து விட்டார்கள் மாணவ மாணவியர்கள். இதற்காக ஆளுக்கொரு மண் பூந்தொட்டியை வாங்கி விட்டார்கள். அதிகபடியான நீர் கசிந்து ஒடுவதற்கு பூந்தொட்டியின் அடியில் சிறு துவாரம் இருக்கிறதா என்று பார்த்து வாங்கினார்கள். கொஞ்சம் மண்புழு உரமும் மக்கிய தேங்காய்நாரும் சேர்த்து ஒன்றன் மேல் ஒன்றாக பூந்தொட்டியில் வைத்து அடைத்தார்கள். அவர்கள் அப்பகுதில் கிடைத்த ம ண்ணையும் தொட்டியில் கலந்து வைத்தார்கள். தேவையான அளவிற்கு நீர் ஊற்றி பதப்படுதினார்கள். வகுப்பிற்கு வெளியே மைதானத்தைச் சுற்றிலும் தொட்டிச் செடிகளை தகுந்த இடைவெளி விட்டு வைத்தார்கள். மாணவ மாணவியர்கள் சூரிய ஒளி நன்றாக படும்படி தங்கள் தொட்டியைச் சற்றே இடம் மாற்றி வைத்தார்கள்.       மாணவ மாணவியர்கள் தாங்கள் விரும்பிய செடிகளில் நாற்றை நட்டு வைத்தார்கள். காலையும் மாலையும் தவறாது செடிகளுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கவனமாக பார்த்துக் கொண்டார்கள். ஒவ்வொரு நாளும் மாணவ மாணவியர்கள் ஒய்வு கிடைக்கும் போதெல்லாம் வந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள். எப்போது அவரவர் செடிகள்

அண்ட ரெண்ட பட்சி

அண்ட ரெண்ட பட்சி   மாணவர்கள் சுதந்திரமாகவும்    நட்பாகவும் விளையாட   வேண்டும்   என்று விரும்புபவன்   நான் . அவர்கள்   விளையாடும்போது   மட்டும்தான்   மனசு   லேசாகி சமநிலை அடைவர் . வாரத்தில்   ஒரு   நாளாவது   எனது   மாணவர்களை     விளையாட   அனுமதிப்பேன் . அன்று   மாணவர்களை ,” பறவைகளைப் போல நடித்து விளையாடுங்கள் : கண்டிப்பாக தரையில் மட்டும்”   என்று   கூறிவிட்டு   அவர்களை   கவனிக்க ஆரம்பித்தேன். ஒருவன் கைகளை மடக்கி றெக்கையாக்கி கோழியைப் போல பறந்து காட்டினான் . ஒரு மாணவன்   கைகளை   நன்றாக விரித்து காக்கையைப் போல பறந்து காட்டினான் . சற்று தூரம் பறந்து   அமரும் கொக்கைப் போல ஒரு மாணவன் நடித்து காட்டினான் . வானத்தில் வட்டமிடும் கழுகைப் போல ஒரு மாணவன் வட்டமாக பறந்து எலியைப் பிடிப்பதைப் போல பாய்ந்து காட்டினான் . பறவைகள் கூட்டமாக பறப்பது போல மாணவர்கள் அனைவரும் இணைந்து கூட்டமாக கைகளை விரித்து தரையில் பறந்தபடியே நடித்தார்கள் .   திடீரென ரொம்ப தடிமனான ஒரு மாணவனை அழைத்து வந்தார்கள் . அவனுக்கு வண்ணக்  காகிதத்தாலான