Skip to main content

Posts

நீ யார் பக்கம்?

ஓங்கி குரலெழுப்புகிறாய் அதிகாரமற்றவனோ வறியவனோ உன்னிடத்தில் சிக்கும்போது ஓங்கி குரலெழுப்புகிறாய் உனது வார்த்தைகள் அவனை வெட்டி வீழ்த்தி சமாதி ஆக்குகின்றன‌ நீ இப்படி ஓங்கி குரலெழுப்ப‌ எப்படி கற்றுக் கொண்டாய் என்று உனக்கு தெரியுமோ என்னவோ ஆனால்........... நானும் கற்றுக் கொண்டேன் ஓங்கி குரலெழுப்ப................ வறுமையற்ற‌ ஓர் உலகத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் ஓங்கி குரலெழுப்ப‌ நானும் கற்றுக் கொண்டேன் இப்பொழுது நீ தெரிந்திருப்பாய் நீ யார் என்று உனது வார்த்தைகள் யாருடையதென்று?

எது பெரிய எண்?

எது பெரிய எண்? மூ ன்றாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் இரண்டு மாணவர்கள் ஒருவருக்கொருவர் தலையில் குட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். நான் சற்றே கூர்ந்து கவனித்தேன். அவர்களில் ஒரு மாணவன், "நான் இந்த காலாண்டுத் தேர்வுக்கு இருபது கேள்விக்கு பதில் படித்து வைத்துள்ளேன். இந்த இருபது கேள்வியும் கண்டிப்பாக வரும்" என்று சொல்ல , சகமாணவியோ, "அதெப்படி சரியா சொல்ற? அப்படியெல்லாம் வராது" என்று எதிர்வாதம் செய்தாள். உடனே "அப்படி வந்தால் உனக்கு நூறு குட்டு" என்றான் அந்த மாணவன். அவளோ " கண்டிப்பாக வராது" எனக்கூறி `உனக்கு ஆயிரம் கொட்டு` என்றாள். இப்படி இவர்கள் மாறி மாறி கூறிக் கொண்டே வந்தனர். இறுதியில் " இந்த உலகத்திலேயே எது பெரிய எண்ணோ அவ்வளவு குட்டு" என்றான். அவளோ, ஆப்படி என்றால் அது போல் பத்து மடங்கு உனக்கு குட்டு என்றாள். இப்படியாக போய்க் கொண்டே இருந்தது. சரி! சரி! `நமது ஆட்டத்தை நிறுத்துவோம்` என்று சொல்லி " உண்மையிலேயே உலகில் பெரிய எண் எது? என்று அவர்களுக்குள் கேட்டுக் கொண்டனர். பிறகு இருவரும் யோ...

யார் அந்த இளைஞன் ?

யார் அந்த இளைஞன்? நான் எனது ஆசிரியரின் அலோசனையோடு புத்தகங்கள் , இணையதளம் மற்றும் இன்றைக்கும் நாட்டிற்காக பாடுபட்டு கொண்டிருக்கும் தலைவர்களிடம், நமது நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தேசத்தலைவர்களைப் பற்றி தகவல்களைத் தேடிக்கொண்டிருந்தேன்.அப்படி ஒருநாள் இணையதளத்தில் தேடியபோது, ஓர் இளைஞன் வேகத்தோடு நீதிமன்றத்தின் உச்சியில் பறந்த வெள்ளைக்காரனின் கொடியை இறக்கிவிட்டு நமது தாய்நாட்டின் மூவர்ணக்கொடியை துணிச்சலாக ஏற்றியச் செய்தியைப் படித்தபோது எனக்குள்ளும் ஒரு வேகம் வந்து அப்படியே எழுந்து உட்கார்ந்து விட்டேன். பகத்சிங் நினைவு நாளை நாடெங்கும் தெரியப்படுத்துவதற்காகவும், வெள்ளைக்காரர்களுக்கு ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் வெள்ளைக்காரனின் கொடிய இறக்கிவிட்டு நமது மூவர்ணக்கொடிய ஏற்றவேண்டும் என்பது காங்கிரஸ்காரர்களின் திட்டம். ஆனால் அன்றைக்கு ஆங்கிலேய கவர்னர் அங்கு வருவதாக இருந்ததால் திட்டமிட்டபடி கொடியேற்ற முடியவில்லை.ஆனால் இந்த இளைஞனோ ஏன் கொடியை எற்றவில்லை என்று கேட்டப்படியே துணிச்சலாக நீதிமன்றத்தில் ஏறி கொடியை ஏற்றிவிட்டார். இராணுவம் சுதாரித்துக்கொண்டு சுட ஆரம்பித்துவிட்டனர். இவரோ கொடிமேடையில் ...