Skip to main content

Posts

கரும்பலகைக்கதைகள்-புதுச்சேரி அன்பழகன்

                                 முன்னுரை                            த.வி.வெங்கடேஸ்வரன்                          அறிவுத் தேடல் பயண நூல்      " உலகிலேயே பெரிய எண் எது ?” நமக்கு சளி இரும்மல் போன்ற தொற்றுநோய் ஏற்படுவது போல " உலோகங்களுக்கு தோற்றுநோய் பிடிக்குமா ?” என நாம் யோசிக்காத கோணங்களில் மாணவ மாணவியர் கேள்விகளை கேட்டுவிட " சும்மா இரு நீ என்ன ஐன்ஸ்டீன் என்ற நினைப்பா " என்று அவர்கள் வாயை மூடாமல் , அந்த சமயதில் தனக்கு இந்த கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றாலும் தேடி கண்டுபிடிக்கும் தனது அறிவு தேடலை தான் இந்த நூலில் பதிந்துள்ளார் ஆசிரியர் ச . அன்பழகன் . வெளிநாடுகளுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் சென்று பயண நூல் எழுதுவார்கள் . இந்த நூல் அறிவுத் தேடல் பயண நூல் .       தனக்கு விடைதெரியாத கேள்வியை ஒரு வகுப்பில் மாணவி ஒருவர் ...

குழந்தைகளுக்கான புத்தகம்

கரும்பலகைக்கதைகள் -  புதுச்சேரி அன்பழகன்   குழந்தைகளுக்கான புத்தகம்         புதுச்சேரி அன்பழகன் ஒரு பொறியாளர். குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி ஓர் ஆசிரியராக ஆச்சரியப்படுத்துகிறார்.  இந்தப் புத்தகத்தில் மொத்தம் பதினேழு குட்டிக்கதைகள் உள்ளன. மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள்தான் கதையின் நாயகர்கள்.        தொண்ணூற்றி ஒன்பது அ றுபத்தியாறு என நாம் திரும்பத் திரும்பச் சொன்னால் நமது நுரையீரல் நலமடைகிறது என்பது முதல் பதிமூன்று எனும் எண் மதவாதிகளால் ஆபத்தானதாகியது, பூச்சியத்தின் ஆற்றல் என விரிந்து ராபர்ட்ஸ்காட், அமுன்சென் என அறிவியல் பிறவிகளும் எடுக்கின்றன இவரது குடிக்கதைகள்.     உப்பு பற்றிய உரையாடலை நான் மிகவும் ரசித்தேன். மாணவர்கள் கொண்டாடிய சுதந்திர தினமும் மனதைக் கவர்ந்தது.    மதிப்பெண் போட்டியில் மழலைகளின் உள்ளத்து அழுகுரல் ஏன் கேட்பதில்லை என வினவும் அந்த பள்ளியைத் தொலைத்துவிட்டேன் கதை என மிகச்சிறப்பான கதைகளை குழந்தைகளுக்காய் தந்திருக்கிறார்.     அவரை வரவ...

மீன்கள் எதைச் சாப்பிடும்?.

மீன்கள் எதைச் சாப்பிடும்?. புதுச்சேரிக்கு அருகில் உள்ள வீராம்பட்டினம் கடற்கரைக்கு அடிக்கடி அவள் அப்பாவுடன் செல்வாள். கடல் அலையோடு எச்சரிக்கையாய் அப்பாவின் துணையோடு ஆசை தீரும்மட்டும் விளையாடி மகிழ்வாள். காலில் ஒட்டிய மணல் துகள்களைக் கூட தட்ட மனமில்லாமல் அப்படியே ஈரத்தோடு நடப்பாள். அவளின் தந்தை கரைக்கு வரும் படகுகளைப் பார்த்த வண்ணமிருப்பார். ஒவ்வொரு படகிலும் மீனவர்கள் வலையில் சிக்கிய மீனோடு கரைக்குத் திரும்புவார்கள். அவளுக்கோ வலையில் சிக்கிய மீன்களைவிட ,யாரும் கவனிக்காத சிப்பிகள், கிளிஞ்சள்கள் போன்ற சின்னச் சின்ன உயிர்ப்பொருட்களின் மீதுதான் கண் போகும். மீனவர்கள் வலையில் சிக்கிய மீன்களை எடுத்து கூடையில் அடுக்குவதிலேயே குறியாய் இருப்பார்கள். இந்த கடல் சிப்பிகள் போன்ற இதர உயிர்ப்பொருட்களை எடுத்து கீழேப் போட்டு விடுவார்கள். ஈரத்தோடு இருக்கின்ற கிளிஞ்சல்கள், சின்ன சங்குகள், சிப்பிகள், சோழிகள், நட்சத்திரமீன்கள் போன்றவற்றை எச்சரிக்கையோடு பார்த்துக்கொண்டிருப்பாள். அவசரபடாதம்மா! சிலது கையைக்கிழிச்சிடும், சிலது வி ஷ த் த ன்மையுடையதாகக் கூட இருக்கலாம் என அவளின் அப்பா எச்சரித்துக்கொண...

காடு ஒழுங்கற்றதா?

காடு ஒழுங்கற்றதா? பள்ளிக்கூடத்திற்கு ஒரு மணிநேரம் முன்னதாக வந்துவிடுவான் மணிநாத். உடனே பையை வைத்துவிட்டு விளையாட ஆரம்பித்துவிடுவான். அன்று அனால் அப்படி விளையாட முடியவில்லை. பள்ளியின் விளையாட்டு மைதானத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு இருந்தது. பாதுகாப்பிற்காக மரக்கன்றுகளைச் சுற்றி இரும்பு கூண்டு அமைத்திருந்தார்கள். அதன்மீது "காடழிந்தால் நாடே அழிவும் , மரம் வளர்ப்போம் " என்று எழுதப்பட்டிருந்தது. அப்பொழுதுதான் அவனின் தோழி சுவேதா ஒடி வந்தாள். மரம் வளர்த்தால் எப்படி காடாகும்? மாந்தோப்பு தென்னந்தோப்பு மாதிரி தோப்புதானே உருவாகும்? என்றாள். அப்ப தோப்பு காடாவாது என்கிறாயா? என சட்டென கேட்டான் மணிநாத். தோப்பு என்றால் ஒழுங்கமைந்து கானப்படும்! காடு அப்படியா? அது ஒழுங்கற்றதுதானே! என்றாள் சுவேதா. இப்படி உரையாடல் போய்க்கொண்டிருந்த போதுதான், கணக்கு ஆசிரியர் அறிவழகன் அவர்களை வகுப்பறைக்கு உள்ளே அழைத்தார். அவர்கள் வணக்கம் சொன்னபடியே உள்ளே வந்தனர். “ஏதோ விவாதம் போய்க்கொண்டிருந்ததே, என்ன அது” ஆவலோடு கேட்டார் ஆசிரியர் உடனே சுவேதா ஒரு சாக்பீசை எடுத்து கரும்பலகையில் கீழ்கண்ட...

வெளிர் மஞ்சள்

வெளிர் மஞ்சள் த மிழாசிரியர் சொன்னது மாதிரி ஆளூக்கொரு பூச்செடியை வளர்க்க முடிவு செய்து விட்டார்கள் மாணவ மாணவியர்கள். இதற்காக ஆளுக்கொரு மண் பூந்தொட்டியை வாங்கி விட்டார்கள். அதிகபடியான நீர் கசிந்து ஒடுவதற்கு பூந்தொட்டியின் அடியில் சிறு துவாரம் இருக்கிறதா என்று பார்த்து வாங்கினார்கள். கொஞ்சம் மண்புழு உரமும் மக்கிய தேங்காய்நாரும் சேர்த்து ஒன்றன் மேல் ஒன்றாக பூந்தொட்டியில் வைத்து அடைத்தார்கள். அவர்கள் அப்பகுதில் கிடைத்த ம ண்ணையும் தொட்டியில் கலந்து வைத்தார்கள். தேவையான அளவிற்கு நீர் ஊற்றி பதப்படுதினார்கள். வகுப்பிற்கு வெளியே மைதானத்தைச் சுற்றிலும் தொட்டிச் செடிகளை தகுந்த இடைவெளி விட்டு வைத்தார்கள். மாணவ மாணவியர்கள் சூரிய ஒளி நன்றாக படும்படி தங்கள் தொட்டியைச் சற்றே இடம் மாற்றி வைத்தார்கள்.       மாணவ மாணவியர்கள் தாங்கள் விரும்பிய செடிகளில் நாற்றை நட்டு வைத்தார்கள். காலையும் மாலையும் தவறாது செடிகளுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கவனமாக பார்த்துக் கொண்டார்கள். ஒவ்வொரு நாளும் மாணவ மாணவியர்கள் ஒய்வு கிடைக்கும் போதெல்லாம் வந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள்...