Skip to main content

வாழ்வின் தெறிப்பு

      வாழ்வின் தெறிப்பு

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்சியை ஒருநாள் பார்க்க நேர்ந்தது. அதில் பூவையார் என்ற சிறுவன் மிகச் சிறப்பாக பாடினான். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

     அதில் பூவையார் பற்றிய ஒரு குறும்படம் ஒளிபரப்பானது. அதில்  அவனின் தாய் கண்ணீரோடு அவன் அருகில் இருந்தாள். பூவையார் சிறுவனாக இருக்கும் போதே அவனின் தந்தையார் இறந்து விட்டார். அந்த குடிசை வீட்டில் தன் தாயின் சொற்ப வருமானத்தில் அவன் வாழ்க்கை நகர்கிறது. கானா பாட்டு பாடுபவர்களோடு ஆர்வம் ஏற்பட்டு அந்த குழுவில் சேர்ந்து பாட கற்றுக்கொள்கிறான். அவனது குரலில் ஒரு புதுமையும் ஈர்ப்பும் மிளிர்கிறது. இதனால் அவனும் பல கச்சேரிகளில் பாடி புகழ் பெறுகிறான். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்சியிலும் பங்கேற்று அனைவரது மனதையும் கவர்ந்து விட்டான். இப்படியாக அந்த குறும்படம் அவனின் எளிய வாழ்வை எடுத்துக் காட்டியது.

     அப்போது அவனின் தாயிடம் ஒரு கேள்வி கேட்கிறார்கள். இந்த சின்ன வயதில் அவன் பாடி பணம் கொண்டு வருவது உங்களுக்கு எப்படி இருக்கிறது!?அவனது தந்தை இல்லாத இடத்தை அவன் நிரப்புவதாக நான் நினைக்க வில்லை. எனது கஷ்டத்தில் அவனும் பங்கு பெறுகிறான் என்பதே எனக்கு ஆறுதலாக உள்ளது”. என்று அந்த ஏழை தாய் சொன்னபோது அனைவரும் அப்படியே அசந்து போனார்கள். எப்படி அவர்கள் வாழ்க்கையை அழகாகவும் சரியாகவும் பார்க்கிறார்கள் என்று நானும் அசந்துபோனேன். உடனே இதை குறித்து வைக்க வேண்டுமென  பதிந்து விட்டேன். நாளை பூவையார் ஒரு நல்ல பாடகராக வருவதற்கு  நல்ல இதயங்கள் வாய்ப்பு வழங்கட்டும்.


Comments

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...