Skip to main content

Posts

Showing posts from October, 2010

ஒரு எளிய கேள்வி

து வைத்த துணிகளைக் காயவைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் என் மகள் என்னருகே ஓடி வந்தாள். கேள்வி கேட்பது அவள் சுவாபம். நான் தடை ஏதும் செய்வதில்லை.அதிலும் அவள் கேள்வி எப்படிப்பட்டதாக இருந்தாலும்,அது எனது சிந்தனையை தூண்டுவதாகவே இருந்துள்ளது. அவளது கேள்வியை உள்வாங்க நானும் ஆவலாக , ஒடிவந்த என் மகளை அப்படியே தூக்கிக்கொண்டேன். அப்பா! அப்பா! எனக்கு ஒரு சந்தேகம். என்னமா ,சொல்லு! சொல்லூ! என்றேன் ஆவலோடு. அப்பா! அப்பா! துணிகளெல்லாம் எப்படி அப்பா! காயுது? அத, நம்ம கண்ணால பார்க்க முடியலையே ஏனப்பா? என்றாள். “ஓ அதுவாமா, துணிகளெல்லம் சூரிய வெப்பத்தால காயுது.அதிலிருக்கிற ஈரமெல்லாம் காற்றுல காணாம போயிடுது. அதனால நம்மால பார்க்க முடிவதில்லை” என்றேன். அத நம்ம கண்ணால பார்க்க வேற வழி இல்லையாப்பா?என்று இன்னொரு கேள்வியை கேட்டுவிட்டாள். என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. சரி! சரி! அப்புறமா சொல்கிறேன்! என்று அவளை சமாளித்து அனுப்பி விட்டேன். என் மகளின் இந்த கேள்வி அறிவியல் ஆசிரியரான என்னை குடைந்து கொண்டேயிருந்தது. ஆவியாகி காற்றில் கலந்துவிடுகிற நீரை , கண் முன்னால் காட்டினால்தான் பிள்ளைகள் நம்முவார்