இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவு போல் தோன்றுகிறது. கோவிந்தன் ஆசிரியர் வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் பிறந்துவிட்டது. நாங்கள் பணிரெண்டுபேர் ஓர் ஆணியாக உருவாகியிருந்தோம். மிகவும் நோஞ்சானாகிய என்னிலிருந்துதான் இந்த புதிய அணியை ஆசிரியர் உருவாக்கியிருந்தார். என்னை “பழம்” என்றே கிண்டலாக அழைப்பார்கள். ஆனால் நோஞ்சானாக காட்சி அளித்தாலும், எனக்குள் இருக்குற மனவேகத்தை, சுறுசுறுப்பை அவர்தான் முதலில் புரிந்துகொண்டார். என்னுள் அன்பை விதைத்தார். எனக்குள் புதுதைரியம் புகுந்துகொண்டது.
ஆசிரியரும் நானும் மாலை நேரங்களில் மிதிவண்டியில் ஊர் சுற்றுவோம். அப்பொழுதுதான் புல் மண்டிகிடக்கும் கோட்டைமேடு அவர் கண்ணில் பட்டது. திருவிழாக்காலங்களில் மட்டுமே இந்த கோட்டைமேடு சுத்தமாகும். மற்ற நேரங்களில் புல்மண்டி கிடக்கும். பெண்கள் மாட்டுசானத்தை தட்டி காயவைக்கும் இடமாக இது இருந்தது.இந்த இடத்தை மைதானமாக மாற்றவேண்டுமென ஆசிரியர் விரும்பினார். என்னோடு ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து, இந்த இடத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி மெல்ல மெல்ல மைதானத்தை உருவாக்கினோம். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. மாணவர்களின் வளர்ச்சிக்கு இது பெறும் உதவியாக இருக்குமென ஆசிரியர் விளக்கியதும் , ஊராரின் எதிர்ப்பு மெல்ல மெல்ல மறைந்து போனது.
ஆசிரியர் எங்களுக்கு பூப்பந்தாட்டத்தை கற்றுக்கொடுத்தார். வெள்ளை பனியனும் கால்சட்டையும் அவரே வாங்கிக்கொடுத்தார். அவரும் எங்களோடு சேர்ந்து ஆடியது பெருமையாக இருந்தது. பூப்பந்தை அடித்து விளையாடும் மட்டையின் வலையைப் பின்னவும் கற்றுக் கொடுத்தார். ஊரிலும் பள்ளிக்கூடத்திலும் எங்களுக்கு மதிப்புக் கூடியது. குண்டும் கோட்டிப்புல்லும் விளையாடிய ஊர் இளைஞர்களூக்கு இத்தகைய விளையாட்டின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. இதனால் அவர்களும் ஓர் இடத்தை சுத்தம் செய்து கைப்பந்து விளையாட ஆரம்பித்தனர். ஆசிரியர் பெருமகிழ்ச்சி அடைந்தார்.
எங்களுக்குள் ஓர் அதிசயம் நடக்க ஆரம்பித்தது. முன்பெல்லாம் படிக்கும் போது மனதில் பாடம் பதிவாக அதிக நேரம் பிடிக்கும்; விரைவில் சோர்ந்து விடுவோம். தற்போது விளையாடிவிட்டு வீட்டிற்கு சென்றதும் படிக்க ஆரம்பித்தால் உடனடியாக பதிவதுடன், மனதிற்குள் அமைதிவும் மகிழ்ச்சியும் உண்டாவதை எங்களால் உணரமுடிந்தது. ஆசிரியரும் உதவுவதற்கு இருக்கிறார் என்ற எண்ணம் எங்களை மேலும் படிக்கத் தூண்டியது. இதனால் பள்ளியில் எங்களின் ரேங்க் முதல் பத்தை நெருங்கியது.பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் போனால் படிப்பு கெட்டுவிடுமென்ற ஒரு பகுதி ஊராரின் எண்ணமும் இதனால் தவிடுபொடியானது.
நோஞ்சானாகிய என்னைப் பொறுத்தவரை, நான் விளையாட விளையாட என்னுள் மாற்றம் ஏற்பட்டது. சரிவிகித உணவு குறித்தும், கிராமங்களில் கிடைக்கும் உணவு பொருட்களின் மருத்துவ குணங்கள் குறித்தும் ஆசிரியர் எங்களுக்கு சுட்டிக்காட்டியது பெரும் உதவியாக இருந்தது. அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஓர் ஆண்டிற்குள் என்னுடலின் சோவைத்தன்மை மெல்ல மறையத்தொடங்கியது. இளமை என்னுள்ளும் பூக்கத் தொடங்கியது.
விடுமுறை நாட்களில் அடுத்த ஊர்களுக்கு சென்று விளையாடுமளவிற்கு நாங்கள் தேர்ச்சிப்பெற்றிருந்தோம். அப்படித்தான் ஒரு நாள் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்துவிட்டேன். உடனடியாக ஆசிரியரும் மாணவர்களும் என்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நோஞ்சான் குழந்தைக்கு எதற்கு விளையாட்டு பயிற்சி தர வேண்டுமென , ஊரில் உள்ளவர்கள் ஆசிரியரை திட்ட ஆரம்பித்துவிட்டனர். ஆசிரியர் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை. என்னைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்தார். ஒரு வழியாக எனது நூரையீரலில் சளி அதிகமாகக் கட்டிக்கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர். ஒரு சிறிய அறுவைச்சிகிச்சையின் மூலம் சளி முழுமையாக எடுக்கப்பட்டது. இரண்டு வார ஓய்வுக்கு பிறகு வீடு திரும்பினேன். நான் மீண்டும் மைதானதில் விளையாட ஆரம்பித்தேன். தற்போது முன்னைவிட வேகமாக என்னால் விளையாட முடிகிறது. எனது உடலிலும் உள்ளத்திலும் உறுதி ஏறத் தொடங்கிவிட்டது. மாவட்ட அளவிலும் நாங்கள் விளையாடத்தொடங்கினோம். எனது ஆட்டத்திறமை அதிகரிக்கத் தொடங்கியதில், என்னையே கேப்டனாக நியமிக்கும் அளவிற்கு செல்வாக்கு அதிகரித்தது.
முதன்முறையாக எனது தலைமையில் மாவட்ட அளவில் விளையாடத்தொடங்கினோம். ஆசிரியரும் நானும் புதிய உத்திகளை வகுத்தோம். முதலில் தோற்றாலும் அடுத்த அடுத்த ஆட்டங்களில் வெற்றிப்பெற்றோம். வெற்றிக்கோப்பை எங்கள் அணிக்கு கிடைத்தது. ஊரே எங்களுக்கு விழா எடுத்தது. இந்த வெற்றிக்கோப்பையை எனது ஆசிரியருக்கு, ஊர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சமர்ப்பித்தேன். உடனே ஆசிரியர் ,“ நோஞ்சானாக காட்சி அளித்த இந்த சாதாரணமான இளைஞனிடமிருந்தே இந்த அணியை உருவாக்கினேன். இதில் அவர்கள் வெற்றியும் பெற்றுவிட்டார்கள். அதோடுமட்டுமல்ல, இந்த வெற்றிக் கோப்பை, இனி இந்த ஊருக்கே ஒரு புதிய அடையாளமாகிவிட்டது. இந்த ஊரின் இளைஞர்கள் மேலும் சாதிக்க வேண்டுமென்ற லட்சியத்தை இது உணர்த்திக்கொண்டேயிருக்கும். இதை என்னென்றும் ஒற்றுமையுடன் போற்றி வாருங்கள் ” என வாழ்த்தி பேச, கைதட்டல் ஓசை ஊரெங்கும் ஒலித்தது.
அனால் அடுத்த சில மாதங்களில் எங்கள் அருமை ஆசிரியருக்கு மாற்றல் உத்தரவு வந்தது. எங்களுக்கு ஒரே கவலையாக இருந்தது. ஊர் மக்கள் இதை தடுத்து நிறுத்த வேண்டுமென விரும்பினர். ஆனால் ஆசிரியர் மாற்றலாகி போவதையே விரும்பினார். யார் தடுத்தும் அவர் கேட்கவில்லை. இறுதியாக என்னை மட்டும் தனியாக அழைத்தார். உன்னைப் போன்ற பிள்ளைகள் அந்த ஊரிலும் இருப்பார்கள் அல்லவா! அவர்களுக்காக நான் அங்கு செல்கிறேன். இப்பொழுது நீங்கள் வளர்ந்து விட்டீர்கள். நிறைய படியுங்கள். அறிவியல் பார்வையோடு சிந்தியுங்கள். ‘இந்த ஊரை, இந்த நாட்டை வளமானதாக மாற்ற உங்களால் முடியும். இத்தகைய அன்பான வார்த்தைகளோடு, அந்த மறக்க முடியாத ஆசிரியர் எங்களிடம் நம்பிக்கையோடு விடைபெற்றுச் சென்றார். இப்பொழுது நினைத்தாலும் ஏதோ கனவுபோல் தோன்றுகிறது. .
ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை...
நல்ல உருக்கமான, உள்ளத்தைத் தொடும் பதிவு. ஆசிரியருக்கும் மாணவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
ReplyDeleteநல்ல பதிவு பாராட்டுகள்
ReplyDeleteமிக அருமையான பதிவு,கோவிந்தன் போன்ற ஆசிரியர்களால்தான் மற்றaasiriyar, ஆசிரியைகளுக்கும் பெருமை மாணவர்களும் பயன்பெறுகின்றனர்.ஆசிரியர் கோவிதனுக்கும் அவரை மறக்காமல் பதிவு செய்த மாணவருக்கும் பாராட்டுகl.
ReplyDeleteமதிப்பிற்குரிய கந்தசாமி ,ஞானகுமாரன் ,பெயர் சொல்லாத இனிய நண்பருக்கு இனிய வணக்கம் .எனது எளிய படைப்புக்கு உங்களின் அழகான விமர்சனத்திற்கு நன்றிகள் பல . உங்களின் அழகான விமர்சனம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது . தொடரந்து சிந்திப்போம் வாருங்கள் .நன்றி !
ReplyDelete