Skip to main content

Posts

Showing posts from December, 2010

வாழ்வில் வள்ளுவம்!

நீ யோ வாழ்வை ஆய்ந்தாய்ந்து கவிச்சுவைபட முடிவுரை எழுதிவிட்டாய்! நாங்களோ! விளக்கவுரை எழுதிக்கொண்டே இருக்கிறோம் இன்னும் முடியவே இல்லை! உன் குறள் சுளையைச் சுவைக்கச் சுவைக்க சுவைகூடும் அற்புதம்! இது இருவரி கவிதையென சொல்லமுடியவில்லை! உலகின் இருகரை இணைத்தக் கவிதை! இது உன் தத்துவரயில் பாய்ந்தோட நீ போட்ட இருப்புப்பாதை! உன் கவிஎஞ்சினை பிடிக்க யாருமில்லை! உன்னைப்போல் ஓடிப்பார்க்கிறோம்! இல்லையில்லை, உன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்! உலகக்கவியே! உழவன்தான் உலகத்தின் அச்சாணி என்றாய்! இன்றோ, அவனை அலட்சியப்படுத்தியே ஆட்சி நடக்கிறது! பயிரிட்ட நிலத்திற்கு தன் உயிரிட்டு சாகிறான் தினம்! தினம்! எரு இன்றி பயிர்செய்ய வழி சொன்னாய்! கடனின்றி பயிர் செய்ய வழி சொன்னாயா? சோம்பி இருப்பவரை நில மங்கை நகுவாள் என்றாய்! இன்றும் நகுகிறாள், ஒதுங்கி இருக்கும் அரசைக் கண்டு! வறுமைக்கு வறுமையே கேடு என்றாய்! இன்றோ! வறுமையை வளர்க்கும் வறுமையே வளர்ச்சி என்கிறார்கள்! மனம் வருந்தித் தேடாமல்

கவிதையாய் ஒரு குடிசை

இ டித்துப் போட மனசில்லை வளர்ந்து ஆளாக இடம் தந்த மண் குடிசையை! நாங்கள் வளர்ந்த கதையை நாங்களே தித்திப்பாய்ச் சொல்லிக்கொள்ள ஒவ்வொரு முறையும் வாய்ப்பளிக்கிறது! நினைவில் படிந்துகிடக்கும் ஒவ்வொரு அடுக்கும் நெகிழ்ந்து மேலெழும்புகிறது! குழந்தை பருவத்திற்கு கீழிறங்கவும் வாலிப பருவத்திற்கு மேலேறவுமான நினைவுகளில் தத்தளிக்கிறது மனசு! திருட்டுத்தனமாய் நடந்த விசயங்களை இப்பொழுது அம்பலபடுத்தி மகிழ முடிகிறது! தரை மொழிகிக்கொண்டே சகல இன்ப துன்பங்களை பேசி மகிழ்ந்த நாட்கள் பூரித்து பொங்குகிறது! மனசை பூசி மொழுக முடிவதில்லை வாய்ப்பு கிடைக்கும் பொழுது வெடித்துக் கிளம்புகிறது! எங்களுக்கென்று மச்சுவீடு, குழந்தை குட்டிகளென தனித்தனியாக ஆகிவிட்டாலும் இந்த மண்குடிசையை களைத்துப்போட எங்களால் இயலவில்லை! அம்பிகா-சண்முகம் தம்பதிகளின் ஐந்து பெண் பிள்ளைகளும் ஒரே ஆண் பிள்ளையுமான ஒரு பெருங்குடும்பமே வாழ இடம்தந்த இந்த மண்குடிசையை காலம் சிதைத்தாலும் கவிதைக்கெல்லாம் கவிதையாய் எங்கள் நெஞ்சாங் கூட்டுக்குள் வாழ

நமக்கு எட்டாத குழந்தைகளின் உலகம்

பத்திரிக்கைக்கு எனது மகள் வரைந்த படத்தை அனுப்பிவைத்தேன். எனது மகளின் படத்தோடு பெயரும் அழகாய் வந்திருந்தது. ஆசையோடு எனது மகளை அழைத்து காட்டினேன். சற்றே மகிழ்ந்தவளின் முகம் பட்டென சுருங்கியது. பக்கத்து வீட்டு தோழியின் பெயரையும் எனது பெயரோடு சேர்த்து ஏன் போடவில்லை என அழ ஆரம்பித்துவிட்டாள். நான் சமாதானப்படுத்தியபடியே சிந்திக்க ஆரம்பித்திவிட்டேன். உறவுச் சிறகுகளை விரித்து பறந்தபடியே இருக்கும் குழந்தைகளின் பரந்த உலகை எண்ணி வியந்தேன். நாம் குழந்தைகளின் உலகத்தை தொலைத்து விட்டு வெறுமனே வாழ்வதாக எனக்கு பட்டது.

இது ஜீரோ நேரம்

எங்கள் பள்ளியில் சக ஆசிரியர்களுடன் சேர்ந்து நானும் மாணவர்களுக்கு விடுமுறைக் காலத்திற்கென சிறப்புத் தேர்வுகளை நடத்துவதுண்டு. ஆனால் இந்தத் தேர்வுகள் மாணவர்களுக்கு பிடித்தமானவை. ஒன்றிரண்டு கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். தயங்காமல் எந்த பதில் எழுதினாலும் நிச்சயம் பாராட்டு உண்டு. சரியான விடையை மாணவர்கள் தேடி கண்டுபிடிக்க வேண்டும். விடுமுறை கழித்து பள்ளி வரும்போது தமக்கு தெரிந்த பதிலோடு அச்சமின்றி வருவார்கள். அனைவரும் கலந்து பேசுவார்கள். எங்களுக்கு அவர்கள் பதிலை தொகுத்து வழங்குவதுதான் வேலையாக இருக்கும். அன்றும் அப்படிதான் மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தினேன். முதல் கேள்வி, “ஒன்றை ஜீரோவால் வகுத்தால் வரும் விடை யாது? இரண்டாவது கேள்வி, “ஜீரோவை ஜீரோவால் வகுத்தால் வரும் விடை யாது? ஒருவர் விடாமல் அனைவரும் விடை எழுதியது மகிழ்ச்சியாக இருந்தது. ஜீரோவை ஜீரோவால் வகுத்தால் விடை ஜீரோ என்று சிலரும், ஒன்று என சிலரும் எழுதியிருந்தார்கள். இரண்டு மாணவர்கள் மட்டும் விடை தெறியவில்லை என்று எழுதியிருந்தார்கள். அனைவரையும் பாராட்டினேன். குறிப்பாக விடை தெரியவில்லை என்று தைரியமாக நேர்மையாக எழுதிய அந்த மாணவர்களை