காடு ஒழுங்கற்றதா? பள்ளிக்கூடத்திற்கு ஒரு மணிநேரம் முன்னதாக வந்துவிடுவான் மணிநாத். உடனே பையை வைத்துவிட்டு விளையாட ஆரம்பித்துவிடுவான். அன்று அனால் அப்படி விளையாட முடியவில்லை. பள்ளியின் விளையாட்டு மைதானத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு இருந்தது. பாதுகாப்பிற்காக மரக்கன்றுகளைச் சுற்றி இரும்பு கூண்டு அமைத்திருந்தார்கள். அதன்மீது "காடழிந்தால் நாடே அழிவும் , மரம் வளர்ப்போம் " என்று எழுதப்பட்டிருந்தது. அப்பொழுதுதான் அவனின் தோழி சுவேதா ஒடி வந்தாள். மரம் வளர்த்தால் எப்படி காடாகும்? மாந்தோப்பு தென்னந்தோப்பு மாதிரி தோப்புதானே உருவாகும்? என்றாள். அப்ப தோப்பு காடாவாது என்கிறாயா? என சட்டென கேட்டான் மணிநாத். தோப்பு என்றால் ஒழுங்கமைந்து கானப்படும்! காடு அப்படியா? அது ஒழுங்கற்றதுதானே! என்றாள் சுவேதா. இப்படி உரையாடல் போய்க்கொண்டிருந்த போதுதான், கணக்கு ஆசிரியர் அறிவழகன் அவர்களை வகுப்பறைக்கு உள்ளே அழைத்தார். அவர்கள் வணக்கம் சொன்னபடியே உள்ளே வந்தனர். “ஏதோ விவாதம் போய்க்கொண்டிருந்ததே, என்ன அது” ஆவலோடு கேட்டார் ஆசிரியர் உடனே சுவேதா ஒரு சாக்பீசை எடுத்து கரும்பலகையில் கீழ்கண்ட...