Skip to main content

அறியாமையும் அறிவியலும்

ன்று வகுப்பிற்கு ஒரு புதிய ஆசிரியர் வந்திருந்தார். சராசரி உயரத்திற்குச் சற்று குறைவான தோற்றத்தில் இருந்தார். கரும்பலகையைத் துடைக்கும் போதெல்லாம் அவரின் பாதங்கள் மேலே தூக்கி நிற்பதைப் பார்த்து, மாணவர்கள் சப்தம் வராமல் சிரித்தப்படி இருந்தனர்.அவர் சட்டென திரும்பும் போது மாணவர்கள் மவுனமாக சிரிப்பதை அவர் காண முடிந்தது. இது பற்றியெல்லாம் அவர் கவலைப் படாமல் பாடம் நடத்துவதிலேயே குறியாக இருந்தார். அவர் நடத்தும் விதத்தை விரைவில் புரிந்து கொண்ட மாணவர்கள் மெல்ல மெல்ல அமைதியாகிவிட்டனர்.


அப்போதுதான் ஒரு மாணவர் புதியதாக வகுப்பிற்கு வந்தார்.ஆசிரியர் அவரை உள்ளே அழைத்த படியே, உனது பெயரென்ன? உனது அப்பா என்ன செய்கிறார்? என்று கேட்டார். “எனது பெயர் இராமமூர்த்தி. எனது அப்பா மாடு வளர்க்கிறார்; அதோடு மாட்டு தரகு வேலையும் பார்க்கிறார்.”என்றான் அமைதியாக. உடனே எல்லா மாணவர்களும் சிரித்து விட்டனர். இதை சற்றும் எதிர்பாராத ஆசிரியர் மாணவர்களை அமைதியாக இருக்கச் சொன்னார். அன்றைய வகுப்பை ஒருவழியாக முடித்து விட்டு வெளியே வந்துவிட்டார். இருந்தாலும் ‘மாடு வளர்ப்பது’ என்றவுடன் மாணவர்கள் கேலியாக சிரித்தது, இவர் மனதை என்னவோ செய்தது. இந்த சிந்தனை அவர் மனதில் சுழன்றபடியே இருந்தது.


சில நாட்கள் கழித்து, ஒரு இலக்கிய விழாவில் கால்நடை மருத்துவர் ஒருவரை சந்திக்கின்ற வாய்ப்பு ஆசிரியருக்கு கிடைத்தது. ஒரு சிறிய அறிமுகத்திற்குப் பிறகு, இருவரும் இயல்பாக பேச ஆரம்பித்தனர். வகுப்பில் நடந்தவற்றை பற்றி மெல்ல அவரிடம் விளக்கினார். எனக்கு உங்கள் மாணவர்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றார். ஆசிரியரும் உடனடியாக மாணவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்.


கால்நடை மருத்துவர் அமைதியாக பேச ஆரம்பித்தார். மாணவர்களாகிய நீங்கள், அறிவியல் ரீதியாக சிந்திக்க வேண்டும்.அப்பொழுதுதான் உண்மையிலேயே நமது வாழ்க்கைக்கு பயன்படும். சரி, ‘மாடு வளர்ப்பது’ என்றால் என்னவென்று யாராவது சொல்லுங்கள் என்றார். மாட்டுக்கு தவுடு, புண்ணாக்கு போட்டா தானா வளர்ந்திடும் சார்! என்றான் ஒரு மாணவன். நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான், ஆனால் அறிவியல் ரீதியாக இன்னும் நிறைய சிந்திக்க வேண்டும். வயிறு நிறைவாக மாடு தீனி எடுக்குது , ஆனால் பால்தான் கறக்க மாட்டேங்கிறது! என்று நிறைய பேர் சொல்வதை நானும் கேட்டிருக்கேன். இதுவும் அறிவியல் பூர்வமானது அல்ல. வைக்கோல், தவிடு, புண்ணாக்கு போன்றவற்றில் அதிகம் மாவுச்சத்து உள்ளதே தவிர , பால் அதிகம் கரக்கத் தேவையான புரதம் அதில் இல்லை. எனவே புரதம் அதிகம் இருக்கும் தீவனத்தை கொடுக்க வேண்டும். இதுவே அறிவியல் பூர்வமான உண்மையாகும். அதாவது காராமணி, அவரை, சணப்பு கொள்ளு, குதிரைமசால், சங்குபுட்பம் போன்ற பயறுவகை தீவனங்களில் மாட்டிற்கு தேவையான புரதம், சுண்ணாம்பு, மணிசத்து போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த பயிருவகை மற்றும் மரவகை பசுந்தீவனங்களை அதிகம் கொடுப்பதால் மட்டுமே மாடுகள் அதிகமாக பால் சுரக்கும். இந்த சிறிய விபரம் நமது விசாயிகளுக்கு தெளிவாக நாம் தான் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போதுதான் பால் உற்பத்தி அதிகமாகும்.நமது வாழ்க்கையும் முன்னேறும். இது புரியாமல் நாமே கேலி பேசி வெளியே நிற்பது எப்படி சரியாகும்?


மாணவர்கள் மத்தியில் அமைதி நிலவியது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நாம் எவ்வளவு அறியாமையில் இருக்கிறோம் என்பது மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது. நமது அப்பாக்களைப் போன்ற விவசாயிகளும் எவ்வளவு அறியாமையில் உள்ளனர் என்பதே , நீங்கள் எடுத்து சொன்ன பிறகுதான் எங்களுக்கே தெரிகிறது. விவசாயிகளுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டியதும் நிறைய இருக்கிறது என்பதை புரிந்துகொண்டோம்.


அதுமட்டுமல்ல மாணவர்களே! மாட்டை எவ்வாறு தேர்வு செய்வது? பராமரிப்பது? வளர்ப்பது?பாதுகாப்பது? என்று ஒவ்வொரு வகையிலும் நாம் அறிவியல் வழியாக யோசிக்க வேண்டும். அதற்கு மற்றவர்கள் உதவியை நாம் கட்டாயாம் நாட வேண்டும். சரி இது வரைக்கும் இன்றைக்கு போதும் , மற்றுமொறு நாளில் நாம் சந்திப்போம் என்று விடைபெற்றார்.


மாணவர்களாகிய நாங்கள் வியந்துபோனோம். இந்த கால்நடை மருத்துவரை நினைக்க நினைக்க பெருமையாக இருந்தது. அப்பொழுதுதான் எங்கள் ஆசிரியர் வந்து சேர்ந்தார். அனைவரும் ஆசிரியரைச் சூழ்ந்துகொண்டோம். எங்களை எங்களுக்கே யார் என்று புரிய வைத்துவிட்டீர்கள். உங்கள் உருவத்தைப் பார்த்து நாங்கள் நகைத்தோம். அதையெல்லாம் நீங்கள் கண்டு கொள்ளவில்லை. இப்பொழுது எங்கள் மூன்னால் விஸ்வரூபம் எடுத்து விட்டீர்கள். “அதெல்லாம் சரிதான் , நீங்கள் அறிவியல் பார்வை பெற தொடர்ந்து படிக்க வேண்டும். இதற்காக கடுமையாக உழைக்கவேண்டும்” என்றார் ஆசிரியர்.


அப்போதுதான் ஒரு மாணவன் ஓடி வந்தான், சார்! சார்! நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று என்னை திட்டுறாங்க சார்! என்றான் வருத்தத்தோடு. மாணவர்களே பார்த்தீர்களா! இனி நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், மாடு மேய்ப்பதன் அறிவியல் என்னவென்று ஆய்ந்து அறிந்து சொல்ல வேண்டியதுதான். இதில் நகைப்பிற்கு இடமில்லை. இதை நாம் முக்கியமானதாக கருதி செய்யாவிட்டால் இந்த அறியாமை தோடரவே செய்யும். அதுமட்டுமல்ல நாமும் அறிவியல் பார்வை பெறாமல் இப்படியே இருக்க வேண்டியதுதான். நமது வாழ்க்கையிலும் எந்த முன்னேற்றமும் வராது.அறியாமை அறியாமையையே பெற்றெடுக்கும். அறிவியலோ தெளிவை பெற்றெடுக்கும்.


“சார்! இப்படியெல்லாம் எங்களுக்கு யாறும் சொன்னது கிடையாது சார்! எங்கள் மீதான உங்கள் அன்பு ஒன்று போதும். நாங்கள் தொடர்ந்து சிந்திப்போம். நாங்களும் முன்னேறுவோம்; இந்த நாடும் முன்னேற பாடுபடுவோம்”. என்று நாங்கள் மகிழ்ச்சியில் நெகிழ்ந்த போது, ஆசிரியர் எங்களை அன்பாக தட்டிக் கொடுத்து விடைபெற்றுச் சென்றார்.

Comments

  1. nallathoru ariviyal katturai. vaazhththukkal

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...