Skip to main content

Posts

Showing posts from August, 2019

வேறுபாடுகள் தந்த வெளிச்சம்!

         ஆ சிரியர் மெல்ல இருமிக்கொண்டே வகுப்பறைக்குள் வந்தார். நாற்காலியை சற்றே இழுத்து வசதியாக அமர்ந்துகொண்டார். மெல்ல மூச்சை நிதானமாக இழுத்து விட்டுக்கொண்டார். மூச்சு நிதானத்திற்கு வந்ததில் ஒரு புதுத் தெம்பு உண்டானது. சரி பாடம் நடத்தலாமென நாற்காலியில் இருந்து எழுந்த போது அவரையும் மீறி தும்பல் வந்துவிட்டது. சற்றே சுதாகரித்துக்கொண்டு கர்சீப்பால் மூக்கை மூடிக்கொண்டார். மாணவர்களும் கர்சீப்பை எடுத்து மூக்கை மூடிக்கொண்டனர். இது அனிச்சை செயல்போல் உடனடியாக நடந்தேறியது. கிருமி தொற்று பரவாமல் இருக்க ஆசிரியர் சொன்ன வழிமுறையில் இதுவும் ஒன்று.      சரி! சரி! இந்த இருமலுக்கு என்ன காரணம் ? “கிருமிகள்தான் சார்”! என்றான் ஒரு மாணவன்.      கிருமிகள் என்றால் என்ன ? என்றார் ஆசிரியர். அதான் சார்! பாக்டிரியாக்கள் வைரஸ்கள் போன்ற கிருமிகள்தான் மனிதன் , விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு நோய்களை உண்டாக்குகின்றன என்றான் இன்னொரு மாணவன்.      சரியாகத்தான் சொல்றீங்க , இன்றைக்கு இந்த கிருமிகளைப் பற்றித்தான் படிக்கப் போகிறோம். அதற்கு   முன்னாடி இந்த வைரஸ்களுக்கும் பாக்டிரியாக்களுக்கும் எ