“கி ணறு காயும் வரை தண்ணீரைப் பற்றி சிந்திப்பதில்லை” என்பது பழமொழி. தற்போது பெரும்பாலான கிணறுகள், குளங்கள், ஏரிகள் என அனைத்தும் காய்ந்து போய்விட்டன. அதுமட்டுமல்ல , இவை அனைத்தும் வீட்டுமனைகளாக, பேருந்து நிறுத்துமிடங்களாக, விவசாய நிலங்களாக, இப்படி பலவகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டதில் நிலத்தடி நீர்மட்டமும் எட்டாத இடத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் தண்ணீரைப் பற்றி தீவிர மாக சிந்திக்காதவர்களாக நாம் இருக்கிறோம். மத்திய மாநில அரசுகள் இதை உணர்ந்திருந்தாலும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் இன்னும் தொடக்கத்திலேயே உள்ளன.எனவே நாம் தண்ணீரைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால்தான் ‘ ஜீவன் ’ உருப்பெருகிறது என்பார்கள். இருந்தாலும் தண்ணீரைத் தான் ‘ ஜீவன் ’ என முன்னோர்கள் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள். திருவானைக்காவிலில் நீர்த்தெய்வமே ஆதாரமாய் இருப்பதும், சிதம்பரம் கோவிலில் கங்கையும், யமுனையும் சிற்பமாய் இருப்பதும், ஆடிப்பெருக்கு, மகாமகங்கள், தெப்பல் திருவிழா போன்...