தாத்தவும்
பேத்தியும்………. வெறும்
ஸ்கூட்டர் பயணமல்ல! எதிர்கால வாழ்வின் பயணம்!
தொடரட்டும்!“தாத்தவும் பேத்தியும்” என்ற குருநாவலை
வாசித்தேன். மகிழ்ந்து வாசித்துகொண்டே வந்த நம்மீது, நம்சமூகத்தின் மீது ஒரு சாட்டையடி வந்து விழுகிறது. இந்த சூழல் எப்பொழுது மாறும் என்று ஏங்க வைத்து விடுகிறார்.
சரி
கதைக்கு வருவோம்!
பேத்தியை
பள்ளிக்கு அழைத்துச் செல்வதும் வருவதும் அவருக்கும் விருப்பமான செயலாகிவிடுகிறது. பேத்தியின் மழலைச் சொற்களுக்காக மட்டுமல்ல அவள் எழுப்புகிற்
விந்தையான கேள்விகளுக்கு அவராமல் பதில் சொல்லமுடியாமல் திணருகிறார். அவள் எழுப்பும்
கேள்விகளை அவர் ஒருபொழுதும் தடுப்பதில்லை. அவர் மிகவும் விரும்பி ரசித்து கேட்பது அவருக்கும
சுகமாக இருக்கிறது. மொட்டு மலர்வது பொல புதுப்புது சிந்தனைகள் அரும்புவதில் வியந்து
போகிறார். இத்தனை சிந்தனைகளா! இந்த குழந்தைகள் வாழ்வின் அற்புதங்கள் என்று ஒவ்வொரு
நாளும் வியந்து போகிறார்.
அப்படிபட்ட
தன் பேத்தி ரேங்கில் சற்று குறைந்து விட்டால் என்பற்காக போ ! வெளியில போய் நில்லு!
என்று அவளின் தாய் சொல்லிவிடுகிறாள். அந்த தாயோ ஒரு கல்லூரி பேராசிரியர். இந்த வார்த்தைகளை
கேட்ட தாத்தா உடைந்து போகிறார். இந்த தாத்தா
சாதாரண நபரில்லை! அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். நமது இந்திய கல்விமுறையைப் பற்றி நன்கு
அறிந்தவர். அதை மாற்ற வேண்டுமென துடிப்பவர்.
குழந்தைகளுக்கும்
மகிழ்ச்சியாக வாழ உரிமை உண்டு என்பதை அறியாமல் நாம் வாழ்கிறோம். அவர்களின் உரிமைகளை
புரிந்து கொள்ளாத பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலையை எண்ணி வருத்தமடைகிறார்
எல்லா குழந்தைகளும் திறமையானவர்கள் தான் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவர்.
ஆனாலும்
இந்த நிலமை மாறும் என்ற நம்பிக்கையோடு தன் பேத்தியின் கேள்விகளில் மகிழ்ந்தபடி எப்பொழுதும்போல
பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்வதாக கதை
முடிகிறது.
குழந்தைகளிடம்
நூறு திறமைகள் புதைந்து கிடக்கின்றன, மதிப்பெண் என்ற ஒரு அளவுகோல் மட்டும் போதாது என்பதை
நாம் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற பேராசியர் மாடசாமி சொன்ன வார்த்தைகள் எனக்கு
இப்பொழுது நினைவுக்கு வருகிறது.
உங்களுக்கும்தானே!
குழந்தைகளுக்கு மகிழ்வான சூழலை உருவாக்குவோம்! அவர்கள் திறமையானவர்களாக நிச்சயம் வருவார்கள்.
இன்னும்
பல கதைகள் அவர் எழுதவேண்டுமென வாழ்த்தி விடைபெறுகிறேன்.
அன்புடன்
அன்பழகன்
Comments
Post a Comment