Skip to main content

இன்னொரு மாஞ்சாலை வேண்டாமா?

மாஞ்சாலையில்

இன்று

நடந்து பார்க்கிறேன்!


கொளுத்தும் வெய்யிலில்

ஒதுங்க நிழலின்றி

வெறிச்சோடிக்கிடக்கும்

மாஞ்சாலையில்

இன்று

நடந்து பார்க்கிறேன்


பழைய ஞாபகச் சுவடுகள்

என் முன்னால் நடைபோடுகின்றன!


தாத்தா மாஞ்சாலையைக்

குத்தகைக்கு எடுத்துவிட்டால்

வீடெங்கும் மாம்பழவாசனைதான்!


மாங்காயின் காம்புகளிலிருந்து

வெடித்துக்கிளம்பும்

பாலின் எரிப்புவாசனை

கூடவே சேர்ந்து வீசும்!


வீட்டுச்சுவரிலும் தரையிலும்

கறைப் படிந்தபடியே இருக்கும்!


தாத்தாவின் வேட்டியும்

பாட்டியின் புடவையும்

கறைப் பட்டு பட்டு

சாக்குப் போல மாறிவிடும்!


மாம்பழ சீசன் முடியும்வரை

ஓயாத உழைப்புதான்.


வியாபாரிகள் வந்தபடியே

இருப்பார்கள்!


குழம்பில் கரையாத

கல்மாங்காயைக் கேட்டபடி

பெண்கள் வந்தபடியே

இருப்பார்கள்!


ஊரெங்கும் மாம்பழவாசனையும்

பேச்சுமாகவே இருக்கும்.


கொட்டக்கச்சி,மாவுக்கா,

ஆட்டுக்கறி மாங்கா,

வாழைக்கா மாங்கா,

ருமேனியா,கொட்டமாங்கா,

பச்சரிச்சி மாங்காய்,

என வகை வகையாய்

இளைஞர்கள் பெயர்

வைத்தபடியே இருப்பார்கள்!


அனில்கடித்த பழம் பொறுக்க

சிறுவர்கள் மாஞ்சாலையைச்

சுற்றியபடியே இருப்பார்கள்!


மாங்காய் ஊருகாய் போட

முற்றிய மாங்காய்களை

உறவுப்பெயர் சொல்லி

பெண்கள்

கேட்டப்படியே இருப்பார்கள்!


மாங்காய் பச்சடியோடு,

மாங்காய்-தேங்காய் ஊருகாய்

அரைத்து வைத்தால்

பழையதும் சுடுசோறும்

தானாக இறங்கும்!


இப்படி ஊரின்

வாழ்வோடு கலந்திட்ட

மாஞ்சாலை இன்றில்லை!


மாஞ்சாலையில்

இன்று

நடந்து பார்க்கிறேன்.


பழமூட்டைகளை

வண்டிகட்டி

பாண்டியில் விற்றது

கனவு போல் தோன்றுகிறது


கூத்தியாவீட்டுக்கு

மாம்பழமூட்டைப்போவதாக

பாட்டி சண்டைப் போட்டது

ஞாபகத்திற்கு வருகிறது!


மாம்பழங்களை கல்வீசி

திருடித் தின்றதும்

ஞாபகத்திற்கு வருகிறது!


சூரிய ஒளி

தரையில் படாத

அந்த மாஞ்சாலை இன்றில்லை!


மா, புளி மரங்களை

மீண்டும் நட்டு வளர்க்க

ஏன் தோன்றவில்லை எவர்க்கும்?


பெயர் மட்டும்

மாஞ்சாலை

என்றிருந்தால் போதுமா?


நம் பிள்ளைகளுக்கு

இந்த கவிதை மட்டும் போதுமா?

இன்னொரு மாஞ்சாலை

வேண்டாமா?

Comments

Popular posts from this blog

பள்ளிக்கூடத்தைத்தொலைத்துவிட்டேன்.

ப ள்ளிக்கூடம் திறந்த முதல்நாள் , மாணவர்கள் மகிழ்வோடு புதிய சீருடையில் வந்திருந்தனர் . அவரவர் வகுப்புகளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர் . சில மாணவர்கள் தமது பழைய வகுப்பறையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு , தத்தமது புதிய வகுப்பறையை நோக்கி சென்றனர் . மாணவர்கள் முகத்தில் மலர்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது . இந்த கண்கொள்ளாக்காட்சியை ரசித்தப் படியே ஆசிரியராகிய நான் எனது வகுப்பறைக்குச் சென்றேன் . ஒரு மாணவன் தேம்பி! தேம்பி! அழுதுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த மாணவர்கள் எனக்கு வணக்கம் சொல்லியபடியே ஓடி அமர்ந்தனர். நான் அந்த மாணவனிடம் , ஏன் அழறிங்க ! ஏங்கிட்டச் சொல்லுங்க! என்றேன். நான்! நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்! என்றவன் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அமைதியாக இருங்கள்! என்றபடியே , “ என்ன! ஸ்கூல தொலைச்சிட்டீங்களா! அதுசரி, உங்க பேரென்ன? என்றேன். ஏன் பேரு நிலவழகன்!. ஓ உங்க பேரு நிலவழகனா! ரொம்ப அழகான பேராச்சே! எந்த வகுப்பு படிக்கிறிங்க? என்றவுடன் மீண்டும் அழ அரம்பித்துவிட்டான். நான் உடனே அவனை

வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு

  வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு இ ராபர்ட்   ஐந்தாம் வகுப்பில் புதியதாக வந்து சேர்ந்திருந்தான் . பார்ப்பதற்கு வெள்ளைக்காரரைப் போல சிவப்பாக இருந்தான் . யார் வகுப்பிற்கு வந்தாலும் அவனையே விசாரித்தார்கள் . வகுப்பறையைத் தாண்டி பள்ளி முழுவதுமே அவனையே   வியப்பாக   பார்த்தார்கள் .   இ ராபர்ட் வந்ததிலிருந்து இ ராமு தன் நிறத்தையே அடிக்கடிப் பார்த்துக்கொண்டான் . கருப்பாகவும் இல்லை . வெள்ளையாகவும் இல்லை . இரண்டு நிறமும் கலந்த மாதிரி இருந்தது . நாம் ஏன் சிகப்பாக பிறக்க வில்லை என்று தனக்குள் கேட்டுக்கொண்டான் . சிவப்பாக இருந்தால் ஏன் இப்படி மதிப்பாக பார்க்கிறார்கள்   என்பதை   ராமுவால் புரிந்துகொள்ள   முடியவில்லை . இ ராமு தன் நண்பர்களிடம் அடிக்கடி இது பற்றி கேட்டான் . அதெல்லாம் ஒன்னுமில்லடா , நம்ம கண்ணுக்குத் தான் அப்படி அழகா தெரியுது ! நீ நல்லா படித்து முதல் ரேங்க் எடுத்தா அப்புறம் உன்னைப்பற்றியே எல்லோரும் பேசுவார்கள் . ராமுவுக்கு இது சரி என்று பட்டாலும் . மனம் மட்டும் கேட்பதாக இல்லை . என்ன செய்வதென்று யோசிக்கத்தொ

ஆப்பிள் பாடம்

    ஆப்பிள் பாடம்      ஒவ்வொரு நாளும் அந்த பழக்கடையைப்   பார்த்துக்கொண்டெ பள்ளிக்கு செல்வது ஆசிரியருக்கு வழக்கம். பள்ளிக்கு செல்லும்போது அவர் பழம் வாங்கியதில்லை. வீட்டிற்கு செல்லும்போது, அன்று எந்த பழம் விலை குறைவோ அதை வாங்கிக்கொண்டு செல்வது அவரின் வழக்கம். இந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சத்தாண உணவு எடுத்து வந்து உண்பதில்லை. அதிலும் குறிப்பாக பழங்கள் எடுத்துவந்து     சாப்பிடுவதை ஆசிரியர் பார்த்ததேயில்லை. இன்றைக்கு     ஊட்டச்சத்து குறித்து பாடம் நடத்த வேண்டும். வெறும் கையோடு செல்ல     மனம் வரவில்லை. மாணவ மாணவியற்கு தலா பாதிப் பழமாவது தரலாம் என கணக்கிட்டு தேவையான அளவு ஆப்பிள்களை ஆசிரியர் வாங்கிக்கொண்டார்.      ஊட்டச்சத்து குறித்த பாடத்தை நடத்திவிட்டு , அவர் வாங்கிவந்த ஆப்பிள்களை எடுத்து பாதியாக நறுக்க ஆரம்பித்தார். மாணவ மாணவியர்கள் ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆசிரியர்  யாருக்கு பழம் அரிகிறார்! யாருக்கு தரப்போகிறார்! என ஆவலோடு தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அந்த நேரம் பார்த்து தலைமை ஆசிரியர் அவரை அழைப்பதாகச் சொல்ல, மாணவ மாணவியரிடம் ஆளுக்கு