Skip to main content

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள், மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர். அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர். சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு, தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர். மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது. இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன்.

ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை முதல்வர் அறைக்கு அழைத்துச்சென்றேன். அவன் இரண்டாம் வகுப்பு ‘இ’ பிரிவு என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த வகுப்பில் அவனை அமர வைத்தேன். அபொழுதுதான் அவன் முகத்தில் அச்சம் மறையத்தொடங்கியது.

மாலை வீடு வந்து சேர்ந்தாலும், அந்த மாணவன் சொன்ன வார்த்தைகளே என் சிந்தனையில் வந்துகொண்டெயிருந்தன. முதல் நாளில் வகுப்பறையை தேடி சோர்வடைந்த அவசரத்தில், தனது வகுப்பையே திடீரென மறந்து என்ன செய்வதென்று தெறியாமல் திகைத்து நின்றுவிட்டான் என்பதை ஊகிக்க முடிந்தது.‘ ஸ்கூலைத்தொலைத்துவிட்டேன்’ என்ற வார்த்தை என் மனதில் அப்படியே பதிந்துவிட்டது. என் சிந்தனையைக் கிளரிவிட்டது. தற்போது இருக்கிற இந்த பள்ளிக்கூடமும் அதன் பாடதிட்டமும் தொலைந்து போய், ஒரு புதிய பள்ளிக்கூடத்தை என் மனம் கற்பனைச் செய்யத்தொடங்கியது.

ஓர் அழகான பூங்காவிற்கு நடுவில் பள்ளிக்கூடம் அமைந்திருக்கிறது. புத்தகப்பையையும் காலணியும் இல்லாமல் ஒரு தென்றலைப் போல பிள்ளைகள் தமக்கு பிடித்த வண்ணத்தில் உடையணிந்து ஓடி வருகின்றனர். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு சமமாக ஓடுவதும் அமர்வதுமாக இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்கான அதிகாரங்களையெல்லாம் உடைத்துப்போட்டு, குழந்தைகளின் மன உலகில் தேர்ந்த்தெடுத்த வார்த்தைகளோடு அன்பே உருவாய் ஆதரவாய் உறவாடுகிற அற்புத காட்சி அரங்கேறுகிறது. மகிழ்ச்சியை அள்ளித்தரும் விளையாட்டு வழிமூலம் பாடம் நிகழ்த்தப்படுகிறது. மனப்பாடம் செய்யாமலே மதிப்பெண் பெறுகிற அதிசயம் நடக்கிறது. மனத்தாங்கல்களை அதிகப்படுத்துகிற வீட்டுப்பாடம் விட்டொழித்து ,மனதிற்கு விருந்தாகும் ஆட்டமும் பாட்டமுமாக மாலைநேரங்களில் மகிழ்ந்தாடுகின்றனர். களைப்பூட்டும் வகுப்பறை பாடங்கள் மறைந்து போய், மகிழ்வூட்டும் ‘கல்வி பூங்காவில்’ மனம் விரும்பி பாடம் பயில்கின்றனர். கையில் பிரம்பை வைத்து கொண்டு ஆணையிடுகிற பாடமுறை ஆழத்தில் அமிழ்ந்து போக, பிள்ளைகளின் மனதில் அன்பையிடுகிற பாடமுறை மேலே எழுந்து வருகிறது.

இந்த அழகான கற்பனை மனதில் ஓடிய வண்ணம் இருந்தது. வீட்டுப்பாடம் எழுதிவிட்டேனம்மா ! என்று என் பிள்ளை ஓடி வந்து தொட்டபோதுதான் நான் யதார்த்த உலகத்திற்கு வந்தேன். என் மகளை அப்படியே கட்டிப்பிடித்து முத்தமிட்டேன். அப்பொழுதுதான் என் வகுப்பு மாணவியிடம் நான் கேட்ட கேள்வி ஞாபகத்திற்கு வந்தது. ‘நீ எப்போது மகிழ்வாய் இருப்பாய்? என் நான் கேட்ட போது, எல்லோரும் மகிழ்ந்திருக்கும் போது நானும் மகிழ்ந்திருப்பேன்’ என் அவள் சொன்னது இப்பொழுது என் மனதில் வந்து செல்கிறது. எல்லோரும் மகிழ்வாய் வாழவே பிள்ளைகளின் மனம் விரும்புகிறது. பிறகு ஏன் நாம் மனத்தாங்கல்களை அதிகரிக்கும் பாடமுறையிலான கல்வியைத் தரவேண்டும்.

மதிப்பெண்களை அள்ளத்துடிக்கும் போட்டியில் மாணவர்களின் உள்ளத்தின் அழுகுரலை நாம் செவிமடுத்து கேட்பதில்லையே ஏன்? இந்த உலகத்தின் இதுவரையிலான அறிவுச்செல்வங்களை எல்லாம் கற்றுத்தேர வேண்டுமென துடிக்கும் பிள்ளைகளை நாம் உருவாக்க வேண்டாமா? அதற்கு முதலில் அவர்களின் மன உலகை நாம் அழகுபடுத்த வேண்டாமா? அதில் அன்பை ஆதரவை இன்பத்தை இட்டு நிரப்ப வேண்டாமா?

அனைத்து குழைந்தைகளின் மனதை புரிந்து கொள்ளுங்கள்! அவசியம் பாடதிட்டத்தையும் , பாடம் படிக்கும் இடத்தையும் குழைந்தைகளின் மன உலகிற்கு ஏற்ப மாற்றி அமையுங்கள். இதுவே நாம் குழந்தைகளுக்கு செய்யும் முதல் உதவியாக இருக்கும். ‘ ஸ்கூலைத்தொலைத்துவிட்டேன்’ என்பது அந்த மாணவன் மூலம் எதேச்சையாக வெளிப்பட்டாலும் , இதன்மூலம் என்னுள் ஏற்படுத்திய இந்த சிந்தனை உங்களுக்கும் நிச்சயம் ஏற்படும். குழைந்தைகளுக்கு மகிழ்ச்சியான கல்வியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நோக்கி நாம் ஒவ்வொருவரும் குரல் கொடுத்தாகவேண்டும்.

Comments

  1. அன்பிற்கினிய தோழருக்கு

    வணக்கம்.
    அருமைத் தோழர் ராம்கோபால் நேற்று உங்களது வலைப்பூவை குறுஞ்செய்தியின் மூலம் அறிமுகம் செய்தபோது எனக்கு இப்படியான ஒரு வித்தியாசமான ஆசிரியரையும், அவரது வளமான கனவுகளையும், எழுத்து உலகத்தையும் அருகில் கொண்டு வந்து நிறுத்துகிறார் என்று தெரியாமல் இருந்தது.....
    ஸ்கூலைத் தொலைத்துவிட்டேன் என்பதே ஒரு கவிதையான தலைப்பு.....உள்ளங்களைப் போட்டு உறுத்தும் தலைப்பு. கொள்கை வகுப்பவர்கள் தலை குனிய வேண்டிய தலைப்பு.

    வகுப்பைத் தொலைத்தவரை நீங்கள் அவரிடத்தில் கொண்டு சேர்த்துவிட முடிந்தது.
    ஆனால் கல்வியைத் தொலைத்துவரும் தலைமுறைக்கு,
    இளமையைத் தொலைத்துவரும் குழந்தைகளுக்கு, வருங்காலத்தையே வைத்திழந்துவரும் மாணவ குலத்திற்கு
    யார் இவற்றை மீட்டுத் தர.....

    இதில்தான் உங்களைப் போன்றோரின் உளவியல் பாடங்களாய் எழுத்துக்களும், அதிரடி செய்தியாய் ஜனநாயகப் போராட்டங்களும் அமைந்து வருகின்றன, மாற்றத்தை சாதிக்க....

    வாழ்த்துக்கள்...

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  2. மிகச்சிறந்த பதிவு.இன்றைய பெரும்பாலான குழந்தைகளின் நிலை இதுதான்.நமது கல்வி இதுதான்.கல்வி,கற்பிக்கும் முறை,பாடநூல்கள் பற்றிய முற்றிலும் புரதிகரமான சிந்தனைகளே இப்போதைய அவசியத் தேவை.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. good and thought provoking article. kng

    ReplyDelete
  4. அன்புள்ள நண்பருக்கு
    எ°.வி. வேணுகோபாலன் உங்கள் வலைப்பூ பற்றி தெரிவித்தார். நிலவழகன் பள்ளிக் கூடத்தைத் தொலைத்தது அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைய கற்பித்தல் முறை பற்றி சிந்திக்க வைக்கும் பதிவு. உங்களது கற்பனையில் கண்ட பள்ளி நிஜத்திலும் வரட்டும்.
    கே. ராஜு
    ஆசிரியர், புதிய ஆசிரியன் மாத இதழ்

    ReplyDelete
  5. puducherryanbazhaganJuly 26, 2010 at 9:33 PM

    manam thirantha ungalin nermaiyana vimarsanaththirkku mikka nandri.thotarnthu sinthippom seyalpatuvo pillaikalin ulagaththaik kaappatra.nandri! nandri!

    ReplyDelete
  6. adada.. arputhamana pathivu. ungal kanuvu maipada vendi.. vazthum. ..
    puthuvaipraba

    ReplyDelete
  7. புதுச்சேரி அன்பழகன்August 23, 2010 at 1:31 AM

    புதுவை பிரபா! கனவு மெய்ப்பட வேண்டி வாழ்த்தியதற்கு நன்றி ! குழந்தைகளின் எதிகாலம் அப்பொழுதுதான் பாதுகாக்கப்படும் . வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அந்த நேரம் பார்த்து தலைமை ஆசிரியர் அவரை அழைப்பதாகச் சொல்ல, மாணவ மாணவியரிடம் ஆளுக்கு

வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு

  வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு இ ராபர்ட்   ஐந்தாம் வகுப்பில் புதியதாக வந்து சேர்ந்திருந்தான் . பார்ப்பதற்கு வெள்ளைக்காரரைப் போல சிவப்பாக இருந்தான் . யார் வகுப்பிற்கு வந்தாலும் அவனையே விசாரித்தார்கள் . வகுப்பறையைத் தாண்டி பள்ளி முழுவதுமே அவனையே   வியப்பாக   பார்த்தார்கள் .   இ ராபர்ட் வந்ததிலிருந்து இ ராமு தன் நிறத்தையே அடிக்கடிப் பார்த்துக்கொண்டான் . கருப்பாகவும் இல்லை . வெள்ளையாகவும் இல்லை . இரண்டு நிறமும் கலந்த மாதிரி இருந்தது . நாம் ஏன் சிகப்பாக பிறக்க வில்லை என்று தனக்குள் கேட்டுக்கொண்டான் . சிவப்பாக இருந்தால் ஏன் இப்படி மதிப்பாக பார்க்கிறார்கள்   என்பதை   ராமுவால் புரிந்துகொள்ள   முடியவில்லை . இ ராமு தன் நண்பர்களிடம் அடிக்கடி இது பற்றி கேட்டான் . அதெல்லாம் ஒன்னுமில்லடா , நம்ம கண்ணுக்குத் தான் அப்படி அழகா தெரியுது ! நீ நல்லா படித்து முதல் ரேங்க் எடுத்தா அப்புறம் உன்னைப்பற்றியே எல்லோரும் பேசுவார்கள் . ராமுவுக்கு இது சரி என்று பட்டாலும் . மனம் மட்டும் கேட்பதாக இல்லை . என்ன செய்வதென்று யோசிக்கத்தொ