Skip to main content

தமிழ் மருத்துவ குணங்களை வெளிப்படுத்தும் பயனுள்ள பழமொழிகள்-V


தமிழ்  மருத்துவ குணங்களை வெளிப்படுத்தும் பயனுள்ள பழமொழிகள்-V

41. ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ

42. யாரும் இல்லாதவற்கு ஆவாரை இருக்கு

43. சாகாவரம் தருவதுதான் தாவரம்

44.வாயில் செரிக்காததா வயிற்றில் செரிக்கப் போகிறது
                  
45.ஊறுகாய் உடம்பை நாற வைக்கும் காய்

46.வெந்து கெட்டது முறுங்கைக் கீரை
  வேகாமல் கெட்டது அகத்திக்கீரை

47. உழைப்பு உடல்நல கவசம்

48.அளவான உறக்கமே அமுத மருந்து 

49.பூண்டுக்கு அஞ்சாத பூதம் ஏது?

50. உழைக்காத உடம்பு உளுத்துப்போன உலக்கை


நன்றி : சுடரொளிக் கவிஞர்  அரியூர் மருத்துவர் காசி பிச்சை
        அவர்கள் எழுதிய காலை முதல் மாலை வரை 
        என்ற நூலிலிருந்து தொகுத்தவை இந்த ஐம்பது பழமொழிகள்

Comments