Skip to main content

இந்திய விஞ்ஞானி அன்னாமணி



இந்திய விஞ்ஞானி அன்னாமணி




“பத்தாயிரம் கருத்துகளைவிட ஒரு சோதனை செய்து பார்ப்பது மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்”, இதையே எப்பொழுதும் தன்னோடு பணிபுரிபவர்களுக்கு விஞ்ஞானி அன்னாமணி சொல்லிக்கொண்டே இருப்பார். தனது வாழ்வின் பெரும்பகுதியை புனேயில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையத்திலேயே செலவிட்டார். அவரின் பணி ஓய்வுக்கு பிறகு இராமன் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த மையத்தோடு இணைந்து இந்திய அறிவியல் அமைப்பில் வெப்ப மண்டல வானியல் ஆராய்ச்சியை தனது இறுதிநாள் வரை மேற்கொண்டார். இங்கு இந்திய நாட்டின் சூரிய கதிர்வீச்சுஆற்றல்  மற்றும் காற்றின் ஆற்றல் வளமை குறித்து ஆய்வை மேற்கொண்டார். இந்த இரண்டு ஆற்றல்கள் குறித்த அவரின் ஆய்வுத் தரவுகளே  இன்றும் மின்உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது.

அன்னாமணி கேரள மாநிலத்தில் எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பீர்மேடு என்னும் ஊரில் 1918-ல் ஆகஸ்டு மாதம் 23-ஆம் நாள் பிறந்தார். அவரின் தந்தையார் திருவனந்தபுரம் பொதுப்பணித்துறையில் பொறியாளராகவும்,  அவரின் தாயார் ஆசிரியராகவும் பணியாற்றிவந்தனர்.  ஐந்து ஆண்பிள்ளைகளும் மூன்று பெண்பிள்ளைகளும் கொண்ட பெரிய குடும்பமமாக வாந்து வந்தனர். இதில் ஏழாவது பிள்ளையாக பிறந்தவர்தான் அன்னாமணி. இவர்களது குடும்பம் பண்டைய சிரியன் கிருஸ்தவ மதத்தைச் சார்ந்ததாகும். தீவிர மதப்பற்றாளராக இருந்தாலும் பகுத்தறிவாதத்தை தனது பிள்ளைகளுக்கு ஊக்குவித்தார். அதாவது எதையும் சோதித்து அறியாமல் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதை எப்பொழுதும் வலியுறுத்துவார். அன்னாமணியிடம் இந்த பண்பு கடைசிவரை ஒட்டிக்கொண்டதில் ஆச்சரியமில்லை.

கேரளாவின் பசுமையான மழைக்காடுகள், வற்றாத ஆறுகள், முடிவற்ற மலைத்தொடர்கள் மற்றும் அதன்  நீண்ட கடற்கரை குழந்தை அன்னாமணியை வெகுவாக ஈர்த்துவிட்டது. உலகிலேயே மிகவும் அழகான இடம் இதுதான் என நம்ம ஆரம்பித்துவிட்டாள். விடுமுறை நாட்களில் அன்னாமணி தனது  தந்தைக்கு சொந்தமான ஏலக்காய் தோட்டங்களில்தான் அலைந்து திரிவாள். இந்த பழக்கமே அவளுக்கு  இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொடுத்தன. இயற்கையின் மீதிருந்த ஈடுபாடு அன்னாமணியை வாழ்நாள் முழுவதும் உயிர்ப்போடு வைத்திருந்தது.

அன்னாமணி தனது பள்ளிப்படிப்பை திருவனந்தபுரத்திலும், தனது கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியிலும் படித்து முடித்தார். இயற்பியல் மற்றும் வேதியியல் படிப்பில் நன்கு தேர்ச்சி பெற்றார். அதே நேரத்தில் தனது சொந்த கைகளில் ஆய்வு செய்வதையே அவர் பெரிதும் விரும்பினார். அவர் மேலும் ஆய்வு செய்ய விரும்பி பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ஆய்வாளாராக வேலைக்கு சேர்ந்தார். அப்பொழுது நோபல் விஞ்ஞானி சர்.சி.வி. இராமன் துறைத்தலைவராக இருந்தார். இந்த நல் வாய்ப்பை அன்னாமணி நன்கு பயன்படுத்திகொண்டார்.

மாணிக்கங்கள் எவ்வாறு ஒளியை உள்வாங்கி ஒளிர்கின்றன என்பதையும் அதேநேரத்தில் எவ்வாறு ஒளியை உறிஞ்சுகின்றன என்பதையும் தனித்னியாக ஆய்வுசெய்தார் அன்னாமணி.  இந்த ஆய்வுகளின் விளைவாக வைரங்களின் ஒளிரும் தன்மையை ஆய்வு செய்ய பணிக்கப்பட்டார். வைரங்களின் ஒளிரும் தன்மைக்கும் நிறமாலைக்குமான தொடர்பின் புதிய காரணியை இவர்களின் குழு கண்டுபிடித்தது. இதில் அன்னாமணியின் பங்களிப்பு பெரிதும் பாராட்டைப் பெற்றது. தொடர்ந்து ஐந்தாண்டுகால ஆய்வுப்பணியில் தன்னைக் கரைத்துக்கொண்ட அன்னாமணிக்கு வானிலையை  அளக்கக்கூடிய கருவிகளை எவ்வாறு வடிவமைப்பது மற்றும் அதன் துல்லியத்தன்மையை எவ்வாறு வரையறுப்பது என்பது குறித்து  ஆய்வு  செய்ய ஒரு வாய்ப்பு அவரைத் தேடிவந்தது. இங்கிலாந்தில் உள்ள வானிலை ஆய்வகத்தில் இந்திய அரசின் உதவித்தொகையோடு தனது ஆய்வை மேற்கொண்டார். அடுத்த மூன்றாண்டுகளில் வானிலையை அளவிடும் கருவிகளை உருவாக்குவதில் சுயமுயற்சியோடு நன்கு தேர்ச்சிப்பெறிருந்தார். அதோடுமட்டுமல்லாமல் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் உள்ள பல்வேறு ஆய்வகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவராக இந்தியா திரும்பினார்.

புனேவில் உள்ள இந்திய வானிலை கழகத்தில் சேர்ந்து  தன் பணியைத் தொடர்ந்தார். நவின வானிலைக் கருவிகளை உற்பத்தி செய்வதற்கு தன்னை அர்பணித்துகொண்டார். அப்பொழுதெல்லாம் வானிலையை அளவிடும் கருவிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தே பயன்படுத்தி வந்தனர். அன்னாமணி  தனது மூன்றாண்டுகால தொடர் உழைப்பின் மூலம் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். தானே சுயமாக மழை அளக்கும் கருவி, காற்றின் வேகம் அளவிடும் கருவி, வானியலின் அழுத்தம், வெப்பனிலை  காற்றின் வேகம் மற்றும் இதன் தொடர்புடைய மற்ற பரிமாணங்களையும் ஒரே நேரத்தில் அளவிடக்கூடிய விதத்தில் மிக நவினமாக மிக துல்லியமாக வடிவமைத்தார். இதற்கு வேண்டிய பல உபகருவிகளையும் இவரே வடிவமைத்து செய்தும் காட்டினார். இத்தகைய மாபெரும் உழைப்பை அன்னாமணியால் மட்டுமே தரமுடியும் என்ற நற்பெயரையும் மிக விரையில் பெற்றார். அதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று அங்கு நிலவும் வானிலைக்கு எற்ப அளவீடுகளை எவ்வாறு துல்லியமாக அளவிடுவது குறித்து ஆய்வு செய்து அதையும் பல்வேறு தரவுகளோடு வரிசைப்படுத்தி புனே மற்றும் கல்கட்டாவில் வைத்துள்ளார்.

 

இன்றைக்கு சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவது பற்றி நிறைய செய்திகளை நாம் பார்க்கிறோம். இதற்கெல்லாம் முன்னோடி நமது அன்னாமணிதான். இந்தியா முழுவது சூரிய கதிர் வீச்சுகளை அளவிடுவதற்கு அன்னாமணி அரும்பாடு பட்டார். அதற்காக துல்லியமாக அளவிடும் கருவிகளை வடிவமைத்தார். ஆசிய நாடுகளுக்கு தனது உதவிகளை மறக்காமல் செய்தார். இதனால் ஆசிய நாடுகளின் தலைவராக ரஷியா, சீனா , ஜப்பான் போன்ற நாடுகளுக்கு  ஆய்வு பணிகளில் வழிகாட்டினார். இவர் ஒரே நேரத்தில் பல ஆய்வு பணிகளை திட்டமிட்டு வழிகாட்டுபராகவும் செயல்படுத்துபவராகவும் இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அளவிடும் கருவிகளின் தொழில் நுட்ப வரையரைகளை துல்லியமாக வழங்கிக்கொண்டே இருந்தார். இதுவே இன்றும் வழிகாட்டியாக இருந்து வருகிறது. நாடு முழுவதும் 24 சூரிய கதிர்வீச்சு அளவிடும் நிலையங்களை அமைத்து கொடுத்தார். சர்வதேச கதிர்வீச்சி அமைப்பில் நீண்டகால உறுப்பினராக செயலாற்றியவர். பிரெஞ்சு முறையிலான இந்திய வானிலை அளவிடும் கருவிகள் அனைத்தையும்  மெட்ரிக் அளவீட்டு முறைக்கு மாற்றிக்கொடுத்தார். இது போன்ற மாபெரும் சவாலான  செயலையும் திறம்பட செய்து முடித்தார்.

அடுத்ததாக வளிமண்ட ஓசோனை அளவிடும் முறையினையும் வகுத்துக்கொடுத்தார். இதற்காக  ஓசோன் - வானிலைத் தரவைப் பதிவிடும் கருவியை வடிவமைத்துக்கொடுத்தார்.” அதாவது தரைமட்டத்திலிருந்து 35மீட்டர் உயரம் வரையிலான வெப்ப மண்டப் பகுதிகளில் ஓசோன் வாயு எவ்வாறு செங்குத்தளவில் பரவியுள்ளது என்பதை துல்லியமாக  அளந்து தரவுகளைப் பதிவிட்டார். இது இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகியுள்ளது.மற்ற நாடுகளில் இந்த உயரத்திற்கு மேலே  ஓசோனை அளவிடும் முறையே சாத்தியமாகியுள்ளது. ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்துள்ளதை கண்டுபிடித்த பிறகுதான் ஓசோனை அளவிடுவது உலகம் முழுவதும் பிரபலமானது. இதில் இந்தியா அன்னாமணி மூலம் ஏற்கனவே சாதித்திருந்தது. மற்ற உலக நாடுகளுக்கும் அன்னாமணி தலைமையேற்று உதவியுள்ளார்.

 

இன்றைக்கு காற்றாலை சக்தியின் மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் இந்தியாவில் தயாராகிறது. இத்தகைய சாதனைக்கு அன்னாமணியே மிக முக்கிய காரணமாகும். இந்திய தேசிய அறிவியல் கழகத்தின்  ஜி.ராமச்சந்திரன் மெடலை இந்திய அரசு அன்னாமணிக்கு வழங்கி கவுரவித்தது. அவரின் இறுதி நாள் வரை இந்திய நாட்டிற்கு மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் தனது  பங்களிப்பை வழங்கியபடியே இருந்தார்.

அவர் ஒரு கிருத்துவராக பிறந்து வளர்ந்தாலும் மற்ற மதத்தவரின் மதிப்புகளுக்கு உயர்ந்த இடம் தந்தார். இயற்கையின் மீது தீராத காதல் கொண்டவராக கடைசிவரை வாழ்ந்தார். மிகத்தீவிரமாக புத்தகம் படிப்பவராக சிறுவயது முதலே திகழ்ந்தார். இயற்கையையும் இசையையும் ஒருசேர ரசித்து வாழ்ந்தார். இந்தியாவில் மட்டுமல்ல் உலகம் முழுக்க தனது  நண்பர்களோடு இறுதிவரை தொடர்வில் இருந்தார். ஆய்வு செய்வதையே தனது வாழ்க்கையாக்கிக்கொண்ட அற்புத பெண்மணி அன்னாமணி ஆகஸ்டு மாதம் 16-ம் தேதி திருவனந்தபுரத்தில் தனது வீட்டில் காலமானார். அவரின் இந்த மகத்தான வாழ்க்கை இந்திய பெண்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியருக்கும் மிகப்பெரிய பாடமாகும்.

 

 

 

 

Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஊரின் புதிய அடையாளம்

இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது. ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது....

மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினவிழா

சு தந்திரதின விழாவில் கொடியேற்றி துவக்கி வைப்பதற்காக, மாணவர் நல சங்கம் சார்பில் என்னை அழைத்திருந்தார்கள். முப்பதாண்டுகாலமாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவன் என்ற தகுதி ஒரு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமான இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக என்னை தயார் செய்துகொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்படும் ஓசைகேட்டு திறந்தேன். கையில் தேசியக்கொடியோடு மாணவர்கள் சீருடையில் வந்திருந்தனர். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. வாங்க! வாங்க! என்று பரவசத்தோடு உள்ளே அழைத்தேன். அனைவரும் ஒரே குரலில் “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! கொண்டாடுவோம்! என்றபடியே ஒரு வண்ண காகிதத்தை கையில் கொடுத்துவிட்டு அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுதந்திரமே மாணவர் உருவில் வீட்டு வந்தது போல இருந்தது. அவர்கள் கொடுத்துச்சென்ற காகிதத்தின் இரு பக்கத்திலும் பதினைந்து என்று எண்ணால் எழுதப்பட்டிருந்தது. மெல்ல பிரித்து பார்க்க அது எட்டாக மடிக்கப்பட்டிருந்தது. இது சுதந்திரதினத்தை குறிக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. காகிதத்தின் உள்ளே “ சுதந்திரத்தை பாதுகாப்போம்! வறுமையற்ற வளமான ஓர் இந்தியாவை உருவாக்குவோம்! ” எ...