Skip to main content

Posts

Showing posts from June, 2010

புதுச்சேரிக்கு தண்ணீர் பஞ்சம் வருமா?

“கி ணறு காயும் வரை தண்ணீரைப் பற்றி சிந்திப்பதில்லை” என்பது பழமொழி. தற்போது பெரும்பாலான கிணறுகள், குளங்கள், ஏரிகள் என அனைத்தும் காய்ந்து போய்விட்டன. அதுமட்டுமல்ல , இவை அனைத்தும் வீட்டுமனைகளாக, பேருந்து நிறுத்துமிடங்களாக, விவசாய நிலங்களாக, இப்படி பலவகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டதில் நிலத்தடி நீர்மட்டமும் எட்டாத இடத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் தண்ணீரைப் பற்றி தீவிர மாக சிந்திக்காதவர்களாக நாம் இருக்கிறோம். மத்திய மாநில அரசுகள் இதை உணர்ந்திருந்தாலும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் இன்னும் தொடக்கத்திலேயே உள்ளன.எனவே நாம் தண்ணீரைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால்தான் ‘ ஜீவன் ’ உருப்பெருகிறது என்பார்கள். இருந்தாலும் தண்ணீரைத் தான் ‘ ஜீவன் ’ என முன்னோர்கள் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள். திருவானைக்காவிலில் நீர்த்தெய்வமே ஆதாரமாய் இருப்பதும், சிதம்பரம் கோவிலில் கங்கையும், யமுனையும் சிற்பமாய் இருப்பதும், ஆடிப்பெருக்கு, மகாமகங்கள், தெப்பல் திருவிழா போன்

தண்ணீரைத் தேடி….

தண்ணீரைத் தேடி…. ப ள்ளியின் நூலகத்தில் தண்ணீர் சம்மந்தமான நூல்களைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் அந்த மாணவன் வணக்கம் சொல்லியபடியே , புத்தகம் ஏதாவது கிடைத்ததா சார்! என் ஆவலோடுக் கேட்டான். வா சேர்ந்து தேடுவோம் நிச்சயம் கிடைக்கும் என்றேன். உலக தண்ணீர் தினத்திற்கான கட்டுரைப் போட்டியில் நிச்சயம் நான் வெற்றி பெறனும் சார்! என்றான். நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்! என வாழ்த்தினேன். ஆனால் இதற்காக நாம் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்.! என்ற படியே புத்தகங்களைத் தேடினேன். தேடித்தேடி நாங்கள் களைத்துப் போனோம். தண்ணீர் சம்மந்தமான அறிவியல் விளக்கங்கள் உள்ள புத்தகங்களே அதிகம் இருந்தன. இன்றைக்கு இதைவிடவும் வேறு சிந்தனை தேவை இருப்பதாக எனக்கு பட்டது. இதற்கான விடை நூலகத்தில் மட்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல குறையத்தொடங்கியது. இதுவரை தேடிய நூல்களே போதும், “வா! சற்றே வெளியே சென்று வருவோம்” என அந்த மாணவனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன். “சுத்தமான தண்ணீர் அருந்த வேண்டுமென விரும்புகிற நாம், தண்ணீரை மதித்து போற்றி பாதுகாக்க துணிந்திருக்கிறோமா? என்ப

காற்றோடு வந்த செய்தி

எ னது ஊர் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தேன் . என்ன காரணமென்று தெரியவில்லை , பேருந்துவர அதிக நேரமாகுமென்று சக பயணிகள் பேசிக்கொண்டார்கள் . அதுவரையில் என்ன செய்வது என்று யோசிக்கையில் , யாரோ ஒருவர் பேசிக்கொண்டிருப்பது ஓலிப்பெருக்கியின் வழியாக என் காதுகளுக்கு எட்டியது . நான் கூர்ந்து அவர் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தேன் . நல்ல தெளிவான குரல் . வார்த்தைகள் தன்னம்பிக்கையோடு தைரியமாக வந்து விழுந்து கொண்டிருந்தன . அந்த இனிமையான குரலை கேட்டுகொண்டேயிருக்க வேண்டுமென ஆவல் பிறந்தது . அப்போதுதான் தெரிந்தது அது ஒரு அரசியல் கட்சியின் கூட்டமென்று . அவர் சொன்ன செய்தி எனக்கு வியப்பாகவும் வித்தியாசமாகவும் இருந்தது . எங்கள் பகுதியில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தால் , இலவசமாக வேட்டி , சேலை , சர்க்கரை , குடை , நோட்டுபுத்தகம் , ஊன்முற்றோர்க்கான மிதிவண்டி , வீட்டு உபயோகப்பொருட்கள் போன்றவைகளை கட்சியின் தலைவர்கள் தன்சொந்த செலவில் கட்சியின் அடிமட்ட ஊழியர்களுக்கும் , அவர்கள் சார்ந்த ஆதரவாளர்களுக்கும் வாரி வழங்குவார்கள்

நீ யார் பக்கம்?

ஓங்கி குரலெழுப்புகிறாய் அதிகாரமற்றவனோ வறியவனோ உன்னிடத்தில் சிக்கும்போது ஓங்கி குரலெழுப்புகிறாய் உனது வார்த்தைகள் அவனை வெட்டி வீழ்த்தி சமாதி ஆக்குகின்றன‌ நீ இப்படி ஓங்கி குரலெழுப்ப‌ எப்படி கற்றுக் கொண்டாய் என்று உனக்கு தெரியுமோ என்னவோ ஆனால்........... நானும் கற்றுக் கொண்டேன் ஓங்கி குரலெழுப்ப................ வறுமையற்ற‌ ஓர் உலகத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் ஓங்கி குரலெழுப்ப‌ நானும் கற்றுக் கொண்டேன் இப்பொழுது நீ தெரிந்திருப்பாய் நீ யார் என்று உனது வார்த்தைகள் யாருடையதென்று?

எது பெரிய எண்?

எது பெரிய எண்? மூ ன்றாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் இரண்டு மாணவர்கள் ஒருவருக்கொருவர் தலையில் குட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். நான் சற்றே கூர்ந்து கவனித்தேன். அவர்களில் ஒரு மாணவன், "நான் இந்த காலாண்டுத் தேர்வுக்கு இருபது கேள்விக்கு பதில் படித்து வைத்துள்ளேன். இந்த இருபது கேள்வியும் கண்டிப்பாக வரும்" என்று சொல்ல , சகமாணவியோ, "அதெப்படி சரியா சொல்ற? அப்படியெல்லாம் வராது" என்று எதிர்வாதம் செய்தாள். உடனே "அப்படி வந்தால் உனக்கு நூறு குட்டு" என்றான் அந்த மாணவன். அவளோ " கண்டிப்பாக வராது" எனக்கூறி `உனக்கு ஆயிரம் கொட்டு` என்றாள். இப்படி இவர்கள் மாறி மாறி கூறிக் கொண்டே வந்தனர். இறுதியில் " இந்த உலகத்திலேயே எது பெரிய எண்ணோ அவ்வளவு குட்டு" என்றான். அவளோ, ஆப்படி என்றால் அது போல் பத்து மடங்கு உனக்கு குட்டு என்றாள். இப்படியாக போய்க் கொண்டே இருந்தது. சரி! சரி! `நமது ஆட்டத்தை நிறுத்துவோம்` என்று சொல்லி " உண்மையிலேயே உலகில் பெரிய எண் எது? என்று அவர்களுக்குள் கேட்டுக் கொண்டனர். பிறகு இருவரும் யோ

யார் அந்த இளைஞன் ?

யார் அந்த இளைஞன்? நான் எனது ஆசிரியரின் அலோசனையோடு புத்தகங்கள் , இணையதளம் மற்றும் இன்றைக்கும் நாட்டிற்காக பாடுபட்டு கொண்டிருக்கும் தலைவர்களிடம், நமது நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தேசத்தலைவர்களைப் பற்றி தகவல்களைத் தேடிக்கொண்டிருந்தேன்.அப்படி ஒருநாள் இணையதளத்தில் தேடியபோது, ஓர் இளைஞன் வேகத்தோடு நீதிமன்றத்தின் உச்சியில் பறந்த வெள்ளைக்காரனின் கொடியை இறக்கிவிட்டு நமது தாய்நாட்டின் மூவர்ணக்கொடியை துணிச்சலாக ஏற்றியச் செய்தியைப் படித்தபோது எனக்குள்ளும் ஒரு வேகம் வந்து அப்படியே எழுந்து உட்கார்ந்து விட்டேன். பகத்சிங் நினைவு நாளை நாடெங்கும் தெரியப்படுத்துவதற்காகவும், வெள்ளைக்காரர்களுக்கு ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் வெள்ளைக்காரனின் கொடிய இறக்கிவிட்டு நமது மூவர்ணக்கொடிய ஏற்றவேண்டும் என்பது காங்கிரஸ்காரர்களின் திட்டம். ஆனால் அன்றைக்கு ஆங்கிலேய கவர்னர் அங்கு வருவதாக இருந்ததால் திட்டமிட்டபடி கொடியேற்ற முடியவில்லை.ஆனால் இந்த இளைஞனோ ஏன் கொடியை எற்றவில்லை என்று கேட்டப்படியே துணிச்சலாக நீதிமன்றத்தில் ஏறி கொடியை ஏற்றிவிட்டார். இராணுவம் சுதாரித்துக்கொண்டு சுட ஆரம்பித்துவிட்டனர். இவரோ கொடிமேடையில்