Skip to main content

Posts

Showing posts from 2018

ஓர் ஆசிரியனாகக் கதை சொல்லும் பொறியாளரை வரவேற்கிறேன்.

        கரும்பலகைக் கதைகள் புத்தகத்திற்கு முன்னுரை                      -வேலுமாமா,புதுச்சே ரி            தி கட்டாத நினைவுகளின் அதிசயப்   பெட்டகம் குழந்தைப் பருவம் . நினைக்க   நினைக்கத் தித்திக்கும் . இப்பருவத்தின் கற்பனைகளாலேயே இந்த உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது . அதோடு வயதில் முதிர்ந்தவர் என்று உலகில் யாரிருக்கிறார் ? உண்மைதான் . வயதில் முதிர்ந்தவர் என்று தேடினால் யார் நம் முன்னே வருவார்கள் . அரிஸ்டாட்டிலா , கலிலீயோவா , , நியூட்டனா , புத்தரா , காந்தியடிகளா   யாரைச் சொல்வது . இன்று உலகின் மிகமிக வயது முதிர்ந்த ஜப்பானிய மூதாட்டி சியாமியாக்கோ(117வயது) கூட ஒரு பச்சிளம் சிறுமியாய்ச் சிரிக்கிறார் .                 உலகின் ஒப்பற்ற மனிதர்களை   நினைத்தாலே அவர்களின் கற்பனையும் ஆற்றலும் நிறைந்த அவர்களின் குழந்தைப் பருவமே முன்னெழுக...

தமிழ் மருத்துவ குணங்களை வெளிப்படுத்தும் பயனுள்ள பழமொழிகள்-V

தமிழ்  மருத்துவ குணங்களை வெளிப்படுத்தும் பயனுள்ள பழமொழிகள்-V 41. ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ 42. யாரும் இல்லாதவற்கு ஆவாரை இருக்கு 43. சாகாவரம் தருவதுதான் தாவரம் 44.வாயில் செரிக்காததா வயிற்றில் செரிக்கப் போகிறது                    45.ஊறுகாய் உடம்பை நாற வைக்கும் காய் 46.வெந்து கெட்டது முறுங்கைக் கீரை   வேகாமல் கெட்டது அகத்திக்கீரை 47. உழைப்பு உடல்நல கவசம் 48.அளவான உறக்கமே அமுத மருந்து   49.பூண்டுக்கு அஞ்சாத பூதம் ஏது? 50. உழைக்காத உடம்பு உளுத்துப்போன உலக்கை நன்றி : சுடரொளிக் கவிஞர்   அரியூர் மருத்துவர்   காசி பிச்சை         அவர்கள் எழுதிய காலை முதல் மாலை வரை          என்ற நூலிலிருந்து தொகுத்தவை இந்த ஐம்பது பழமொழிகள்

தமிழ் மருத்துவ குணங்களை வெளிப்படுத்தும் பயனுள்ள பழமொழிகள்-IV

தமிழ்   மருத்துவ குணங்களை வெளிப்படுத்தும் பயனுள்ள பழமொழிகள்-IV 31. சுக்கு நீரு தினமும் குடி    மூணாங்காலை முறிச்சு எறி 32. முறுங்கை முறுக்கேத்தும் 33. தாமரை இருக்க தவிப்பெதற்கு: ஆசன வாய்க்கு ஆகாயத் தாமரை 34 . கருவேலஞ்சாந்து மூலத்திற்கு சாந்தி 35. பூண்டு சுட்டு சாப்பிட்டா பூச்சி அத்து போகும் 36 . நாக்கும் மூக்கும் போச்சுன்னா நாழிகைக் கணக்குதான் 37 . பருத்த உடம்புக்கு பப்பாளிக்காய் 38. விந்து அடக்க வில்வம்   39. நொச்சி இலை தலையனை நோய்நொடிக்கு தடுப்பு அணை  40.மலச் சிக்கல்தான் பல சிக்கல்களுக்கு ஆணி வேர் 

தமிழ் மருத்துவ குணங்களை வெளிப்படுத்தும் பயனுள்ள பழமொழிகள்-III

தமிழ்   மருத்துவ குணங்களை வெளிப்படுத்தும் பயனுள்ள பழமொழிகள்-III                     21. அறிவை வளர்க்க அரசு, நோய் நொடி போக்க வேம்பு 22.வல்லாரை வல்லவனாக்கும் 23.மூங்கில் காட்டுக்குப் போனா மூலியும் மூலையில உட்கார்ந்து விடுவா 24.எழுத்தாணி பூண்டு எகிறி நிக்க வைக்கும் 25.நடுவீட்டுல நல்லெண்ண விளக்கு இரவு முழுவதும் இலுப்பைப் பூ எண்ணைய் விளக்கு 26.நல்லெண்ணை நரை விரட்டும் 27.மருதாணி மயிர் வளர்க்கும் 28.நொறுக்கு தீனி அயுசு குறுக்கி 29.குடியும் மடியும் ஒண்ணு 30.ஒழுங்கு ஊராளும்

தமிழ் மருத்துவ குணங்களை வெளிப்படுத்தும் பயனுள்ள பழமொழிகள்-II

தமிழ்   மருத்துவ குணங்களை வெளிப்படுத்தும் பயனுள்ள பழமொழிகள்-II 11 .   வாந்தி வந்தால் வரவேற்பு கொடு 12 .பேதி கண்டால் பீதி கொள்ளாதே 13 .வெட்டுப் பட்டால் வெட்டுக்காயப் பூண்டு: திட்டுப்பட்டால் குமட்டிக்காய் சாறு 14 .அறிந்ததையும் ஐந்து பேரிடம் கேள் 15 .நல்லது எல்லாம் நலிந்தே போய்விட்டது 16 .மடிப்புள்ளக் காரிக்கு மல்லிகைப் பூ எதுக்குடீ? 17 .மல்லிகைப் பூ மார்லபட்டா மழலைக்கு பாலேது 18 .வாட்டிய ஊமத்தை போக்கிடும் பால்கட்டை 19 .பூவரசம் பட்டை பிள்ளைப்பேறு எட்ட 20 .ஆம்பளைக்கு ஆலம் விழுது: ஆண்மைக்கு ஆலம் பழம் .

தமிழ் மருத்துவ குணங்களை வெளிப்படுத்தும் பயனுள்ள பழமொழிகள்-I

தமிழ்  மருத்துவ குணங்களை வெளிப்படுத்தும் பயனுள்ள பழமொழிகள்-I 1 . உண்ணும் உணவே மருந்து 2. சூரியனைப் பார்க்க எழுபவன் சுறுசுறுப்புக்காரன், சூரியன் பார்க்க எழுபவன் நோய்நொடிக்காரன் 3 .நாக்குக்குச் செல்லம் கொடுத்தால் நாசமாய் போய்விடுவாய் 4 .நொறுங்கச் சாப்பிட்டால் நூறு ஆயுசு 5 .அள்ளி அமுக்குனா அற்ப ஆயுசு 6 .குறைத்துச் சாப்பிட கூட ஆயுசு 7 .வயிறு முட்ட சாப்பிடால் வயிற்றாலைத்தான் போகும் 8.பசித்துப் புசி 9 .நொறுக்குத் தீனி ஆயுள் குறுக்கி 10 .சினைப்பட்ட மாட்டை சீந்துமோடா காளை , செரிப்பதற்கு முன்னாலே தின்பவன் மோளை

கரும்பலகைக் கதைகள் புத்தகத்திற்கு மு.பா அவர்களின் பாராட்டுரை

       அன்பு நண்பர் பொறியாளர் புதுச்சேரி் அன்பழகன் அவர்களின் கரும்பலகைக் கதைகள் சிறுவர்களுக்கான நூல் படித்தேன் .        மருத்துவராகவோ பொறியாளராகவோ வந்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு குழந்தைகளை கொடுமைப் படுத்தும் இந்த காலத்தில் அறிவை எவ்வாறு விளையாட்டாகப் பெறலாம் என்பதையும் அறிவியலை எப்படி ஆர்வத்தோடு எளிமையாக உரையாடல் மூலம் கற்கலாம் என்பதையும் நேர்த்தியான ஆசிரியர் மாணவர் உரையாடல் மூலம் கதையாக சொல்லியிருக்கிறார்          அன்பழகன் . மாணவர்கள் மத்தியில் ஒரு வினாவை எழுப்பி அவர்களுக்குள் தேடலை த ூண்டி விடைகளைப் பெறும் அற்புதமான முயற்சியை இவர் செய்திருக்கிறார் . உப்பிட்டவரை உள்ளளவும் நினை எனப் பழமொழி சொல்லும் அந்த உப்பின் தேவையை உப்பின் கதையை மிக நீண்ட தேடலின் மூலம் பிஞ்சு உள்ளங்களுக்கும் பெரியவர்களுக்கும் சொல்லியிருக்கிறார் .       துவைத்த துணி எப்படி காய்கிறது என்பதை எளிய சோதனை மூலம் உணர வைத்திருக்கிறார். ...