அன்று
மாணவர்களை நான்கு குழுக்களாக பிரித்து விளையாடுமாறு கூறியிருந்தேன் .மூன்று குழுக்கள்
மட்டும் விளையாடிக் கொண்டிருக்க , நான்காவது குழு விளையாடாமல் எதோ விவாதித்து கொண்டிருந்தனர்
. ஏன் நீங்கள் மட்டும் விளையாடவில்லை என்று கேட்டேன் . "சார் பதினைந்து பேர் கொண்ட
நான்கு குழுக்களாக பிரிந்து விளையாட ஆரம்பித்தோம் . இதில் எங்கள் குழுவுக்கு மட்டும்
யார் விளையாட்டை முதலில் துவக்குவது என போட்டி வந்துவிட்டது . உடனே நாங்கள் சீட்டு
குலுக்கி போட்டோம் . அதில் பதிமூன்று என்ற என் வந்தது . உடனே பதிமூன்று ஆபத்தான எண்
என கூறி, அந்த எண்ணுக்குரிய மாணவரை வெளியே அனுப்பிவிட்டோம் " என்றனர் .
ஆனால்
பிரச்சனை இதோடு முடியவில்லை "சார் உடனே வெளியே போனவனால் இதை ஏற்க முடியவில்லை
.எனவே அவன் எங்களிடம் , இப்போது உங்கள் குழுவில் பதினாலு பேர் இருக்கின்றனர் . இந்த
.பதினாலில் இன்னொரு பதிமூன்று உள்ளதல்லவா ? அவனையும் வெளியே அனுப்புங்கள் என்றான் .நாங்களும் வேறு வழி இன்றி மீண்டு சீட்டு குலுக்கி
போட்டு பதிமூன்று எண்ணுக்குரியவனை வெளியேற்றிவிட்டோம்.இப்பொது வெளியே இரண்டு பேராகிவிட்டனர்
.இந்த இரண்டு பேறும் சேர்ந்து கொண்டு தற்போது
உங்கள் குழு மொத்தம் பதிமூன்று பேராகிவிட்டிர்கள் .எனவே உங்கள் ஒட்டு மொத்தக்குழுவுமே
ஆபத்தானதா என கிண்டலடித்தனர் .
உடனே
நாங்கள் மீண்டும் யோசித்து சீட்டு குலுக்கிப்
போட்டு மேலும் ஒரு நபரை வெளியேற்றிவிட்டோம்.தற்போது எங்கள் குழுவின் எண்ணிக்கை
பனிரெண்டாகிவிட்டது .வெளியே உள்ள மாணவர்கள் எண்ணிக்கை மூன்றாகிவிட்டது .இப்பொழுது நல்ல
குழுவாக ஆகிவிட்டோம் என்று கூறி விளையாட ஆரம்பித்தால்,வெளியேறிய
மாணவர்கள் விடமாட்டோம் என்கிறார்கள் .நாங்கள் என்ன செய்வது சார் என அப்பாவித்தனமாக
கேட்டனர் .
பதிமூன்று
உங்கள் மனதில் இப்படி பதிந்து போனது கண்டு
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.எண்கள் என்பதே ஒரு தொடர் வரிசை தானே ! எந்த ஒரு எண்ணையும்
விலக்கி வைத்துவிட்டு நாம் கணக்கு போட முடியாது .அந்த வகையில் அணைத்து எண்களுமே மிக
முக்கியம் .இதில் உயர்வு தாழ்வு கிடையாது .இதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்
.மாணவர்களாகிய நீங்கள் முதலில் எதையும் சந்தேகிக்க வேண்டும் .பின்பு அறிவியல் பூர்வமாக
ஆராய வேண்டும் .ஏனென்றால் உண்மையில் நீங்கள் பதிமூன்றை விலக்கி வைக்கவில்லை .உங்கள்
குழுவில் உள்ள மாணவர்களைத்தான் விளக்கியுள்ளீர்கள் .இதனால் அவர்கள் மனம்தான் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது .எனவே இதுபோன்ற
மூடநம்பிக்கைகள் தயவு செய்து வேண்டாம் .
சரி சரி
நடந்ததை விடுங்கள் .முதன் முதலில் யாருக்கு பதிமூன்று விழுந்ததோ அந்த மாணவரே ஆட்டத்தை
துவக்கட்டும் .நீங்கள் நன்றாக மகிழ்ந்து விளையாடுங்கள் .ஆபத்து ஒன்றும் நேராது.நாளை வகுப்பில் சிந்திப்போம் என்று கூறி வந்துவிட்டேன் .
மறுநாள்
வகுப்பு பாடத்தை முடித்தபிறகு , மாணவர்கள் அனைவரும் ஒரே குரலில் கேட்டனர் .நேற்று நடந்ததை எங்களால் மறக்க முடியவில்லை சார் ! பத்திமூன்றுக்கு ஏன் சார் இந்த நிலைமை வந்தது ? என ஆவலோடு கேட்டனர்
அதற்கு
பல காரணங்கள் உள்ளன .இயேசு கிறிஸ்துவின் கடைசி விருந்தில் கலந்து கொண்டவர்கள் பதிமூன்று
பேர் என்பதால்தான் அதற்கு இத்தகைய சோகமுடிவு
நிகழ்ந்ததாக கூறுகிறார்கள் .அதேபோல் ஒரு பிரான்ஸ்
நாட்டு மன்னர் பதிமூன்றாம் தேதி ஒரு ஆணை பிறப்பித்தான்
.அதன்படி மதப்பழமை வாதத்திற்கு எதிராக செயல்படுபவர்களை தேடித் தேடி அழித்தான் . ஆனால்
அந்த மன்னனால் மீண்டும் பதவியேற்கவோ,அவனுடைய ஏராளமான சொத்துக்களை மீட்கவோ முடியவில்லை
.இதற்கும் இந்த பதிமூன்றாம் தேதி போட்ட உத்தரவுதான் காரணம் என்கிறார்கள் .சார் சார்
இதெல்லாம் நம்பும்படியாகவும் உள்ளதே என்ன செய்வது என்று கேட்டனர்.நானோ பதிலை பிறகு
சொல்கிறேன் இன்னொரு நார்வே நாடு கதையைக் கேளுங்கள்
என்றேன் .மாணவர்கள் தலையை ஆட்டி கேட்க ஆரம்பித்தனர்
கடவுளின்
விருந்து மாளிகையாகப் போற்றப்படும் , அத்தகைய உயர்ந்த அறையில் , அந்நாட்டில் கடவுளுக்கு
இணையாக மதிக்கப்படும் பெரிய மனிதர்களுக்கு விருந்து நடந்து கொண்டிருந்தது .அப்போது
லோகி எனும் தேவதை உள்ளே நுழைந்து , ஏற்கனவே பனிரெண்டுபேர் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க
,பதிமூன்றாவதாக இந்த லோகி தேவதை உள்ளே நுழைந்த
போது, அந்த விருந்திலிருந்த ஒளியும்,அமைதியும் நிறைந்த பால்டர் தேவதை திடீரென இறந்து
போனாள்.இதுவும் இது போன்ற பதிமூன்றால் வந்தது என்றால் நம்ப முடிகிறதா ? மாணவர்களே
!
இது போன்ற
பல கதைகள் உள்ளன .ஆனால் நாம் என்ன புரிந்து
கொள்ள வேண்டுமென்றால் , இச்சம்பவங்கள் யாவும் பெரிய மனிதர்கள் வாழ்வில் நடந்ததாக உள்ளன
.உண்மையில் இது போன்ற சம்பவங்கள் நடக்க வில்லையென்றாலும் அல்லது இட்டுக்கட்டி சொல்லப்பட்டாலும் , சாதாரண மக்களை பாதிக்கவே செய்வும்
.ஒரு கெட்ட சம்பவம் நடந்து விட்டால் , அதுபோல நமக்கும் நடந்து விடுமோ என்ற அச்சம் மனதில் எழுந்து விடுகிறது .இந்த அச்சம்தான்
இதுநாள்வரை இந்த பதிமூன்று மூலம் வளம் வந்து கொண்டிருக்கிறது .
எனவே
மாணவர்களே! ஒரு கெட்ட சம்பவம் நடந்துவிட்டால்
அதுபோலவே பல சம்பவங்கள் அனைவருக்கும் தொடரும் என நம்புவதற்கு அறிவியல் ரீதியாக உதாரணம்
ஏதும் இல்லை .எனவே அச்சத்தை நாம் தவிர்க்க வேண்டும் .”அச்சம் தவிர் ” என புதிய ஆத்திச்சூடி
எழுதிய பாரதியின் வரியே இதற்கு நல்ல பதிலாக வருகிறது .எனவே அச்சம் தவிர்த்து அறிவியல்
ரீதியாக சிந்தித்தால் உண்மை விளங்கும் , என்ன மாணவர்களே சரிதானே! நாளை பார்க்கலாம், என்று வகுப்பை முடித்து வெளியே வந்தேன் . மனதிற்கு
நிம்மதியாக இருந்தது .
Comments
Post a Comment