பா ர்த்தும் பேசியும் பரவசப்பட்டுப்போன எங்கள் நெஞ்சில் வலி!
நெறிகெட்டுப்போன உங்களால் நெஞ்சில் வலி நெறிகட்டிக்கொண்டிருக்கிறது!
தாய்நாட்டிற்காக ஆடச்சொன்னால் இப்படி , தரகுக்கு ஆடிவிட்டீர்களே!
நீங்கள் பேட்ஸ்மேன்களா? அல்லது பகடைக்காய்களா?
விக்கெட்டுக்களை வீழ்த்திய நீங்கள் உங்களை நீங்களே வீழ்த்திக்கொண்டது விசித்திரம்தான்!
எல்லாவற்றையும் மாட்டிக்கொண்டு களத்தில் இறங்கிய நீஙகள் இதயத்தை மட்டும் எங்கே கழற்றி வைத்தீர்கள்!
நீங்கள் பெவிலியனுக்கு திரும்பும் போதெல்லாம் நாங்கள் வருத்தப்படுவோம் ஆனால், நீங்கள் மகிழ்ந்திருப்பீர்கள் என்று இப்போதுதான் தெரிகிறது!
உங்கள் ரன்களை வாசித்தறிந்த ரசிகர்கள் உங்கள் , ரணங்களை வாசிக்கிறார்கள்! உங்கள் விக்கெட்டுக்களை வாசித்தறிந்த ரசிகர்கள் உங்களை நீங்களே விற்றுக்கொண்டதை வாசிக்கிறார்கள்!
கடைசி ஓவரில் இதயம் துடிதுடிக்க நீங்கள் ஆடினீர்களோ என்னவோ நாங்கள் இதயம் துடிதுடிக்கத்தான் பார்த்துக்கொண்டிருந்தோம்!
ஆனால் , ரசிகர்கள் சிலர் கடைசி ஓவரின் கடைசி பந்தில...