அன்றைய பாடத்தை வழக்கமாக நடத்தி முடித்தாலும் வகுப்பறையில் மாணவன் கண்ணப்பன் இல்லாதது அவருக்கு வெறுமையாக தோன்றியது. சக மாணவர்களை அழைத்து விசாரித்தார். இன்றைக்கு கண்ணப்பன் ஏன் வரவில்லை என்றார் ?! “ சார்! அதை ஏன்சார் கேட்கறீங்க! அவன் மீண்டும் கிரிக்கெட் பார்த்து பரவசப்பட்டுப் போய் கைதட்டி , மீண்டும் விழுந்து விட்டான் சார்! அதனால் ஏற்கனவே இடது முழங்கால் எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டிருந்தது அல்லவா! அந்த இடத்திலேயே மீண்டும் முறிவு ஏற்பட்டுள்ளது சார்! இதனால் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் சார்!” என்றனர் மாணவர்கள். சரி நீங்க வகுப்புக்கு போங்க , நான் போய் கண்ணப்பணைப் பார்க்கிறேன் என்றார் ஆசிரியர். ஆசிரியருக்கு கண்ணப்பன் ஞாபகமே வந்து வந்து போனது. கண்ணப்பன் நன்றாக படிக்கக்கூடியவன். அவன் அறிவியல் ரீதியாக கேள்வி கேட்பதிலும் வல்லவன். அதே நேரத்தில் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவன். குறிப்பாக கிரிக்கட்டில் அ...