Skip to main content

ஓர் ஆசிரியனாகக் கதை சொல்லும் பொறியாளரை வரவேற்கிறேன்.



       கரும்பலகைக் கதைகள் புத்தகத்திற்கு முன்னுரை

                     -வேலுமாமா,புதுச்சேரி

           திகட்டாத நினைவுகளின் அதிசயப்  பெட்டகம் குழந்தைப் பருவம். நினைக்க  நினைக்கத் தித்திக்கும். இப்பருவத்தின் கற்பனைகளாலேயே இந்த உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது . அதோடு வயதில் முதிர்ந்தவர் என்று உலகில் யாரிருக்கிறார் ? உண்மைதான் .வயதில் முதிர்ந்தவர் என்று தேடினால் யார் நம் முன்னே வருவார்கள். அரிஸ்டாட்டிலா , கலிலீயோவா, , நியூட்டனா, புத்தரா , காந்தியடிகளா  யாரைச் சொல்வது .இன்று உலகின் மிகமிக வயது முதிர்ந்த ஜப்பானிய மூதாட்டி சியாமியாக்கோ(117வயது) கூட ஒரு பச்சிளம் சிறுமியாய்ச் சிரிக்கிறார் .


                உலகின் ஒப்பற்ற மனிதர்களை  நினைத்தாலே அவர்களின் கற்பனையும் ஆற்றலும் நிறைந்த அவர்களின் குழந்தைப் பருவமே முன்னெழுகிறது . அவர்கள் படைத்த அதிசயங்களின் இரகசியங்கள் அவர்கள் குழந்தைகளாய் இருந்த போதே உருவாகியிருக்கின்றன .

குழந்தைப் பருவ அட்டகாச அனுபவங்களை கல்வியோடு இணைத்துவிட்டால் உலகில் எண்ணிலா அதிசயங்கள் தோன்றும் எனும் பெருங்கனவில் திருவாளர் .அன்பழகன் "கரும்பலகைக் கதைகள்" எனும் கல்வியியல் கதைகளை எழுதியிருக்கிறார் .சிறுவர்களுக்கான கலை இலக்கியப்  படைப்புகளைத் தேடும் இந்நாளில் இந்நூல் ஒரு அறிவியல் பரிசு .

'பள்ளிதோறும் ஒரு கோமாளி வேண்டும்' என்று எண்ணும் என்னைப் போன்ற சிறுவர்கள் இக்கதைகளில் வரும் ஆசிரியர் மாணவர் சந்திப்புகளில்  'மகிழ்ச்சி ' எனும் அந்த அருமருந்தின் தேவையை உணரலாம் .

எண்கள் ,எழுத்துக்கள் ,வார்த்தை ,வாக்கியங்கள்  தொடங்கி மொழி ,வரலாறு ,கணிதம், அறிவியல் என கற்றலுக்கும் கற்பனைக்குமான  கதையாடலை எழுத  முற்படுகிறார்   .அன்பழகன் .

மருத்துவ எண் "99’’ - கிளிக்  செய்து உலகின் மிகப் பெரிய எண் "கூகோல்" என ஆரம்பமாகிறது  இக்கதைகள் . பேரீச்சம்பழக்  கொட்டைகளால் கட்டப்பட்ட  கோட்டைக்குள் புரண்டெழுந்து ஒரு தேர்ந்த ஆசிரியனாகப் பயணம்  செய்கிறார் இந்தப் பொறியாள எழுத்தாளர் .

'ரோபர்ட் ஸ்காட் ' என்ற  இராணுவத் தளபதியோடு பூமியின்  தென் துருவ  ஆராய்ச்சிக்குக்  செல்லும் 'அமுன்சென்' எனும் அறிவியலாளர்,  இரும்பையும் தகரத்தையும் துன்புறச் செய்யும்     'டின் பிளேக் 'நோயைக் காண்பது, குக்கிராம வீட்டு  மண்பானைகளில் நிரப்பப்பட்ட  லேசான கருமை படிந்த உப்பின் சுகம்தரும் வேதிவினையை கதையாக விவரிப்பது, சிலந்தி வலை மர்மத்தை அவிழ்ப்பது , சின்னச்சிறுவர் வாழ்வுக்குக் "கால அட்டவணை " தந்த மகாகவி பாரதி முண்டாசைக் கட்டிக் கொண்டு "தராசு" முன் அமர்ந்து  எது சரி? எது தவறு? என ஆராய்ச்சிக் செய்வது என எல்லாமே  சிறந்த பாடக்கதைகளாய் இருக்கின்றன

வாட்டியெடுக்கும் கல்விச்சந்தைகளுக்கு  நடுவே  சின்னச்சிறுவர்களின்  மனஉலகை அழகு படுத்த நினைக்கும் திரு .அன்பழகனின்  கதைகளை குழந்தைகளோடு  படித்தும் சொல்லியும்  பாராட்டலாம் .                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            
  அன்புடன்                                                                                                                                                                                                                                                                                                                     வேலுமாமா   புதுச்சேரி  

Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...