அ ன்று நிறைய வாழைப்பழங்கள் வாங்கி வந்திருந்தார் அப்பா . அதில் ஒரு வாழைப்பழத்தை எடுத்து உண்ண ஆரம்பித்தேன் . அதற்குள் எனது அம்மா வந்துவிட்டார் . வாழைப்பழங்களைப் பார்த்தயுடன் , “ அய்யோ இந்த வாழைப்பழங்கள் நன்றாக பழுத்திருக்கிறதே! நாளைக்கு வைத்தால் அழுகிவிடும்” எனக்கூறி , வாழைப்பழங்களை சிறிது சிறிதாக நறுக்க சொன்னாள் . உடனே நான் வாழைப்பழத்தை எடுத்து நறுக்க ஆரம்பித்தேன் . அப்போதுதான் நான் கவனித்தேன் , வாழைப்பழத்தின் நடுவில் கரும்புள்ளிகள் இருப்பதை . ஏன் நடுவில் கரும்புள்ளிகள் இருக்கின்றன என அம்மாவிடம் கேட்டேன் . மூன்றாம் வகுப்பு படிக்கின்ற உனக்கு இந்த ஆராட்சியெல்லாம் எதுக்கு ? என கேட்டபடியே , நறுக்கிய வாழைப்பழ துண்டுகளின் தோலை நீக்கி பிசைய சொன்னாள் . பின்னர் வெல்லமும் தேங்காய் துருவலும் போட்டு நன்றாக குழையும்படி கிண்டினாள் . அப்புறம் காய்ந்த திராட்சை , கல்கண்டுகளை மேலும் போட்டு கலந்து உண்ணும்படி சொன்னாள் . இது பஞ்சமிருதம் போல இருக்கே என்று சொல்லி சாப்...