தத்துவம் என்பது...... நகைச்சுவை துணுக்கா.. வாழ்வின் தெறிப்பா... எது தத்துவம்? அ ன்று வீட்டுப்பாட நோட்டுகளை ஆசிரியர் திருத்திக்கொண்டிருந்தார். எல்லோரும் ஒரே பதிலை எழுதி இருந்தாலும் கையெழுத்துகளின் அசைவுகளில் அவர் மனம் சென்றது. சில மாணவ மாணவியர்களின் கையெழுத்தைப் பார்க்கும் போது மிகவும் விரும்பி ரசித்தார். அச்சு பிரதிகளைப் பார்க்கும் போது அவருக்கு தோன்றுவதில்லை. அந்த நினைப்பில் அழ்ந்தபடியே அடுத்த நோட்டை எடுத்தார் ஆசிரியர். அது நமது பள்ளிக்கூட நோட்டுப்போல இல்லை. எந்த மாணவனோ இந்த நோட்டை அவசரத்தில் மாற்றி வைத்திருக்க வேண்டும். சரி இந்த மாணவனின் கையெழுத்து எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்று நோட்டை திருப்பினார். கையெழுத்து அவரை ஈர்க்கவில்லை. ஆனால் ஜே .கே தத்துவங்கள் என்று ஒரு பக...