Skip to main content

தகரத்திற்கு ‘டின்’பிளேக்’ நோயா?

நான் வகுப்பறையை மிகவும் நேசிக்க தொடங்கிவிட்டேன். விரும்பி பாடம் நடத்துவதன் இன்பத்தை ஒவ்வொரு நாளும் சுவைக்க ஆரம்பித்துவிட்டேன்.அன்றும் அப்படித்தான்,பன்றிக்காய்ச்சல் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு; தனிமங்கள் குறித்த பாடத்தை நடத்த ஆரம்பித்தேன். மனித நாகரீக வளர்ச்சியில் தனிமங்களூக்கு மிகப்பெரிய பங்கிருக்கிறது என தொடங்கி ஒரு வழியாக அன்றைய பாடத்தை முடித்தேன். ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் என்றேன்.


ஒரு மாணவன் தயங்கியபடியே எழுந்தான். சார்! நீங்க சந்தேகம் வராம ஒழுங்கா பாடம் நடத்திருங்க, ஆனால் தற்போது நிறைய நோய்கள் பற்றி கேள்வி படுகிறோம். அது போல் தனிமங்களுக்கு நோய் வருமா சார்? என்று கேட்டான். உடனே எல்லோரும் சிரித்து விட்டனர்.


தனிமங்களுக்கு எப்படி நோய் வரும்? என்று ஆளாளுக்கு பேசிக்கொண்டனர். ஆனால் எனக்கு கோபம் வரவில்லை.இது குறும்புத்தனமான கேள்வியாக இருந்தாலும்,இதில் உண்மை இருப்பதாக எனக்கு பட்டது. உடனே ஒருவாறு சமாளித்து, இரும்புக்கு துரு பிடிப்பதை நீ பார்த்ததில்லையா? அதுவும் ஒரு நோய் போன்றதுதானே! என்று பதில்சொல்லி அமரவைத்தேன். என்றாலும், இந்த கேள்விக்கான சரியான பதிலை நான் சொன்னதாக என் மனம் ஒப்பவில்லை. கேள்விக்கான பதிலை தேடிக்கொண்டே இருந்தேன்.


ஒருநாள் மாலை நடைப் பயிற்சிக்காக கடற்கரை சென்றிருந்தேன்.அங்குதான் எடிசன் வாத்தியாரைச் சந்தித்தேன். அவர் ஒரு பேச்சாளர்.அவர் பேசும்போது ஏதாவது அறிவியல் கதைகளைப் பேசாமல் பேச்சை முடிக்கமாட்டார். இன்று அவரைச்சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் நலம் விசாரித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். என் மாணவன் எழுப்பியக் கேள்வியை மெல்ல அவரிடம் கேட்டேன். அவர் சற்று நேரம் யோசித்தப்படியே ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.


ஒரு முறை நெப்போலியன் ரசிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். அவனுக்கு மாஸ்கோவை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் நீண்டகால ஆசை. திட்டமிட்ட படியே நெப்போலியனின் படைகள் மாஸ்கோவை நெருங்கிவிட்டன. அப்போது மாஸ்கோவில் கடும் குளிர்காலம் தொடங்கியிருந்தது.படை வீரர்கள் தங்களை கடும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள எராளமான குளிர் தாங்கும் உடைகளை இங்கிலாந்து நாட்டிலிருந்து வரவழைத்திருந்தனர். ஆனால் அவர்கள் அந்த உடைகளை அணிந்து கொண்டு பட்டனை தேடியபோது அவையெல்லாம் நொருங்கிப்போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சொல்லி வைத்தாற் போன்று எல்லா கோட்டுகளிலும் பட்டன்கள் நொருங்கிப்போயிருந்தன. இது யார் செய்த சதி? மந்திரமோ! மாயமோ! என்று படைவீரர்கள் புளம்ப தொடங்கினர். மேற்கொண்டு கடும் குளிரைத் தாண்டி சண்டை போட முடியாமல் படைவீரர்கள் சோர்ந்து போய் வீழ்ந்தனர். இதனால் நெப்போலியன் மாஸ்கோவை பிடிக்க முடியாமல் வெறுங்கையோடு நாடு திரும்பினார். ஒரு சில பட்டன்கள் ஒரு பெரும் போரையே நிறுத்திவிட்டது ஆச்சரியம்தான்.


ஏன் இந்த டின் தனிமத்தால் செய்த பட்டன்கள் அப்போது நொறுங்கிப்போனது என்று அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. இது இந்த தனிமத்திற்கு வந்த பிளேக் நோய் என்றே அழைத்தார்கள். இந்த கதையை எடிசன் சார் சொன்ன போது நம்ப முடியாததாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இந்த கதையை வரலாற்று புத்த்கத்தில் படித்ததாக உறுதியாக கூறினார். இந்த டின் பிளேக் பற்றி எடிசன் சாருக்கு மேற்கொண்டு தெரியவில்லை.ஏதோ பாதி கிணறு தாண்டியது போல இருந்தது. இன்னும் அறிவியல் விளக்கமெல்லாம் நாம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.இப்படி ஒரு அற்புதக் கதையை சொன்ன எடிசன் சாருக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.


மறுநாள் ஓரூ இணையதள மையத்திற்கு சென்று டின் பிளேக் குறித்து பல விபரங்களை தேடினேன். என்ன ஆச்சரியம் இன்னுமொறு சோகக்கதை எனக்கு கிடைத்தது.


அமுன்சென் என்ற விஞ்ஞானி முதன் முறையாக பூமியின் தென் துருவத்தை அடைந்து, வெற்றிகரமாக திரும்பிய ஒரு மாத காலத்தில் ரோபர்ட் ஸ்காட் என்ற இராணுவ தளபதி தலைமையில் ஒரு குழு பூமியின் தென் துருவத்தை ஆய்வு செய்யச் சென்றது.அப்போது குளிர்பிரதேசத்தில் தங்குவதற்கு வசதியாக பெரிய பெரிய டின்களில் மண்ணெண்ணையை நிறைய எடுத்துச் சென்றிருந்தனர். ஆனால் அந்த கடும் குளிரைத் தாங்காமல் டின்களில் விரிசல் ஏற்பட்டு மண்ணெண்ணை முழுவதும் சொட்டுச் சொட்டாக வெளியேறிவிட்டது. இதனால் போதிய உணவு தயாரிக்கவோ, தங்களை சூடேற்றிக்கொள்ளவோ முடியாமல் தவித்தனர். இறுதியில் அந்த குழுவினர் அனைவரும் கடும் குளிரால் இறந்தே போயினர்.


இந்த கதையைப் படித்தப் பிறகு இப்படி ஒரு சோகம் நிகழ்ந்து விட்டதே என மனம் வெம்பியது. மேற்சொன்ன இரு கதைகள் குறித்தும், இது ஏதோ மாய பேய்களின் வேலைகளாகத்தான் இருக்கும் என்று பேசிக் கொண்டனராம். ஆனால் விஞ்ஞானிகள் விரைவிலேயே இதற்கு ஒரு தீர்வி கண்டிருந்தார்கள். பல தனிமங்கள் குறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் டின் போன்ற தனிமங்கள் வெப்ப நிலை மாறும்போது அந்த தனிமத்தின் உள் கட்டமைப்பில் மாறுபாடு ஏற்பட்டு புதிய நிலையை அடைகிறது. இதனால் தான் டின் தனிமமானது ஜீரோ டிகிரி வெப்ப நிலைக்கு குறைவாக தள்ளப்படும் போது அந்த தனிமத்தின் உள் கட்டமைப்பில் மாறுபாடு ஏற்பட்டு புதிய நிலையை அடைகிறது. இதனால் டின் தனிமத்தில் விரிசல் ஏற்பட்டு பின்னர் படிப்படியாக பவுடராக மாறிவிடுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்து உலகிற்குச் சொன்னார்கள். அதோடு மட்டுமல்ல, இந்த டின்பிளேக்கைக் குணப்படுத்த பிஸ்மத் ஆண்டிமணி போன்ற தனிமத்தை டின் தனிமத்தில் தேவையான அளவு உள் செலுத்தி அதை உறுதிபடுத்தினார்கள். இதனால் டின் தனிமத்தின் எந்த குளிரையும் தாங்கும் நிலைக்கு மாற்றப்பட்டது. இதன் பிறகே டின்னின் பயன்பாடு வெகுவாக அதிகறித்தது. அது மட்டுமல்ல காற்று, நீர், உப்பு, உணவு, ஏன் நம்மோடுகூட அது வினைபுரியாது. இந்த சாதாரண தகரம் குறித்து இவ்வளவு செய்த்திகளா? என்று ஆச்சரியப்பட தோன்றுகிறதல்லவா!


இப்படியாக என் மாணவன் குறும்புத்தனமாக எழுப்பிய இந்த கேள்விக்கு நான் உண்மையிலேயே விடை கண்டுபிடுத்துவிட்டேன். நாளை மாணவர்களுக்கு இதை உற்சாகமாக எடுத்துச் சொல்வேன் என்று நினைக்கும் போதே பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது.

Comments

  1. சிறப்பான பதிவு மிக கடிமான அறிவியல் செய்திகளை எளிமையான மொழிநடையில் எழுதியதற்கு நன்றி

    ReplyDelete
  2. புதுச்சேரி அன்பழகன்January 11, 2011 at 3:48 AM

    விடுதலைக்கு நன்றி! மற்ற கட்டுரைகளையும் விமர்சிக்கவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ்

  இந்திய விஞ்ஞானி யெல்லபிரகட சுப்பாராவ் ---- புதுச்சேரி அன்பழகன்.          " டாக்டர் யெல்லபிரகட சுப்பாராவ்   என்ற இந்திய விஞ்ஞானி வாழ்ந்ததால் இன்று உலக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவரைப்பற்றி நன்கு அறிந்த அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மருத்துவ உலகிற்கு பல கண்டுபிடிப்புகளையும் பல முன்னெடுப்புகளையும் வழங்கிய அதிசய மனிதர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.. ஆனாலும் அவரைப்பற்றி   அதிகமாக நாம் கேள்விப்பட்டிருக்க   வாய்ப்பில்லை.         ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரம் என்ற ஊரில் ஒரு ஏழை தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் 1895-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள்   யெல்லபிரகட சுப்பாராவ்   பிறந்தார். தற்போதைய கோவிட்-19 தொற்று போல அன்றைக்கு பிளேக் என்ற தொற்று நோய் பரவியதால் இவரின் தந்தை காலமானார். தன் தந்தையின் இழப்பை சுப்பாராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார்.     தந்தையின் வருமானம் இல்லாமல் குடும்பம் தவித்...

ஒரு எளிய கேள்வி

து வைத்த துணிகளைக் காயவைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் என் மகள் என்னருகே ஓடி வந்தாள். கேள்வி கேட்பது அவள் சுவாபம். நான் தடை ஏதும் செய்வதில்லை.அதிலும் அவள் கேள்வி எப்படிப்பட்டதாக இருந்தாலும்,அது எனது சிந்தனையை தூண்டுவதாகவே இருந்துள்ளது. அவளது கேள்வியை உள்வாங்க நானும் ஆவலாக , ஒடிவந்த என் மகளை அப்படியே தூக்கிக்கொண்டேன். அப்பா! அப்பா! எனக்கு ஒரு சந்தேகம். என்னமா ,சொல்லு! சொல்லூ! என்றேன் ஆவலோடு. அப்பா! அப்பா! துணிகளெல்லாம் எப்படி அப்பா! காயுது? அத, நம்ம கண்ணால பார்க்க முடியலையே ஏனப்பா? என்றாள். “ஓ அதுவாமா, துணிகளெல்லம் சூரிய வெப்பத்தால காயுது.அதிலிருக்கிற ஈரமெல்லாம் காற்றுல காணாம போயிடுது. அதனால நம்மால பார்க்க முடிவதில்லை” என்றேன். அத நம்ம கண்ணால பார்க்க வேற வழி இல்லையாப்பா?என்று இன்னொரு கேள்வியை கேட்டுவிட்டாள். என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. சரி! சரி! அப்புறமா சொல்கிறேன்! என்று அவளை சமாளித்து அனுப்பி விட்டேன். என் மகளின் இந்த கேள்வி அறிவியல் ஆசிரியரான என்னை குடைந்து கொண்டேயிருந்தது. ஆவியாகி காற்றில் கலந்துவிடுகிற நீரை , கண் முன்னால் காட்டினால்தான் பிள்ளைகள் நம்முவார்...