Skip to main content

சிலந்தி வலை மர்மம்

ள்ளியின் நூலகத்தில் மாணவர்களோடு சேர்ந்து நானும் தூசு படிந்த புத்தகங்களை துடைத்து வரிசையாக அடுக்கியபடி இருந்தோம். எனக்கு மாணவர்களை இப்படி நூலகத்தோடு சேர்த்து பார்ப்பதே ஆனந்தமாக இருக்கும்.அவர்கள் அடுக்கியபடியே புத்தகங்கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் பேசுவதைக் கேட்பது புல்லரிப்பாக இருக்கும். இதற்காகவே நானும் அவர்களோடு சேர்ந்து புத்தகங்களை வரிசையாக அடுக்குவேன்.

இடையிடையே என்னிடத்தில் ஏராளமான கேள்விகளைக் கேட்பார்கள். என்னால் முடிந்தவரை பதில் சொல்வேன்.அவர்களின் அறிவுத்தேடலை நினைத்து ஆனந்தம் கொள்வேன். ஒரு ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

நூலகத்தை இப்படி சுத்தப்படுத்தும் போதெல்லாம் சிலந்தி பூச்சிகளைப் பற்றி பேச்சு வரும்.“சார்! இந்த சிலந்தி பூச்சிக்கு எங்கயிருந்துதான் இந்த நூலெல்லாம் கிடைக்கும்” என்றெல்லாம் கேட்பார்கள்.

பூச்சிகளை வலையில் சிக்க வைக்கும் இந்த பூச்சிகளால் என்ன பயன் சார்!என்றான் ஒருவன்.

“வயல்களில் சிலந்தி வலைகட்டுனா அதனால் உழவர்களுக்கு நன்னையுண்டு. பயிர்களை அழிக்கக் கூடிய பூச்சிகள் எல்லாம் இந்த சிலந்தி வலையில் சிக்கினா வெளியே போகமுடியாது. இந்த சிலந்தி அந்த பூச்சிகளை

பிடித்து சாப்பிட்டுவிடும். இதனால் உழவனுக்கு நண்பனாக இந்த சிலந்தி பூச்சி விளங்குது.” என்றான் இன்னொரு மாணவன்.

சார்! வலையை எப்படி சார் அது கட்ட ஆரம்பிக்குது?

“அதன் உமிழ்நீரில் உள்ள பசைத்தன்னையால் சுவற்றில் ஒட்டவைத்து வலை பின்னும்” என்று சொன்னேன்.

“ அப்படியின்னா இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு எப்படி சார் போகும். அது இப்படி அப்படி அந்தரத்துல தாவும் போது விழுந்துவிடாதா? சரியான கேள்வியைக் கேட்டுவிட்டனர் மாணவர்கள். எனக்குதான் பதில் சொல்ல தெரியவில்லை.

“சரி இதற்கு பதிலை நீங்களே தேடுங்கள். இங்கு ‘ஈயும் சிலந்தியும்’ என்ற புத்தகம் இருக்குது தேடி படியுங்கள்” என்று சொல்லிவிட்டு நான் கிளம்மி அடுத்த வகுப்பிற்கு சென்றுவிட்டேன். சிறிது நேரம் கழித்து “ சார் எங்களால கண்டுபிடிக்க முடியல சார், ஆனால் நூலகத்தைச் சுத்தப்படுத்தி விட்டோம் சார்” என்று சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு மாணவர்கள் சென்று விட்டனர்.

வீட்டுக்கு வந்து ஓய்வெடுத்த பிறகு எனது நூலகத்தை திறந்து பார்த்தேன். “ஈயும் சிலந்தியும்” என்ற புத்தகத்தைத் தேடினேன். ஆனால் அது கிடைக்கவில்லை. அது போன்ற ஒரு சிறிய புத்தகம் ஒன்று தட்டுப்பட்டது. அதை எடுத்து மேலோட்டமாக புரட்டத் தொடங்கினேன். ஒரு பக்கத்தில் சிலந்தி என்ற வார்த்தை கண்ணில்பட்டது. உடனே அந்த பக்கத்தை கூர்ந்து பார்த்தேன். அதில் “ சிலந்தி பூச்சி முதலிலே நூல் செய்து, அதை காற்றிலே விட்டுவிடும். அந்த நூல் காற்றின் செய்கையால் எதிர் புறத்திலே போய் ஒட்டிக்கொள்ளும். பூச்சி அதை அசைத்துப் பார்த்து பற்றியிருப்பது தெரிந்து கொண்டு அதன் பிறகுதான் நூல் மீது நடந்து செல்லும். அப்பால் வலை பின்னத் தொடங்கிவிடும்” என்று தெளிவாக போட்டிருந்தது. இந்த புத்தகம் அறிவியல் புத்தகமா என திருப்பிப்பார்த்தேன். மேலும் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது அறிவியல் புத்தகம் அல்ல.“தராசு” என்ற புத்தகம் பாரதியாரால் எழுதப்பட்டது என தெரிந்துகொண்டேன். பாரதியார் “தராசு” என்ற தலைப்பில் பல விடயங்களை நிறுத்துப்பார்த்து எதுசரி? எது தவறு? என சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார். அதில் நிறுத்துப்பார்த்த ஒரு கதைதான், இந்த சிலந்தி பற்றியது.

ஒரு சிறிய விடயத்தையும் விட்டுவிடாமல் அவர் சிந்தனையில் பட்டதை எழுதி வைத்துள்ளது எவ்வளவு சிறப்பு என நினைத்துக்கொண்டேன். பாரதியை எண்ணி பெருமையாக இருந்தது. கூடவே நல்ல கேள்விகளை எழுப்பிய மாணவர்களை எண்ணியும் பெருமையாக இருந்தது. அறிவுத்தேடல் இனிக்கும்தானே! நாளை மாணவர்களுக்கு இதை அழகாக எடுத்துச் சொல்வேன் என்று நினைக்கும் போதே மனசெங்கும் பரவசம் தொற்றிக்கொண்டது.

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அந்த நேரம் பார்த்து தலைமை ஆசிரியர் அவரை அழைப்பதாகச் சொல்ல, மாணவ மாணவியரிடம் ஆளுக்கு

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு

  வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு இ ராபர்ட்   ஐந்தாம் வகுப்பில் புதியதாக வந்து சேர்ந்திருந்தான் . பார்ப்பதற்கு வெள்ளைக்காரரைப் போல சிவப்பாக இருந்தான் . யார் வகுப்பிற்கு வந்தாலும் அவனையே விசாரித்தார்கள் . வகுப்பறையைத் தாண்டி பள்ளி முழுவதுமே அவனையே   வியப்பாக   பார்த்தார்கள் .   இ ராபர்ட் வந்ததிலிருந்து இ ராமு தன் நிறத்தையே அடிக்கடிப் பார்த்துக்கொண்டான் . கருப்பாகவும் இல்லை . வெள்ளையாகவும் இல்லை . இரண்டு நிறமும் கலந்த மாதிரி இருந்தது . நாம் ஏன் சிகப்பாக பிறக்க வில்லை என்று தனக்குள் கேட்டுக்கொண்டான் . சிவப்பாக இருந்தால் ஏன் இப்படி மதிப்பாக பார்க்கிறார்கள்   என்பதை   ராமுவால் புரிந்துகொள்ள   முடியவில்லை . இ ராமு தன் நண்பர்களிடம் அடிக்கடி இது பற்றி கேட்டான் . அதெல்லாம் ஒன்னுமில்லடா , நம்ம கண்ணுக்குத் தான் அப்படி அழகா தெரியுது ! நீ நல்லா படித்து முதல் ரேங்க் எடுத்தா அப்புறம் உன்னைப்பற்றியே எல்லோரும் பேசுவார்கள் . ராமுவுக்கு இது சரி என்று பட்டாலும் . மனம் மட்டும் கேட்பதாக இல்லை . என்ன செய்வதென்று யோசிக்கத்தொ