இந்திய விஞ்ஞானி அன்னாம ணி “ப த்தாயிரம் கருத்துகளைவிட ஒரு சோதனை செய்து பார்ப்பது மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்” , இதையே எப்பொழுதும் தன்னோடு பணிபுரிபவர்களுக்கு விஞ்ஞானி அன்னாமணி சொல்லிக்கொண்டே இருப்பார். தனது வாழ்வின் பெரும்பகுதியை புனேயில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையத்திலேயே செலவிட்டார். அவரின் பணி ஓய்வுக்கு பிறகு இராமன் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த மையத்தோடு இணைந்து இந்திய அறிவியல் அமைப்பில் வெப்ப மண்டல வானியல் ஆராய்ச்சியை தனது இறுதிநாள் வரை மேற்கொண்டார். இங்கு இந்திய நாட்டின் சூரிய கதிர்வீச்சுஆற்றல் மற்றும் காற்றின் ஆற்றல் வளமை குறித்து ஆய்வை மேற்கொண்டார். இந்த இரண்டு ஆற்றல்கள் குறித்த அவரின் ஆய்வுத் தரவுகளே இன்றும் மின்உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது. அன்னாமணி கேரள மாநிலத்தில் எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பீர்மேடு என்னும் ஊரில் 1918-ல் ஆகஸ்டு மாதம் 23-ஆம் நாள் பிறந்தார். அவரின் தந்தையார் திருவனந்தபுரம் பொதுப்பணித்துறையில் பொறியாளராகவும், அவரின் தாயார் ஆசிரியராகவும் பணியாற்றிவந்தனர். ஐந்து ஆண்பிள்ளைகளும் மூன்று பெண...