Skip to main content

இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ்

 

இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ்
---- புதுச்சேரி அன்பழகன். 

        "டாக்டர் யெல்லபிரகட சுப்பாராவ்  என்ற இந்திய விஞ்ஞானி வாழ்ந்ததால் இன்று உலக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவரைப்பற்றி நன்கு அறிந்த அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மருத்துவ உலகிற்கு பல கண்டுபிடிப்புகளையும் பல முன்னெடுப்புகளையும் வழங்கிய அதிசய மனிதர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.. ஆனாலும் அவரைப்பற்றி  அதிகமாக நாம் கேள்விப்பட்டிருக்க  வாய்ப்பில்லை.
        ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரம் என்ற ஊரில் ஒரு ஏழை தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் 1895-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள்  யெல்லபிரகட சுப்பாராவ்  பிறந்தார். தற்போதைய கோவிட்-19 தொற்று போல அன்றைக்கு பிளேக் என்ற தொற்று நோய் பரவியதால் இவரின் தந்தை காலமானார். தன் தந்தையின் இழப்பை சுப்பாராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார். 
   தந்தையின் வருமானம் இல்லாமல் குடும்பம் தவித்தது. இதை உடனடியாக  சரிசெய்ய வேண்டும் என்ற துடிப்பு பதின்மூன்றே வயதான சுப்பாராவுக்கு தோன்றியது இயல்புதான். புனித நகரான வாரணசிக்கு சென்று யாத்ரீகர்களுக்கு வாழைப்பழங்களை விற்பதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சமபாதிக்கலாம்  என்ற திட்டத்தோடு ஓடிவிட்டார். இவரின் தாயார் வெங்கம்மாவின் பெரும்முயற்சியால் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். 
        சுப்பாராவ்  பிரெசிடென்சி கல்லூரியில் படிக்கும் போது ஒரு முறை அவர் சென்ற இடம் கல்கத்தாவில் உள்ள இராமகிருஷ்ன மடம். இந்த இராமகிருஷ்னா மடம்தான் பிளேக் நோய் தாக்கியபோது மக்களை காப்பாற்ற பெரும்முயற்சி எடுத்துக்கொண்டதை சுப்பாராவ் அறிந்திருந்தார். ஆன்மீகத்தின் மூலம் மக்களுக்கு சேவைசெய்ய முடியும் என்று சுப்பாராவ் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் இராமகிருஷ்ன மடத்திலிருந்த சுவாமி பரமானந்தர் சுப்பாராவிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். உங்கள் நோக்கம் மகத்தானது; அதை நிறைவேற்ற வேண்டுமென்றால் தாங்கள் மருத்துவம் பயின்று இங்கு வந்து சேவையாற்றுமாறு அன்போடு கேட்டுக்கொண்டார். அதன்படி சுப்பாராவ் மருத்துவம் பயிலவேண்டுமென விருப்பத்தோடு சென்னை வந்தார். அதன் பிறகுதான் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தி ஆழப்படித்தார். அதிக மதிப்பெண் பெற்று  சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். சூரியநாராயண மூர்த்தி என்பவரின் நிதி உதவியால் இவரால் மருத்துவம் படிக்க முடிந்தது. அவரின் மகள் சேஷகிரியை 1919-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் திருமணம் செய்துகொண்டார்.
        இவர் மருத்துவம் பயின்ற காலகட்டத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் காந்தியின் தலைமையில் வீறுகொண்டு எழுந்தது. சுப்பாராவ் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு, அன்னிய பொருட்களை பயன்படுத்துவதை கைவிட்டு, கதர் ஆடையை அணிய தொடங்கினார். இது அவரது ஆங்கில பேராசிரியரான எம்.சி பிராட்ஃபீல்டுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் சுப்பாராவிற்கு  முழு எம்.பி.பி.எஸ் பட்டம் வழங்குவதற்கு பதிலாக  குறைந்த எல்.எம்.எஸ் பட்டமே வழங்கப்பட்டது. அப்பொழுதும் சுப்பாராவ் கதராடை அணிவதை நிறுத்தவில்லை.
        சுப்பாராவிற்கு குறைந்த எல்.எம்.எஸ் பட்டமே இருந்ததால்  அரசு மருத்துவப் பணி மறுக்கப்பட்டது. இதனால் சென்னையிலிருந்த மருத்துவர் இலக்குமிபதி ஆயுர்வேதக் கல்லூரியில் உடலியங்கியல்(Anatomy) விரிவுரையாளராக பணியாற்றினார். ஆயுர்வேத மருந்துகளின் குணப்படுத்தும் திறனால் கவரப்பட்ட இவர் அம்மருந்துகளுக்கு நவீன வடிவம் கொடுப்பதிலான ஆராய்ச்சியில் இறங்கினார்..
        ஆயுர்வேதம் குறித்து அறிந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்த ஒரு அமெரிக்க மருத்துவரை சுப்பாராவ் சந்திக்க நேர்ந்தது. ஆயுர்வேதம் குறித்து சுப்பாராவ் பேச பேச இவர் வியந்துபோகிறார். நீங்கள் ஏன் அமெரிக்கா சென்று மருத்துவ ஆய்வை மேற்கொள்ளக்கூடாது என கேட்கிறார். உடனே அவரின் அலோசனை மற்றும் உதவியை ஏற்று சுப்பாராவ் அமெரிக்கா செல்கிறார்.

 

       சுப்பாராவ் அமெரிக்காவின் போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் டிராபிகல் மெடிசின் பள்ளியில் சேர்ந்தார். ஆனால் இவர் மருத்துவ சான்றிதழ் மட்டுமே வைத்திருப்பதால் உதவித்தொகை மறுக்கப்படுகிறது. இதனால் அந்த மருத்துவமனையிலே சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்கிறார். சில நாட்களில்  இரண்டு அல்லது மூன்று ஷிப்டுகளில் கூட தொடர்ந்து வேலை செய்து கவனமாக படித்து வந்தார். இதனால் மற்ற பேராசிரியர்களின் அன்பும் ஆதரவும் இவருக்கு கிடைத்தது. ஒருவழியாக டிப்ளமோ முடித்தவுடன்; அவர் ஹார்வர்டில் உள்ள  மருத்துவர் சைரஸ் ஃபிஸ்கே ஆய்வகத்தில் பணியில் சேர்கிறார். 

        முதன்முறையாக, சைரஸ் ஃபிஸ்கேவுடன் சேர்ந்து, உடல் திரவங்கள் மற்றும் திசுக்களில் பாஸ்பரஸின் மதிப்பீட்டை ஒரு விரைவான வண்ணமெட்ரிக் முறை". மூலம் கண்டரிந்தார்.

         சுப்பாராவ் ஃபிஸ்கேயின் மேற்பார்வையில் பணிபுரிந்தார். சுப்பாராவ் அறிவியல் உலகத்திற்கு புதியவர், இவர் கண்டரிந்த இந்த புதியமுறை மிக எளிமையானது மட்டுமல்ல மிகவும் துல்லியமானதும் கூட.  அனைத்து வகையான உயிரியல் மற்றும் மருத்துவப் பொருட்களையும் பகுப்பாய்வு செய்வதற்கு ஏற்றது, இது உலகம் முழுவதும் உள்ள உயிர்வேதியியல் ஆய்வகங்களால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. உயிர் வேதியியலின் பல துறைகளில் இது இன்றுவரை பொதுவான பகுப்பாய்வு நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது. உயிர்வேதியியல் மாணவர்கள் எல்லா இடங்களிலும் கற்றுக் கொள்ளும் முதல் நடைமுறைகளில் இதுவும் ஒன்றாகும்.

         இன்று நாம் எடுக்கும் பல இரத்த பரிசோதனைகள் செலவு குறைவாக இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? சுப்பாராவ் காப்பீட்டு உரிமை வாங்காமல் உலக மக்களுக்கு அர்பணித்ததுதுதான் காரணம்.

        அடுத்ததாக நமது உடலுக்கு ஆற்றல் எங்கிருந்து வருகிறது? நாம் உண்ணும் உணவிலிருந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதேநேரத்தில் தசைகளின் வழியான ஆற்றல் செயல்பாடு எப்படி நடக்கிறது? தசைச் சுருக்கத்தின் போது வெளிப்படும் ஆற்றலுக்கு ATP எனப்படும் அடினோசைன் ட்ரை பாஸ்பேடே காரணமாகும். இதையே 1929-ஆம் ஆண்டு பிஸ்க் மற்றும் சுப்பாரவ் இருவரும் அறிவியல் உலகத்திற்கு தெரிவித்தார்கள். ஆற்றல் சுமக்கும் மூலக்கூறு என்று சுருக்கமாகச் சொல்லலாம். இந்த மிக முக்கிய மூலக்கூறு எல்லா உயிரினங்களிலும் காணப்படுகிறது. நாம் உண்ட உணவிலிருந்து பெறப்பட்ட ஆற்றல் வேதியியல் வடிவில் தசைகளில் சேமித்து வைக்கப்படுகிறது. இப்படி சேமிக்க்கப்பட்ட ஆற்றலை ATP-யே உயிரணுக்களின் செயல்பாடுகளுக்கு வழங்குகிறது. இந்த ATP-யின் மூலம் சாத்தியமான தசைச் சுருக்கம் நம் கைகால்களை நகர்த்தவும் எடையை உயர்த்தவும் உதவுகிறது, இதுவே நம்மை உயிருடன் வைத்திருக்கவும் உதவுகிறது. இந்த மாபெரும் கண்டுபிடிப்பை சுப்பாராவ் சாதித்தார் என்றால் அது மிகையில்லை.

       அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் பத்திரிக்கை தனது  தலையங்கத்தில் இந்த கண்டுபிடிப்பை பாராட்டி எழுதியது. மேலும்  ராக்ஃபெல்லர் அறக்கட்டளை ஒரு ஃபெலோஷிப்பை சுப்பாராவுக்கு வழங்கியது, இந்த உதவி  சுப்பாராவுக்கு பெரும் உதவியாக இருந்தது.

       இதன் மூலம், சுப்பாராவின் பெயர் 1930 களில் உயிர் வேதியியல் பாடப்புத்தகங்களில் முதன்முறையாக பட்டியலிடப்பட்டது. அதே ஆண்டில், சோர்வுற்ற தசைக்கு ஓய்வு காலத்தை அனுமதிக்கும் போது இந்த ATP மீண்டும்  தோன்றுகிறது என்ற கண்டுபிடிப்பிற்கு  முனைவர் பட்டமும் வழ்ங்கப்பட்டது. அவர் 1940 வரை ஹார்வர்டில் பணிபுரிந்தார், பின்னர் ஹார்வர்டில் ஒரு வழக்கமான பேராசிரியர் பதவி மறுக்கப்பட்ட பின்னர், அமெரிக்க சயனமித்தின் ஒரு பிரிவான லெடர்ல் ஆய்வகத்தில் ஆராய்ச்சி இயக்குநராக சேர்ந்தார்.  

 

இது 1945 ஆம் ஆண்டில் லூசி வில்ஸ்  என்ற இரத்த வியலாளர்,  உயிரிழைப்பை ஏற்படுத்தவல்ல அனீமியாவை குணப்படுத்த உதவும்  வைட்டமின் பி 9 தனிமைப்படுத்த தேவையான  அடித்தளத்தை அமைத்து கொடுத்தார்.  சுப்பாராவும் தனது கடின உழைப்பின் மூலம் வைட்டமின் பி12-லை பன்றியின் ஈரலில் இருந்து பிரித்தெடுத்தார். அதே நேரத்தில்  கருயுற்ற தாய்மார்களுக்கு போலிக் ஆசிடை  பயபடுத்தபடுவதிலும்  சுப்பாராவின் பங்கு மகத்தானது. இவர் தலைமையின் கீழ் பணியாற்றிய குழுவில் இடம் பெற்ற இளம் ஆய்வாளர்களை போலிக் ஆசிட் பாய்ஸ் என்று  அழைக்கப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முதல் புற்றுநோய் கீமோதெரபி முகவர்களில் ஒன்றான மெத்தோட்ரெக்ஸேட் என்ற புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை உருவாக்க டாக்டர் சிட்னி ஃபார்பர் வழங்கிய பல்வேறு உள்ளீடுகளை சுப்பாராவ் பயன்படுத்தினார், இது இன்னும் உலகளவில் பயன்படுத்தப்படுகிறது.

 லெடெரல் ஆய்வகத்தில்  யானைக்கால் நோய்க்கு சிகிச்சையளிக்கும் ஹெட்ராஸன் என்ற மருந்தைக் கண்டுபிடித்த பெருமையும் சுப்பாராவுக்கு உண்டு. இன்று, இந்த மருந்து உலக சுகாதார நிறுவனம் உட்பட யானைக்கால் நோய்க்கு சிகிச்சையளிக்க மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மருந்தாகும்.

      அனைத்து விதமான காய்ச்சலுக்கும் ஒரே மருந்தை கண்டுபிக்க சுப்பாராவ் பெரிதும் முயன்றார். ஆனால் 1928-ல் அலெக்சாண்டர் பிளெம்பிங் பென்சிலினை கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கினார். இதுவே ஆண்டிபயாடிக்குகளின்  காலம் தொடங்குவதற்கு வழி வகுத்தது.

தனது இயக்குநர் பெஞ்சமின் டுகரின் ஆய்வின் கீழ், உலகின் முதல் டெட்ராசைக்ளின் ஆண்டிபயாடிக் மருந்தை கண்டடைந்ததிலும் சுப்பாராவின் பங்கு மகத்தானது.

அவர் கண்டுபிடித்த மற்றொரு மருந்து ஐசோனிகோட்டினிக் அமிலம் ஐட்ராசைடு ஆகும், இது காசநோய்க்கு ஒரு பயனுள்ள சிகிச்சையாக உள்ளது.

        அமெரிக்க சயனமித் "சுப்பாரோமைசஸ் ஸ்ப்ளெண்டன்ஸ்" என்ற பெயரில் ஒரு புதிய பூஞ்சைக்கு சுப்பாராவின் பெயரிட்டு கௌரவித்தது.

        ஆகஸ்ட் 9, 1948 அன்று அமெரிக்காவில் மாரடைப்பால் அவர் இறந்தபோது, இந்த புகழ்பெற்ற விஞ்ஞானியின் நினைவாக  நியூயார்க் டைம்ஸ், நியூயார்க் ஹெரால்ட்-டிரிப்யூன், உலகெங்கிலும் உள்ள பல செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் ஏராளமான இரங்கல் கடிதங்கள் வெளிவந்தன. ஹெரால்ட்-ட்ரிப்யூன் என்ற பத்திரிக்கை அவருக்கு "நூற்றாண்டின் மிகச்சிறந்த மருத்துவ மனங்களில் ஒன்று மறைந்து விட்டது " என்று புகழாரம் சூட்டியது.

 

பல கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்கள் அவரது பெருமைக்கு உரியவையாக இருந்த நிலையில், சுப்பாராவ் தனது படைப்புகளை ஒருபோதும் சந்தைப்படுத்தவில்லை, அவர் புகழுக்காக ஏங்கி தவிக்கவில்லை அவர் எப்போதும் பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்தார். அவருக்கு நோபல் பரிசு அறிவிக்க இருந்தநிலையில் அதை பெறுவதற்கு சுப்பாராவ் உயிருடன் இல்லை. இருந்தாலும் நோபல் அறிவிப்பு அறையில் அவரின் திரூருவச் சிலை இன்றும் வைக்கப்பட்டுள்ளது

        தேச பக்தியும் மனிதநேயமுமே அவரை செயலூக்கம் மிக்கவராக வாழ்நாள் முழுவதும் இயக்கியது என்றால் அது மிகையல்ல. தற்போது மாணவர்களுக்கு அரசியல் கூடாது என்று சொல்லப்படுகிறது. ஆனால் சுப்பாராவுக்கு காந்தியின் மீதும் பற்று இருந்தது. தேச விடுதலை இயக்கத்தின் மீதும்  பற்று இருந்தது. இதனாலேயே கடைசிவரை ஒரு மனிதநேயராக உலக மக்களை நேசிப்பவராக வாழ்ந்தார். ஏழை எளிய மக்கள் மருத்துவ வசதி பெற வேண்டும் என்பதற்காகவே காப்புரிமை கோராமல் எளிமையாக வாழ்ந்து மறைந்தார். இத்தகைய   இந்திய விஞ்ஞானியின் சுயநலமற்ற வாழ்வையும் அவரின் மகத்தான கண்டுபிடிப்புகளையும் மக்களிடத்தில் மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டியது அனைவரின் கடமையாகும் என்றால் அது மிகையல்லவே.

                      ----புதுச்சேரி அன்பழகன்.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

மாணவர்கள் கொண்டாடிய அறிவியல் விழா!

             காலை இறைவணக்கத்தை முறைப்படி செலுத்துவதற்காக மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் வரிசையாக நிற்கத் தொடங்கினார்கள். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை ஒழுங்கு படித்தியபடியே மேடைக்கு வந்தார்கள். சற்று நேரத்தில் பள்ளியின் முதல்வரும் மேடைக்கு அருகில் வரவும்,, மாணவர்களிடையே சப்தம் படிப்படியாக குறைந்து அமைதி நிலவியது. மாணவத் தலைவர் இறைவணக்கத்தை ஆரம்பித்து வைக்க, மாணவர்கள் ஒரே குரலில் பாடி முடித்தார்கள். சில முக்கியச் செய்திகள் மற்றும் அறிவிப்புகளோடு அன்றைய இறைவணக்க நிகழ்வு முடிவுக்கு வந்தது. மாணவர்கள் தத்தம் வகுப்பிற்குச் செல்லத் தொடங்கினார்கள். மைதானம் வெற்றிடமாக மாறியது. சிறிது நேரத்தில் மீண்டும் சில மாணவர்கள் மைதானத்தை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக ஓடினார்கள். பள்ளி முதல்வர் தொடங்கி ஆசிரியர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏன் சில மாணவர்கள் மட்டும் மீண்டும் ஏதோ அணிவகுப்பு நடத்த முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை!. மீண்டும் மைதானத்தில் ஓடிய மாணவர்கள் ஏதோ ஒரு ஒழுங்கிற்கு வந்தது போல தெரிந்தது. குறுக்கும் நெடுக்குமாக ஒரு அட்

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது.