Skip to main content

Posts

Showing posts from April, 2018

பதிமூன்று பயமுறுத்துமா?

அன்று மாணவர்களை நான்கு குழுக்களாக பிரித்து விளையாடுமாறு கூறியிருந்தேன் .மூன்று குழுக்கள் மட்டும் விளையாடிக் கொண்டிருக்க , நான்காவது குழு விளையாடாமல் எதோ விவாதித்து கொண்டிருந்தனர் . ஏன் நீங்கள் மட்டும் விளையாடவில்லை என்று கேட்டேன் . "சார் பதினைந்து பேர் கொண்ட நான்கு குழுக்களாக பிரிந்து விளையாட ஆரம்பித்தோம் . இதில் எங்கள் குழுவுக்கு மட்டும் யார் விளையாட்டை முதலில் துவக்குவது என போட்டி வந்துவிட்டது . உடனே நாங்கள் சீட்டு குலுக்கி போட்டோம் . அதில் பதிமூன்று என்ற என் வந்தது . உடனே பதிமூன்று ஆபத்தான எண் என கூறி, அந்த எண்ணுக்குரிய மாணவரை வெளியே அனுப்பிவிட்டோம் " என்றனர் . ஆனால் பிரச்சனை இதோடு முடியவில்லை "சார் உடனே வெளியே போனவனால் இதை ஏற்க முடியவில்லை .எனவே அவன் எங்களிடம் , இப்போது உங்கள் குழுவில் பதினாலு பேர் இருக்கின்றனர் . இந்த .பதினாலில் இன்னொரு பதிமூன்று உள்ளதல்லவா ? அவனையும் வெளியே அனுப்புங்கள் என்றான்  .நாங்களும் வேறு வழி இன்றி மீண்டு சீட்டு குலுக்கி போட்டு பதிமூன்று எண்ணுக்குரியவனை வெளியேற்றிவிட்டோம்.இப்பொது வெளியே இரண்டு பேராகிவிட்டனர் .இந்த இரண்டு பேறும் சேர்...