மா ஞ்சாலையில் இன்று நடந்து பார்க்கிறேன்!
கொளுத்தும் வெய்யிலில் ஒதுங்க நிழலின்றி வெறிச்சோடிக்கிடக்கும் மாஞ்சாலையில் இன்று நடந்து பார்க்கிறேன்
பழைய ஞாபகச் சுவடுகள் என் முன்னால் நடைபோடுகின்றன!
தாத்தா மாஞ்சாலையைக் குத்தகைக்கு எடுத்துவிட்டால் வீடெங்கும் மாம்பழவாசனைதான்!
மாங்காயின் காம்புகளிலிருந்து வெடித்துக்கிளம்பும் பாலின் எரிப்புவாசனை கூடவே சேர்ந்து வீசும்!
வீட்டுச்சுவரிலும் தரையிலும் கறைப் படிந்தபடியே இருக்கும்!
தாத்தாவின் வேட்டியும் பாட்டியின் புடவையும் கறைப் பட்டு பட்டு சாக்குப் போல மாறிவிடும்!
மாம்பழ சீசன் முடியும்வரை ஓயாத உழைப்புதான்.
வியாபாரிகள் வந்தபடியே இருப்பார்கள்!
குழம்பில் கரையாத கல்மாங்காயைக் கேட்டபடி பெண்கள் வந்தபடியே இருப்பார்கள்!
ஊரெங்கும் மாம்பழவாசனையும் பேச்சுமாகவே இருக்கும்.
கொட்டக்கச்சி,மாவுக்கா, ஆட்டுக்கறி மாங்கா, வாழைக்கா மாங்கா, ருமேனியா,கொட்டமாங்கா, பச்சரிச்சி மாங்காய், என வகை வகையாய் இளைஞர்கள் பெயர் வைத்தபடியே இ...