கரும்பலகைக்கதைகள் - புதுச்சேரி அன்பழகன்
குழந்தைகளுக்கான புத்தகம்
புதுச்சேரி அன்பழகன் ஒரு பொறியாளர். குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி ஓர் ஆசிரியராக
ஆச்சரியப்படுத்துகிறார்.
இந்தப் புத்தகத்தில் மொத்தம் பதினேழு குட்டிக்கதைகள் உள்ளன.
மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள்தான் கதையின் நாயகர்கள்.
தொண்ணூற்றி ஒன்பது அறுபத்தியாறு என நாம் திரும்பத் திரும்பச் சொன்னால்
நமது நுரையீரல் நலமடைகிறது என்பது முதல் பதிமூன்று எனும் எண் மதவாதிகளால் ஆபத்தானதாகியது,
பூச்சியத்தின் ஆற்றல் என விரிந்து ராபர்ட்ஸ்காட், அமுன்சென் என அறிவியல் பிறவிகளும்
எடுக்கின்றன இவரது குடிக்கதைகள்.
உப்பு பற்றிய உரையாடலை நான் மிகவும் ரசித்தேன். மாணவர்கள்
கொண்டாடிய சுதந்திர தினமும் மனதைக் கவர்ந்தது.
மதிப்பெண் போட்டியில் மழலைகளின் உள்ளத்து
அழுகுரல் ஏன் கேட்பதில்லை என வினவும் அந்த பள்ளியைத் தொலைத்துவிட்டேன் கதை என மிகச்சிறப்பான கதைகளை குழந்தைகளுக்காய்
தந்திருக்கிறார்.
அவரை வரவேற்றுப் போற்றுவோம்.
இந்த புத்தகத்தை வாங்கி மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும் அன்பளிப்பாக வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். --
-- புத்தகம் பேசுது இதழில்(அக்டோபர்-2018) ஆயிஷா நடராஜன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் எண்.7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,சென்னை.600018. தொலைபேசி:044-24332424, 9444960935

Comments
Post a Comment