Skip to main content

யார் அந்த இளைஞன் ?

யார் அந்த இளைஞன்?

நான் எனது ஆசிரியரின் அலோசனையோடு புத்தகங்கள் , இணையதளம் மற்றும் இன்றைக்கும் நாட்டிற்காக பாடுபட்டு கொண்டிருக்கும் தலைவர்களிடம், நமது நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தேசத்தலைவர்களைப் பற்றி தகவல்களைத் தேடிக்கொண்டிருந்தேன்.அப்படி ஒருநாள் இணையதளத்தில் தேடியபோது, ஓர் இளைஞன் வேகத்தோடு நீதிமன்றத்தின் உச்சியில் பறந்த வெள்ளைக்காரனின் கொடியை இறக்கிவிட்டு நமது தாய்நாட்டின் மூவர்ணக்கொடியை துணிச்சலாக ஏற்றியச் செய்தியைப் படித்தபோது எனக்குள்ளும் ஒரு வேகம் வந்து அப்படியே எழுந்து உட்கார்ந்து விட்டேன்.

பகத்சிங் நினைவு நாளை நாடெங்கும் தெரியப்படுத்துவதற்காகவும், வெள்ளைக்காரர்களுக்கு ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் வெள்ளைக்காரனின் கொடிய இறக்கிவிட்டு நமது மூவர்ணக்கொடிய ஏற்றவேண்டும் என்பது காங்கிரஸ்காரர்களின் திட்டம். ஆனால் அன்றைக்கு ஆங்கிலேய கவர்னர் அங்கு வருவதாக இருந்ததால் திட்டமிட்டபடி கொடியேற்ற முடியவில்லை.ஆனால் இந்த இளைஞனோ ஏன் கொடியை எற்றவில்லை என்று கேட்டப்படியே துணிச்சலாக நீதிமன்றத்தில் ஏறி கொடியை ஏற்றிவிட்டார். இராணுவம் சுதாரித்துக்கொண்டு சுட ஆரம்பித்துவிட்டனர். இவரோ கொடிமேடையில் பதுங்கிக்கொண்டார். பின்னர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறைதண்டணைப் பெற்றார். ஒரு வருடம்தானா என இந்த இளைஞன் எதிர்கேள்வி எழுப்ப, நீதிபதியோ தடுமாறிப் போய், உன் வயதிற்கு இதுவே அதிகம் என்றபடி சென்றுவிட்டாராம். இந்த துணிச்சல்கார இளைஞன் கதை இதோடு முடியவில்லை, ஒரு சுதந்திரப்போராட்ட தியாகி எனக்கு கொடுத்த புத்தகத்தில் இன்னொரு சம்பவம், அவர் தேசத்தின் விடுதலக்கு எவ்வளவு தூரம் தீவிரமாக இருந்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த இளைஞன் பஞ்சாபில் சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவதர்க்காக நேருவை அழைத்து பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் ஆங்கிலேயர்கள் பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்தது மட்டுமல்லாது அனைத்து மைதானத்தையும் பிடித்துக்கோண்டு பலத்த காவல் போட்டுவிட்டனர். ஆனால் விடுவாரா இந்த இளைஞர் திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடத்த தீவிரமாக யோசித்தார். முடிவாக தனது கோதுமை வயல்களையே பொதுக்கூட்டம் நடத்த சிறந்த இடமாக தேர்வு செய்து, கோதுமை வயல்களையெல்லாம் அழித்து பொதுக்கூட்ட மேடையும் பொதுமக்கள் அமர்வதர்க்கான மைதானத்தையும் உருவாக்கிவிட்டார். நேருவும் இந்த இளைஞனின் வேண்டுகோளையேற்று தடையை மீறி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வீர உரையாற்றினார். இப்படிப்பட்ட தன்னலம் கருதாத இளைஞர்களால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என நினைக்கும்போது ரத்தம் சூடேரிக் கொதிக்கிறது.

இந்த இளைஞரைப் பற்றிய இன்னொரு சம்பவத்தை ஒரு தோழர் சொன்னபோது கண்ணீரே வந்துவிட்டது. அடடா! எத்தனை தியாகம் என உள்ளமெல்லாம் கொதித்தது.

அதுதான் கொடுமைக்கு பெயர்போன லாகூர் சிறைச்சாலையில் அந்த இளைஞனை ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்துவிட்டது. அதுவும் தனிமைச்சிறையில் இருட்டறையில் அடைத்துவைக்கப்பட்டார். அதுவும் மலமும் சிறுநீருக்கும் இடையில்தான் இருக்கவெண்டும். சுத்தம் செய்ய மாட்டார்கள். உணவும் ஒரு சந்து வழியாகத்தான் வந்து விழுமாம். வாரம் ஒரு தடவை தரப்படும் தண்ணீரை வைத்துதான் உயிர் வாழவேண்டும். மூன்று மாதங்கள் நீடித்த இத்தனை கொடுமையான தனிமைச் சிறையால் நசிந்து போய்விட்டார் இந்த இளைஞன்.

அதோடு மட்டுமல்ல கண்பார்வையும் மங்கிப்போய்விட்டது. அயர்லாந்து நாட்டிலிருந்து வந்த மருத்துவர் இந்த இளைஞனின் நிலையைக் கண்டு மனம்

கொதித்தார். கண் பார்வையே போய்விடக்கூடிய நிலையில் உள்ள இவருக்கு தன்னால் நலமாக இருப்பதாக சான்றிதழ் தரமுடியாது மறுத்து விட்டார். இதனால் வேறு வழியின்றி சிறை நிர்வாகம் இவரை வேறு சிறைக்கு மாற்றி விட்டது.

எவ்வளவு துணிச்சல்! எவ்வளவு சகிப்புதன்மை! இத்தகைய இளைஞர்கள் பகச்சிங்கின் அடியொற்றி துணிந்து எழுந்திருக்கிறார்கள். உயிரையே துச்சமென மதித்து நாட்டிற்க்காக போராடத்துணிந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து மனம் துடிக்கிறது. இன்றைக்கு நாம் செயலற்று பொம்மைகளாக மாறாமல் இருக்க இது போன்ற தலைவர்களின் வாழ்வை நாம் கற்க வேண்டும். ஊரரிய செய்யவேண்டும். நாட்டிற்காக நாமும் தீராது உழைக்க வேண்டுமென நெஞ்சம் துடித்தெழுகிறது.

நான் தேடியெடுத்த இந்த தகவல்களோடு எனது ஆசிரியரை சந்தித்தேன். அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இப்படி ஒரு வீரன், அதுவும் பகச்சிங்கையொத்த சுத்த வீரனை நீ கண்டுபிடித்திருக்கிறாய்! பாராட்டுக்கள்! என்று மனதார எனது கையைப் பிடித்து தன்னால் ஆனமட்டும் குலுக்கினார். நான் மெய்சிலிர்து போனேன்.

இதே உணர்வோடு இன்றைய சூழ்நிலையை உள்வாங்கி ஓர் உணர்வு மிக்க கட்டுரை எழுது என்றார். நிச்சயம் மாநிலம் தழுவிய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறும் என உணர்வு பொங்க கூறினார்.

இந்த பெருமையெல்லாம் உங்களைத்தான் சாருமென்றேன். இந்த கட்டுரை போட்டி பற்றி உங்களை நான் அனுகியபோது நீங்கள் கூறிய வழிகாட்டுதல்படியே நான் அனைத்து வழிகளிலும் தேடினேன். இதனாலேயே ஒரு வித்தியாசமான விடுதலைப் போராட்ட வீரரை நான் கண்டுகொண்டேன். நீங்கள் என்

முன்னே மதிப்பு மிக்கவராக உயர்ந்து கொண்டே போகிறீர்கள். இது புகழ்ச்சி அல்ல. உண்மை என நான் மகிழ்வோடு தெரிவித்தேன்.

அதுசரி! யார் அந்த விடுதலை போராட்ட இளைஞன்? சார் அவர்தான் "ஹரிகிருஷ்ணசிங் சுர்சித்"என்ற பஞ்சாபின் வீர மைந்தர்.

ஒ! இப்போது புரிகிறது! சுதந்திரத்திற்கு பிறகும் தனது தொண்ணுற்று இரண்டு வயதுவரை நாட்டு மக்களுக்காக, தேசஒற்றுமைக்காக அயராது பாடுபட்டு மறைந்த தோழர் சுர்சித்தானே! என ஆசிரியர் ஆர்வம் பொங்க சொன்ன போது, மாணவனாகிய நானும் மகிழ்ந்து ஆமோதித்தேன்.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

மாணவர்கள் கொண்டாடிய அறிவியல் விழா!

             காலை இறைவணக்கத்தை முறைப்படி செலுத்துவதற்காக மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் வரிசையாக நிற்கத் தொடங்கினார்கள். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை ஒழுங்கு படித்தியபடியே மேடைக்கு வந்தார்கள். சற்று நேரத்தில் பள்ளியின் முதல்வரும் மேடைக்கு அருகில் வரவும்,, மாணவர்களிடையே சப்தம் படிப்படியாக குறைந்து அமைதி நிலவியது. மாணவத் தலைவர் இறைவணக்கத்தை ஆரம்பித்து வைக்க, மாணவர்கள் ஒரே குரலில் பாடி முடித்தார்கள். சில முக்கியச் செய்திகள் மற்றும் அறிவிப்புகளோடு அன்றைய இறைவணக்க நிகழ்வு முடிவுக்கு வந்தது. மாணவர்கள் தத்தம் வகுப்பிற்குச் செல்லத் தொடங்கினார்கள். மைதானம் வெற்றிடமாக மாறியது. சிறிது நேரத்தில் மீண்டும் சில மாணவர்கள் மைதானத்தை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக ஓடினார்கள். பள்ளி முதல்வர் தொடங்கி ஆசிரியர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏன் சில மாணவர்கள் மட்டும் மீண்டும் ஏதோ அணிவகுப்பு நடத்த முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை!. மீண்டும் மைதானத்தில் ஓடிய மாணவர்கள் ஏதோ ஒரு ஒழுங்கிற்கு வந்தது போல தெரிந்தது. குறுக்கும் நெடுக்குமாக ஒரு அட்

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது.