Skip to main content

வாழைப்பழக் கனவு

ன்று நிறைய வாழைப்பழங்கள் வாங்கி வந்திருந்தார் அப்பா . அதில் ஒரு வாழைப்பழத்தை எடுத்து உண்ண ஆரம்பித்தேன் . அதற்குள் எனது  அம்மா வந்துவிட்டார் .வாழைப்பழங்களைப் பார்த்தயுடன், “அய்யோ இந்த வாழைப்பழங்கள் நன்றாக பழுத்திருக்கிறதே!  நாளைக்கு வைத்தால் அழுகிவிடும்”   எனக்கூறி ,வாழைப்பழங்களை சிறிது சிறிதாக நறுக்க சொன்னாள்.
உடனே நான் வாழைப்பழத்தை எடுத்து  நறுக்க ஆரம்பித்தேன் .அப்போதுதான் நான் கவனித்தேன், வாழைப்பழத்தின் நடுவில் கரும்புள்ளிகள்  இருப்பதை. ஏன் நடுவில் கரும்புள்ளிகள் இருக்கின்றன  என அம்மாவிடம் கேட்டேன்  .மூன்றாம் வகுப்பு படிக்கின்ற உனக்கு இந்த ஆராட்சியெல்லாம் எதுக்கு? என கேட்டபடியே, நறுக்கிய வாழைப்பழ துண்டுகளின் தோலை நீக்கி பிசைய சொன்னாள். பின்னர் வெல்லமும் தேங்காய் துருவலும் போட்டு நன்றாக குழையும்படி கிண்டினாள். அப்புறம்  காய்ந்த திராட்சை , கல்கண்டுகளை மேலும் போட்டு கலந்து உண்ணும்படி சொன்னாள். இது பஞ்சமிருதம் போல இருக்கே  என்று சொல்லி சாப்பிட்டேன் .நெஞ்சிவரை இனித்தது .
மறுநாள் எனது அப்பா மார்கெட்டுக்கு  அழைத்து சென்றிந்தார் .அங்கே பழங்கள் விற்கின்ற கடை வழியே  சென்றோம் .நிறைய பேரிச்சம் பழ கொட்டைகள்  வழியில் கொட்டப்பட்டிருந்தன .இவ்வளவு கொட்டைகளா? எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது .அதற்கு பக்கத்து கடையில்தான் பேரீச்சம்பழத்தைக் கீறி கொட்டைகளை வெளியே எடுத்து போட்டபடியே  இருந்தனர் .ஏன் கொட்டைகளை எடுக்கிறார்கள் ?என்று அப்பாவிடம் கேட்டேன் .கொட்டைகளை நீக்கி வெறும் பழத்தை மட்டும் பேக் செய்து விற்பதற்காக என்றார் . அது சரிப்பா எல்லா பழத்திற்கும் கொட்டை இருக்குமா ? என்று கேட்டேன் .வந்த வேலையை முதலில் பார்ப்போம் .உனக்கு பதில் சொல்ல நேரமில்லை ,என் கூறி என்னை இழுத்துக் கொண்டு போனார் .பழங்கள் , காய்கறிகள் வாங்கிய பிறகு வீடு திரும்பினோம் .
அன்று இரவு வீட்டுப்படங்கள் முடித்து அம்மா பக்கத்தில் படுத்துக் கொண்டேன் .வாழைப்பழத்தின் கரும்புள்ளிகள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர சற்று நேரத்தில் தூங்கிவிட்டேன் .
ஒரு பெரிய வாழைத்தோப்பு ஓடிக்கொண்டேயிருக்கிறேன் நான் .வழியில்  ஒரு வாழைமரம் வாழைப்பழ குலை தாங்காமல் ஒடிந்து விழுந்துகிடந்தது .அந்த வாழை மரமோ அளவில் பெரிதாக இருந்தது .வாழைப்பழங்களும் பெரிது பெரிதாக இருந்தன . நன்றாக பழுத்து இருந்ததால் வாசனை ஆளைத் தூக்கியது .உடனே வேகமாக ஒரு வாழைப்பழத்தை எடுத்து கடித்தேன் .அவ்வளவுதான் பல்லு உடைந்து விடும்போல இருந்தது . தாங்க முடியாதவலி. பழத்தை நசுக்கிப்  பார்த்தால் உள்ளே  பேரீட்சசைபழக்  கோட்டையைப் போல கொட்டைகள் இருந்தன . இன்னொரு பழத்தை எடுத்து பார்த்தேன் .அதிலும் கொட்டைகள் இருந்தன .எனக்கோ ஆச்சர்யம்  தாங்க வில்லை , கொட்டைகளை எடுத்து நிறைய  வைத்துக் கொண்டேன் .
வாழைப்பழத்தோப்புல யாருடா திருட்டுப்பையன் ! அவனை பிடிடா! என்று யாரோ ஒருவர் ஓங்கி குரல் கொடுத்தபடியே என்னை விரட்டினார். நான் அம்மா என்று கத்த ஆரம்பித்தேன் .
சற்றே விழிப்பு வர எழுந்து உட்கார்ந்து கொண்டேன் .அம்மாவும் அப்பாவும் நன்றாக துங்கிக்கொண்டிருந்தனர். நான் கண்டது கனவுதான் என்றாலும் ஒரே படபடப்பாக இருந்தது .எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டேன் .
மறுநாள் காலை பள்ளிக்கு சென்றதும் எனது அறிவியல் ஆசிரியரைத் தேடினேன் .அவரோ என்னை பார்த்துவிட்டார் .உற்சாகமாக என்னை வா என்றுஎன்று அழைத்து அமரும்படி சொன்னார் . சார் ! எனக்கு ஒரு சந்தேகம். வாழைப்பழத்திற்கு ஏன் சார் விதையில்லை? என்று கேட்டேன் ஏன் இந்த சந்தேகம் என்றார் .நான் நடந்ததையெல்லாம்  ஒன்று விடாமல் மெதுவாக சொன்னேன் .
அவரோ அமைதியாக கேட்டபடியே ,யோசிக்க ஆரம்பித்துவிட்டார் .ஆம் உனது கேள்வி நியாயமானதுதான் .இப்படி யாரும் என்னை கேள்வி கேட்டதில்லை .உனது சிந்தனைக்கு முதலில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் .எனக்கோ சந்தோஷமாக இருந்தது .

ஒரு காலத்தில்  காட்டு வாழை மரத்தின் பழங்களில் விதைகள் இருந்தது உண்மைதான்  என்றார் . தற்போது நீ விதையில்லாத திராட்சை பழத்தை பார்த்திருக்கிறாய் அல்லவா?. இது அறிவியலாளர்கள் உருவாக்கியது . ஆனால்  வாழைமரத்தை பொறுத்தவரை, காலப்போக்கில் தற்செயலாக   நடந்த மாற்றத்தால் விதையில்லா வாழைமரம் உருவாகியது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். காட்டுவாழை  விதையில்லா வீட்டு வாழையாக இன்று நமக்கு உதவுகிறது. என்று ஆசிரியர் அன்பாக எடுத்து கூறி என்னை தெளிவுபடுத்தினார் . அவருக்கு நன்றி சொல்லி வகுப்பிற்கு புறப்பட்டேன் . எனக்கே என்மீது பெருமையாக இருந்தது .அலைமோதிய மனதும் அமைதியானது .

Comments

Popular posts from this blog

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்க...

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...

உலகத்தைப் படைத்தது யாரு?

நா ளை எவ்வாறு பாடத்தை எளிமையாக நடத்துவது என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அதுவும் உலகம் தோன்றியது எப்படி என்பதை நான் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். உலகம் தோன்றியது எப்படி என்று நான் சொல்லத்தொடங்கும் முன் , அது முன்பே படைக்கப்பட்டுவிட்டது என்ற பதில்தானே உடனே வரும்!?. அப்பொழுதுதான் என் மகள் ஓடி வந்து எனது சிந்தனையைக் கலைத்தாள். அப்பா! அப்பா! எங்கள் ஆசிரியர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க , பாடட்டுமா? என ஆவலோடு கேட்டாள். சரி! பாடு கேட்கலாம் என்றேன். உடனே அவள், நான்பாடும்போது நீங்களும் பாடனும்பா! என்றாள். நான் சரி என்று சொல்வதற்குள் அம்மாவும் அக்காவும் கூட பாடனுமென்றாள். அவர்கள் தயாராவதற்குள் பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டாள். அனைவரும் என்னோடு சேர்ந்து பாடவேண்டுமென சொல்லியபடியே பாடத்தொடங்கிவிட்டாள். “சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! சின்னச் சின்ன சிட்டுக்குருவியே! அழகாக படைத்தது யாரு! அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடிகிட்டு அழகாக படைத்தது ...